வெள்ளியங்கிரி மலை (மலை ஏற்றம் 9.3.2026)
அமைவிடம்
கோயமுத்தூரில் அமைந்துள்ளது, வெள்ளியங்கிரி மலை. இந்தயிடம் பூண்டி என்ற அழைக்கப்படுகிறது. ஏழாவது மலையில் சிவபெருமான் காட்சி தருகிறார்.
வெள்ளியங்கிரி சிறப்புகள்
மணோன்மணி சமேத பஞ்சலிங்கேஸ்வரராக இறைவன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தென் கைலாயம் என்று அழைக்கப்படுகிறது இந்தயிடம். இந்த லிங்கம் பஞ்சபூதங்களையும் தன்னகத்தே அடக்கிய பஞ்சபூததலமாக விளங்குகிறது. அம்பிகையின் விருப்திற்கிணங்க சிவபெருமான் இந்த வெள்ளியம்பதியில் நடனமாடியதாக கூறப்படுகிறது.
கோவில்பற்றிய அடிப்படை செய்திகள்.
கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரத்தில் அமைந்துள்ள மலைக்கோவில். (5800 என்றும் 6000 என்றும் கூறுகின்றனர்) ஆண்டு தோறும் சிவராத்திரி அன்று பக்தர்கள் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டு. சித்திரை மாதம் பௌர்ணமி அன்றுடன், கோவில் தரிசன அனுமதி முடிவுபெறுகிறது. இன்று வரை (2026) ஆம் ஆண்டு வரை இந்த மலையேற்றத்தில் பக்தர்கள் நடந்தே ஏழு மலைகளையும் கடந்து சாமி தரிசனம் செய்கின்றனர். வடநாடு போன்று குதிரை, டோலி, ஹெலிகாப்படர் வசதிகள் இந்த மலைக் கோவிலுக்கு கிடையாது.
உடல் தகுதி.
உடல் வலிமையும் மனவலிமையும் ஒருங்கே பெற்றவர்கள் மட்டுமே இந்த வெள்ளியங்கிரிஆண்டவரை தரிசனம் செய்ய வருகின்றனர். பெருமம்பாலும் இளைஞர்களே இந்த மலை ஏற்றத்திற்கு வருகின்றனர். பெண்களில் மிக சொற்பமானவர்களே தரிசனத்திற்கு வருகின்றனர்.
எங்கள் மலைஏற்றம் விரிவாக.
நாங்கள் 9.3.2026 அன்று திங்கட்கிழமையை, தரிசனநாளாக தேர்வுசெய்தோம். (வேலைநாள் என்றும் சோமவார தரிசனம் சிவனுக்கு உகந்தது). பகல்பொழுது நல்லது என்றும் சிலர் இரவு பொழுது நல்லது என்றும் கருத்துதெரிவித்தனர். நாங்கள் குறிப்பாக “தழிழ்அஞ்சல்” பத்திரிக்கை உரியாளர் மற்றும் டிராவலர் உரிமையாளர் திரு. மணிகண்டனின் அறிவுரையையே முன்நிறுத்தி எங்களின் மலை ஏற்றத்தை தொடர்ந்தோம்.
முதல்மலை
அதிகாலை 4.30 மணிக்கு மலையேற தொடங்கினோம். சுத்தமாக விளக்கு வெளிச்சம் கிடையாது. டாரச்;லைட்தான் பயன்படுத்தவேண்டும். என்கணவர் கைபேசி டார்ச் உதவியுடன் 5 படி ஏறுவார். புpன்னர் அவர்காட்டும் ஒளியில் நான் ஏறுவேன் .இவ்வாறாக ஒன்றரை மணிநேரம் கடத்தினோம். முதல் மலையை இரண்டரை மணிநேரத்தில் நாங்கள் கடந்தோம். பொதுவாக இணையத்தில் இந்த 7 மலைலை ஏற்றத்திற்கு 6 மணிநேரம் என்ற ஒரு கணக்கிட்டிருந்தனர். என் கணவர் அவர் ஏறுவதற்கு 10 மணிநேரம் என்று அவர் தகுதிக்கு ஏற்றவாறு கணக்கிட்டிருந்தார். ஆனால் நான் ஏறுவதற்;கு, 14 மணிநேரம் ஆனது. காலை 4.30 மணிக்கு ஏற ஆரம்பித்த எனக்கு மாலை 6.30 க்கு மேல்தான் ஏழாவது மலையை கடந்து மாலை7 மணிக்கு சாமிதரிசனம் செய்தேன். முதல் மலை மிக கடினமாகயிருந்தது.
இரண்டாவது மலை
இந்த மலை சற்று எளிமையாகயிருப்பதாக நான் உணர்ந்தேன். படியும் சற்று சமதளமும்யிருந்தது காரணமாகயிருக்கலாம்.
வழுக்குபாறை
பாறையில் சற்று படி போன்று செதுக்கி வைத்திருந்தனர். பார்பதற்கு எளிமையாகயிருந்தாலும், மிகவும் கவனமாக ஏறவேண்டியிருந்தது.
மூன்றாவது மலை
மிககடினமாக உணர்ந்தேன். முதல்மலையில் சற்று படி போன்ற அமைப்பிருந்தது. ஆனால் மூன்றாவது மலையியல் அவ்வாறில்லை. உயரம்வேறு அதிகமாகயிருந்ததால், என் கை மற்றும் கால் முட்டியை பயன்படுத்தி ஏறினேன்.
நான்காவதுமலை
நான் மூன்றாவது மலைக்கு சலைத்தவன்ணில்லை என்று கூறியது. என்யியலாமையை உணர்ந்தேன். பயம், சலிப்பு, கோபம், அழுகை, துக்கம் என்று பலவற்றையும் உணர்ந்தேன். திரு. மணிகண்டன் (19முறை வெள்ளியங்கிரி மலைஏரியவர்) மேடம் எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கையை மற்றும் இழந்துவிடாதீர்கள் என்று எனக்கு அனுப்பிய குரல் பதிவு என் காதில் ஒலித்து சற்று நம்பிக்கையை உண்டு செய்தது.
ஐந்தாவது மலை
முழுவதும் சமதளம் தான். இயற்கையை நன்கு ரசிக்க செய்தது. எங்களது பஞ்சகேதார் பயணத்தில் நாங்க சென்ற ருத்ரநாத் என்ற இடத்தை இந்த சூழல்நினைவூட்டியது.
ஆறாவது மலை
இந்த மலையிலிருந்து ஏழாவது மலை நன்கு தெரிந்தது. ஆனால் இரண்டிற்க்கும்யிடையில் உள்ள பள்ளத்தாக்கு என்னை மிரளவைத்தது. இதுவரை அமைதியாகயிருந்த என் கணவர், தைரியமாகயிரு, நாம் சிவனை தரிசனம் செய்துவிடலாம் என்ற எனக்கு நம்பிக்கையூட்டினார்.
மலையில் உள்ள சுனை.
ஆறாவது மலையயிலிருந்துயிறங்கி இந்த சுனையை தாண்டி ஏழுhவதுமலைக்கு ஏற வேண்டும். இந்த சுனையில் நாங்கள்ளிருவரும் சற்று நேரம் நீரில் கால்வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தோம். முகம் கைகால் கழுவிகொண்டதில் எங்களின் களைப்பு ஓடிசென்று புத்துணர்ச்சி கிடைத்தது. என்கணவர் பெருபாலும் குளிக்க விரும்புவார். ஆனால் தண்ணீர் மிகவும் சில்லென்றுயிருந்ததாலும். நாங்கள் இரவு மலையில் தங்குவது என்று முடிவெடுத்ததாலும், குளிக்கவில்லை.
ஏழாவது மலை.
உடலில் கிடைத்த புத்துணவில் நான் ஏழாவது மலை ஏறும் கடினத்தை உணரவில்லை. சற்ற நேரத்தில் நாங்கலிருவரும் தனியாக செல்வதை உணர்ந்தேன். சற்று அச்சம் ஏற்பட்டது எனக்கு. அங்கு வந்த இளைஞர்களிடம் உதவியை நாடினேன். அதில் இருவர் என்னுடைய இரண்டு கையையும் பிடித்துக்கொண்டு, (தூக்கி செல்லாத குறையாக) என்னை ஏற்றி (இழுத்து கொண்டு) இறைசன்னதிக்கு கொண்டு சென்றனர். இறைவனை தரிசித்தவுடன் எனக்கு அழுகைதான் வந்தது. (காரணம் இதுவரை எனக்க புரியவில்லை.)
மிக கடினமான இரவு பொழுது
5000 அடி உயரம் வெட்டவெளி எப்படியிருக்கும் என்பதை நாம் அனைவராலும் ஒரளவுக்கு உணரமுடியும். தேவாரம், திருவாசகம் ஓதி உடுக்ககை அடித்து வழிபாடுகள் அனைத்தும் சிறப்புற நிறைவு பெற்றது. ஆனால் இரவு ஒருமணிநேரத்திறக்கு ஒரு முறை வழிபாடு நடந்து கொண்டேதான்யிருந்தது. எங்களால் கீழேயிறங்கமுடியாது. குறிப்பாக என்னால் முடியவே முடியாது. மையிருட்டுவேறு. நாங்கள் அங்கேயேயிருப்பதாக முடிவெடுத்தோம். எட்டு மணிக்குமேல் எங்கள்யிருவரை தவிர யாருமேயில்லை. பயம் இதை முழுமையாக உணர்ந்தேன். இரண்டு மணிநேரம் தான். பின்னர் பக்தர்கள் வந்துகொண்டேயிருந்தனர். வழிபாட்டிற்கு பிறகு சென்று கொண்டேயிருந்தனர். மனிதநடமாட்டம்மிருந்தது சற்று நம்பிக்கையை கொடுத்தது. ஆனால் குளிர்தான் தாங்கமுடியவில்லை. வெட்டவெளியில் மண்தரையில் படுத்துகொண்டு, நான் என் துப்பட்டாவையும், என்கணவர் அவரின் வேஷ்டியையும் போர்திகொண்டு படுத்துவிட்டோம்.
முதல்நாள் உணவு
காலை இரண்டு இட்லி, மதியம் எலுமிச்சை சாதம், இரவு இரண்டுஇட்லி. (வீட்டில்லிருந்து கொண்டுவந்தது) மலையில் எங்கும் உணவுகூடம் கிடையாது. சுக்கு காப்பி, வெள்ளரி, மாங்காய், கூழ், மோர், சிலதிண்பண்டங்கள் மற்றும் கடலை மிட்டாய் மட்டுமே கிடைக்கும். குறிப்பாக காப்பி மற்றும் டீ கிடையாது.
நாள் இரண்டு
செவ்வாய்கிழமை காலை 4 மணிக்கே உடல் மற்றும் மனதை தயார்செய்துகொண்டுவிட்டேன், இறங்குவதற்;கு. என் கணவர் அவசரபடாதே சூரியஒளி நன்கு வந்தபிறகு இறங்கலாம் என்று கூறினார். மீண்டும் ஒருமுறை வழிபாடு செய்தோம். இந்த முறையும் அழுகையே வந்தது எனக்கு. பின்னர் ஒருவரின் உதவியுடன் நான் ஏழாவது மலையிலிருந்து 6.45க்கு இறங்க தொடங்கினேன். 6,5,4, என்று மலைகளில் இறங்கிவிட்டேன். பல இடங்களில் உட்கார்ந்து என்கைகளை ஊன்றி இறங்கினேன். இதன் காரணமாக எனது கைகளில் சிறிய காயங்கள் மற்றும் என்னுடைய உடை கிழிய தொடங்கியது. சித்தரை வழிபட்டு வழுக்கு பாறை வருவதற்கு முன்பே இருட்டதுவங்கியது.
என் உடல்நிலை
சற்று சோர்வாகதான்யிருந்தது. (இருவருமே சற்று சோர்வாகதான்யிருந்தோம்) காரணம் தொடந்து 13 மணிநேர மலையேற்றம். மற்றும் இரண்டாவது நாள் இரண்டு சுக்க காப்பி, ஒரு கிளாஸ் மோர் மற்றும் கூழ், ஒருதர்பூசணி துண்டு இவையே உணவாகயிருந்தது, இரவு தூக்கமின்மை இதன் காரணமாகவும் என்னால் வேகமாக இறங்க முடியவில்லை.
மீண்டும் விநாயகர்.
முதல் மலை ஏறியவுடன் ஒரு சிறிய விநாயகர் கோவிலிருக்கும். இந்தகோவிலை இரவு 10.30 மணிக்க வந்தடைந்தோம். இக்கோவில் மண்டபத்தில் நாங்கள் அன்ற இரவு (செவ்வாய்கிழமை) ஓய்வெடுத்துக்கொண்டோம்.
மூன்றாம் நாள்.
அதிகாலை 5.30 மணிக்கு எங்களின் மலை இறக்கத்தை தொடந்தோம். முதல் மலையை நான் 6 மணிநேரம் எடுத்துக்கொண்டு இறங்கியிருக்கிறேன். 11.30 மணிக்கு வெள்ளியங்கிரி அடிவாரத்தை அடைந்தோம். பொறுமையாக என்னுடைன் வந்த கணவரை, கணவர் என்பதை மீறி வணங்கவைத்தது இந்த மலையேற்றம்.
தினமும் தொடர்ந்து ஏறும் சாதனை, மிக குறைந்த நேரத்தில் ஏறும் சாதனையாளர்கள் என்ற வெள்ளியங்கிரியில் ஆண்டுதோறும் சாதனைபடைக்கின்றனர் இளைஞர்கள். இவர்களுக்கு மத்தியில் இரண்டரை நாட்கள் ஏறியிறங்கியதும் சாதனையே . ஹர ஹர மகாதேவா.















































எந்நிலையிலும் சிவன் நம்மை கைவிடுவதில்லை.
ReplyDeleteஅவன் அருளாலே அவன் தாழ் வணங்கி
அவர் விரும்பும் பக்தர்களை அவர் துணையாக மூங்கில் பிரம்பு கை கொடுத்து மூன்றாவது கையாக நம்பிக்கை ஊட்டுகிறார். காணக்கிடக்காத தரிசனம். சிவாய நமஹ 🙏