இன்னம்பூர் எழுத்தறிநாதர்

 இன்னம்பூர் எழுத்தறிநாதர் (தரிசனநாள்-31.1.2026)

அமைவிடம்

பாபநாசம் -கும்பகோணம் வழிதடத்தில் அமைந்துள்ளது.

காவிரி வடகiரியில் அமைந்த தேவாரத்திருத்தலம். 

தலசிறப்புகள்

1. சூரியன் அவரின் ஆற்றல் பெருக வழிபட்ட தலம்.

2.துர்வாச முனிவரின் சாபம் பெற்றது ஐராவதம்யானை. இத்தலஇறைவனைவணங்கி சாபம் நீங்கப்பெற்றது.

3. .ஐராவத தீர்தம்

4. கோவில் விமானம் கஜபிருஷ்ட விமானம்.

5. ஆகத்தியர் இறைவனை வழிபட்டு இலக்கணங்களை கற்றார். கோவில் வரலாறு

6. சுதன்மன் என்ற ஆதிசைவர், இப்பகுதியை ஆண்ட மன்னனிடம் கணக்கராக பணியாற்றினார். இவர் மீது மன்னன் சந்தேகம் கொண்டான். இவரால் மன்னனுக்க விளக்கம் கொடுக்க முடியவில்லை. இறைவனை வழிபட இத்தல சிவபெருமான் சுதன்மன் வடிவத்தில் வந்து மன்னனுக்கு வரவு செலவு கணக்கைபற்றிய விளக்கம் கொடுத்தார்.

7. சஷ்டியப்த பூர்தி மற்றும் பீமரத சாந்தி செய்ய சிறப்பானயிடமாக இத்தலம் விளங்குகிறது.,  

8. இறைவன் அட்சரபுரீஸ்வரர், ஐராவதேஸ்வரர் தான்தோன்றீஸ்வரர், என்ற பெயர்களிலும் அம்பிகை சுகந்தகந்தலாம்பிகை, பூங்குழலம்மை, நித்யகல்யாணி என்ற பெயர்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 










பயண அனுபவம்.

நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம்.  தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.

எங்களின் இலக்கு (வைணவம்)

2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.  திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது,  நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.

எங்களின் இலக்கு (சைவம்)

276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு  தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.


No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...