கொட்டையூர் கோட்டீஸ்வரர் (தரிசனம்-31.1.2026)
அமைவிடம்
பாபநாசம் கும்பகோணம் வழித்தடத்தில் அமைந்துள்ளது.
பெயர்காரணம்
ஆமணக்கு காடானயிந்தயிடத்தில், ஆமணக்கு கொட்டை செடியின்கீழ் லிங்கம்மிருந்ததால் இந்த ஊர் இப்பெயர் பெற்றது.
1. குhவிரி வட கரையின் தேவாரத்திருத்தலம்.
2. முhர்கண்டேயர் புஜித்த தலம்.
3. சோழன்னனுக்கு கோடிலிங்கமாக காட்சி கொடுத்ததால். கோட்டிச்சுரம் என்ற பெயரும் பெற்றது.
4. வுpங்கத்திருமேனியில் கோடிலிங்க அமைப்புள்ளது.
5. இறைவன் தலையிலிருந்து கங்கை வருவது போன்று இன்றும் கங்கை நீர்கசிவுள்ளது.
6. புந்தாஐநாயகி சமேதகோடீஸ்வரரராக இறைவன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
7. அனைத்து தெய்வங்களும் கோடி என்ற பெயருடனேயே அழைக்கப்படுகின்றனர். கோடி விநாயகர், கோடி சுப்ரமணியர், கோடி தட்சிணாமூர்தி என்று அழைக்கப்படுகின்றனர்.
8. திருநாவுக்கரசரால் Nதுவாரமும், அருணகிரிநாதரால் திருப்புகழும் பாடப்பெற்ற தலம்.
9. கும்பகோணசப்தஸ்தானம்.
10. 1. ஆதி கும்பேஸ்வரர் 2. திருக்கலயநல்லூர், அமிர்தகலசர் 3. தாராசுரம் ஆத்மநாதசுவாமி, 4. திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர், 5.கொட்டையூர் கோட்டீஸ்வரர், 6.மேலக்காவேரி கைலாசநாதர், 7.சுவாமிமலை சுந்தரேஸ்வரர்.
பயண அனுபவம்.
நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம். தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.
எங்களின் இலக்கு (வைணவம்)
2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம். திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது, நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.
எங்களின் இலக்கு (சைவம்)
276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.



No comments:
Post a Comment