ஒழுந்தியாம்பட்டு – அரசலீஸ்வரர்

 ஒழுந்தியாம்பட்டு – அரசலீஸ்வரர் (தரிசனம்-15.2.2026)

அமைவிடம்

விழுப்புரம் மாவட்டம். புhண்டிச்சேரி திண்டிவனம் தேசியநெடுஞ்சாலையில், வலதுபுறம் திரும்பி, ஒரு கி.மீ. செல்ல வேண்டும்.

பெரியநாகி சமேத அரசலீஸ்வரர் இறைவன் பெயர்கள். அரசமரம் தலவிருட்சம். 

தலபுராணம்.

வாமதேவர் என்ற முனிவர் அவர் பெற்ற சாபம் நீங்க பல சிவாலயங்களுக்கு சென்ற வழிபட்டுவந்தார். இந்த ஊரில் உள்ள அரச மரநிழலில் அமர்திருந்த நேரம் இந்தயிடத்தில் ஒரு சிவாலயம் கட்டினால் எவ்வளவு நன்றாகயிருக்கும் என்று நினைத்தமாத்திரத்தில், இந்த அரசமரத்தில் தோன்றிய லிங்கமாதலால் அரசலீஸ்வரர் என்ற பெயர் பெற்றார். வாமதேவர் காலத்திற்க்கு பின்பு இந்த லிங்கமானது மண்ணில் புதைந்தது.

சத்தியவிரதன் என்ற சாளுக்கிய மன்னன் இந்த பகுதியை ஆட்சி செய்த காலத்தில், சிவபெருமானுக்கு அற்பணிக்க என்று ஒரு நந்தவனம் அமைத்திருந்தான். அந்த நந்தவன பூக்களை ஒரு மான் தினமும் சாப்பிட்டு சென்றது. ஆந்தமானை வேட்டையாடியகோது அது ஒரு அரசமர பொந்தில் ஒளிந்துகொண்டது. ஆந்த மான் மீது அம்பெய்தியவுடன், ரத்தம் வருவதை கண்டு அந்த மான்தான் இறந்துவிட்டதாக நினைத்து அந்த மரபொந்தை பார்தால், மான் தப்பிவிட்டது. ஆனால் இங்குயிருந்த லிங்கத்தின் மீது பட்டு ரத்தம்வருவதை கண்னுற்ற அரசன, வாமதேவர் வழிபட்ட அந்த சுயம்பு லிங்கத்திற்க்கு கோவில் அமைத்து வழிபடலானான். 

முனிவர் காலத்திற்க்குபின் ஒழிந்து மீண்டும் தோன்றியதால்யிந்த இடம் ஓழந்தியான்பட்டு என்ற பெயர் பெற்றது.

கோவில் சிறப்பு

108 ருத்திராட்ச பந்தல் கீழ் பொருமான் மிக சிறய உருவில் வீற்றிருப்பார். 

லிங்கத்தின் மேல் அம்பு பட்ட தழும்புள்ளது.

ஞானசம்மந்தரால்பாட பெற்ற தொண்டை நாட்டு தலங்களில், 31வது தலம்.

பெரியநாகி சமேத அரசலூஸ்வரர் என்று பக்தற்களுக்க அருள்பாலிக்கிறார். 

எங்கள் தரிசனம்.

நாங்கள் இந்த ஆண்டு சிவராத்திரி அன்று புதுச்சேரியிலியிருந்ததால்,   கிளியனூர்- அகஸ்தீர்வரர், ஒழுந்தியாம்பட்டு -அரசலீஸ்வரர், இரும்பை – மகாகாளேஸ்வரரை எங்களது சிவராத்திரி சிறப்புவழிபாடக வழிபட்டோம். நாங்கள் 2003 ஆம் ஆண்டுமுதல் புதுச்சேரியில் வசிப்பதால், இந்த தலங்களை பலமுறை தரிசனம் செய்துள்ளோம். 2005 முதல் 2015 வரை நாங்கள் கடலூர் திருவகீந்திரபுரம், பண்ருட்டி, சரணாராயப்பெருமாள், திருவதிகை வீரட்டானேசுவரர், சிங்கிரிகுடி மற்றும் மயிலம், திருவக்கரை, என்று பல கோவில்களை நானும் என்கணவரும் பைக்கில் பயணித்து தரிசனம் செய்திருக்கிறோம். 
















No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...