அத்திவரதர் கும்பகோணம் (தரிசனம் -7.3.2026)
அமைவிடம்
கும்பகோணத்தில் 1739 ஆம் ஆண்டு சௌராஷ்டிர பரிபாலன கமிட்டியால், பிரம்மன் கோவில் தெருவில் கட்டப்பட்ட கோவில். இந்த கோவில் வேதநாராயணபெருமாள் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலிலுள்ள அத்திமரத்தால் உருவாக்கப்பட்ட அத்திவரதரை தரிசனம் செய்வது என்பது மிகவும் அரிதான மற்றும் சிறப்பான தரிசனமாக பக்தர்களால் கருதப்படுகிறது.
அத்திவரதர் சிறப்பு
1915 ஆம் ஆண்டு இந்த அத்திவரதர் மக்கள் வழிபாட்டிற்காக வெளியில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்குபின் 98 ஆண்டுகளுக்கு பிறகு 2013 ஆம் ஆண்டு பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து அருள்பாலித்தார். 12 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு(2026) மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதிவரை மக்களுக்கு அருள்புரிய மீண்டும் வெளிப்பட்டார்.
பாதள அறையிலிருந்து அத்திவரதரை வெளியில்கொணர்ந்து, தைலகாப்பிட்டனர். பின்னர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக இந்த கோவில் மண்டபத்தில் பத்து நாட்களுக்கு வீற்றிருந்தார்.
காஞ்சிபுர அத்திவரதர் 44 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாங்கள் காஞ்சிபுர அத்திவரதரையும் தரிசனம் செய்தோம்.
பயண அனுபவம்.
நாங்கள் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்ய இரண்டு ஆண்டுகளாக முயன்று வருகிறோம். இந்த ஆண்டு தரிசனம் செய்ய முடிவெடுத்து கிளம்பினோம். அப்படியே அத்திவரதரையும் தரிசனம் செய்ய முடிவெடுத்து, 6 ஆம் தேதி மதியம் சென்னை – கும்பகோணம் சென்று 7.3. அன்று காலை அத்திவரதரை தரிசனம் செய்தோம். அன்று சனிக்கிழமையாதலால் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தோம். 7.3 அன்று மதியம் கும்பகோணம்-கோயம்புத்தூர் பயணம் செய்து 9.3 திங்கட்கிழமை வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்தோம்.



No comments:
Post a Comment