திருவிடந்தை நித்யகல்யாணபெருமாள் (தரிசனம்-20.2.2026).
அமைவிடம்
சென்னை -புதுச்சேரி இ.சி.ஆர் சாலை.
மகாபலி சக்ரவர்தி
தேவர்களை எதிர்த்து போரிட்ட பாவம் நீங்க, அசுரகுலகாலநல்லூர் என்ற இடத்தில் பெருமாளை நோக்கி தவமிருந்தான். ஆதிவராகர் ரூபத்தில் மகாவிஷ்ணு மகாபலி சக்ரவர்திக்கு காட்சி கொடுத்தார். இத்தலத்திலேயே தங்கி மக்களுக்கு அருள்புரியவேண்டினான். இந்த ஆதிவராகர் குடிகொண்டயிடமே இந்த திருவிடந்தை.
காலவமுனிவர் என்பவருக்கு 360 பெண்குழந்தைகள்யிருந்தன. அவர்களை பெருமானுக்கு மணமுடித்துதர விரும்பினார். அதன் காரணமாக தினம் ஒரு பெண்ணாக திருமணம் செய்து கொண்டார். இந்த 360 பெண்களும் அகிலவல்லி என்ற ஒரே ரூபத்ரில் உருமாறினர். இந்த அகிலவல்லியே பெருமான் மடியில்யிருக்கும் மகாலெஷ்மியாவார். இவர் திணமும் திருமணகோலத்ரில்யிருந்ததால், நித்யகல்யாண பெருமாளாக மக்களுக்கு அருள்புரிகிறார்.
திருவிடந்தை
இடதுபாகத்தில் திருவாகிய லெஷ்மியை தாங்கியிருப்பதால், திருயிடவெந்தை என்பது திருவிடந்தை என்றானது.
உற்சவரே நித்யகல்யாணபெருமாளாக திகழ்கின்றார். மணக்கோலத்திலிருப்பதால், தாடையில் உள்ள திருஷ்டிபொட்டு தானாகவே உருவாகியதாக கூறப்படுகிறது.
வராகஅவதாரம்
ஹிரண்காசுரனிடமிருந்து இந்த பூமியை மீடிட்க எடுத்ததே வராக அவதாரம்.
திருமங்கையாழ்வாரரால் மங்களாசாசனம்செய்ய பட்ட திவ்யதேசம்.
தாயார், மற்றும் ரெங்கநாதருக்கு தனிசன்னதியுள்ளது.
வாய்ப்பு
புதுச்சேரியிலிருந்து சென்னை வரும் வழியில் இறைவனை தரிசனம்செய்தோம்.
















No comments:
Post a Comment