இரும்பை மகாகாளேஸ்வரர். (தரிசனநாள்-15.2.2026)
அமைவிடம்
விழுப்புரம் மாவட்டம். புதுச்சேரிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. (புதுச்சேரி-திண்டிவனம் தேசியநெடுஞ்சாலை அருகில்.
திருஞானசம்மந்தரால் பாட பெற்ற தொண்டைநாட்டு தேவாரதிருதலங்களில் ஒன்று.
தலசிறப்பு
1. ஈஸ்வரனின் லிங்க வடிவம் மூன்று பகுதிகளாக தெரியும் (லிங்கம் விரிசல்விட்டிருக்கும்.) செப்பு பட்டயத்தால் கட்டிவைத்ரார் போன்ற அமைப்பில் உள்ளது. ஜோதிர்லிங்கத்தில் ஒன்றான திரியம்பமேஸ்வரர் போன்று, மும்மூர்திகளாக காட்சியளிப்பதாக போற்றப்படுகிறது.
2. நடராஜரின் கால் சற்று கீழே மடங்கியது போல்யிருக்கும். இந்த கோலம் ஆனந்த கோலம் என்று சொல்லப்படுகிறது.
3. காலபைரவருக்கு தனிசன்னதியுள்ளது. காலாஷ்டமி சிறப்பாக உள்ளதுயித்தலத்தில்.
4. முருகபெருமான் அறுமுககடவுளாக மையில் மீது அமர்ந்து, வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
தலபுராணம்.
அம்பன் மற்றும் அம்பாசுரன்யிருவரும் பார்வதிதேவியை தவாறக கண்ணுற்றதால். அம்பிகை, மகாகாளியாக அவதாரமெடுத்து, அழித்தார். அதனால் ஏற்பட்ட பிரம்மஹத்திதோஷம் காரணமாக இத்தல சிவனை வழிபட்டார். மகாகளர் என்ற மகரிஷி உஜ்ஜைன் மகாகாhளேஸ்வர், அம்பர் மாகாளம், இரும்பைமாகாளம் என்ற மூன்றுயிடத்திலும், மகாகாளேஸ்வர் என்ற லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.
கடுவெளிசித்தர்.
இந்த சித்தர் இக்கோவில் மரத்தடியில் தவம் செய்யலுற்றார். இவரின் கடும் தவம் காரணமாகத்தான் இந்த ஊரில் மழையில்லாமல் பஞ்சம் நிலவுவதாக மக்கள் கூறியதை வைத்துயிவரின் தவத்தை நடனமங்கை உதவியுடன் கலைத்தார் இப்பகுதிமன்னர். சித்தரும் மக்களின் நலன் வேண்டி தவத்தைவிடுத்து இக்கோவில் சிவத்தொண்டில் அவரை ஈடுபடுத்திக்கொண்டார். மழைபெய்து ஊர் செழிப்படைந்தவுடன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. அந்தவிழா நடனமங்கையின் நடனமும் நடைபெற்றது. அந்தசமயம் நடனமங்கையின் கால் சலங்கை அவிழ்ந்து விழுந்ததை கண்ட சித்தர். அந்த மங்கைக்கு கால்சலங்கையை எடுத்து அணிவித்தார். அதன் காரணமாக மக்களும், அரசனும் கடுவெளிசித்தரைபற்றி அவதூறு கூறினர். இதனால் வருத்தமுற்ற சித்தர் இறைவனிடம் முறையிட சிவபெருமான் கோபத்தில் வெடித்ததேயிந்த லிங்கம் என்று வரலாறு கூறுகிறது. இறைவனின் அருளை கண்ட சித்தர் இறைவன்மீது பாமலை பாடினார்.
குயில்மொழிநாயகி (ம) மதுரசுந்தரநாயகி
இத்தல அம்மன் சித்தரின் தவத்தின் பெருமையை மதுரமான (இனிமையான) குரலில் சிவபெருமானுக்கு எடுத்துரைத்ததால் அம்பிகை இந்த பெயரில் பக்தர்களுக்க அருள்புரிகிறார். இத்தலத்தில் பாடல் மற்றும் ஆடல் கலைகளில் சிறப்புற இத்தல அம்மனை வழிபடுகின்றனர்.
எங்கள் தரிசனம்.
நாங்கள் இந்த ஆண்டு சிவராத்திரி அன்று புதுச்சேரியிலியிருந்ததால், கிளியனூர்- அகஸ்தீர்வரர், ஒழுந்தியாம்பட்டு -அரசலீஸ்வரர், இரும்பை – மகாகாளேஸ்வரரை எங்களது சிவராத்திரி சிறப்புவழிபாடக வழிபட்டோம். நாங்கள் 2003 ஆம் ஆண்டுமுதல் புதுச்சேரியில் வசிப்பதால், இந்த தலங்களை பலமுறை தரிசனம் செய்துள்ளோம். 2005 முதல் 2015 வரை நாங்கள் கடலூர் திருவகீந்திரபுரம், பண்ருட்டி, சரணாராயப்பெருமாள், திருவதிகை வீரட்டானேசுவரர், சிங்கிரிகுடி மற்றும், மயிலம், திருவக்கரை, என்று பல கோவில்களை நானும் என்கணவரும் பைக்கில் பயணித்து தரிசனம் செய்திருக்கிறோம்.






No comments:
Post a Comment