திருப்புறம்பியம் சாட்சிநாதர்

 திருப்புறம்பியம் சாட்சிநாதர் (தரிசனநாள்-31.1.2026)

அமைவிடம்

பாபநாசம் - கும்பகேபணம் வழிதடத்தில் அமைந்ள்ளது.

சுந்தரமூர்திநாயனார், ஞானசம்மந்தர், நாவுக்கரசர் இவர்களால் பதிகம் பாடப்பெற்ற தலம். தேவாரபாடல் பெற்ற தலங்களில் சோழநாட்டு காவிரி வடகரைதலம். மதுரை ஆதினத்தால்யிக்கோவில் நிர்வகிக்கப்படுகிறது. வெற்றியின் நினைவாக ஆதித்யசோழன் செங்கற்கோவிலை, கற்றலியாக மாற்றினார் என்பதே இத்தலவரலாறு.

பிரளயம்காத்த விநாயகர்.

கிருதயுக முடிவில், பிரளயத்திலிருந்து இக்கோவிலை காக்க விநாயகரை பணித்தார் சிவபெருமான். ஏழுகடல் கிணறே இத்தல தீர்த்தம். இதன்காரணமாக வருணபகவான் கிளிஞ்சல், நத்தாங்கூடு, சங்கு, கடல்நுரை போன்ற கடல் பொருட்களால் உருவகம் செய்தார்.  அதனால் இpந்த விநாயகருக்கு தேன் அபிஷேகம் மட்டுமே செய்கின்றனர். இப்பகுதியில் விநாயகர் மிகவும் புகழ்பெற்று விளங்குகின்றார். விநாயகர் சதுர்தியன்று திரளான பக்தர்கள் வழிபாட்டிற்காக வருகின்றனர்.

அகத்தியர், புலந்தியர், சனகர், சனாதனர் ஆகியோர் வழிபட்ட லிங்கங்கள்  இந்த ஆலயத்தில் உள்ளன. 

ஸ்ரீகுகாம்பிகை

முருகப்பெருமான் குழந்தையை இடையில் தாங்கி நிற்கிறார். அம்மனுக்கு சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்தப்படுகிறது. 

 















பயண அனுபவம்.

நாங்கள் 24 ஆம் தேதி காலை புதுச்சேரியிலிருந்து கிளம்பி கும்பகோணம் வழியாக எங்களின் குலதெய்வம் கோவில் வரகூர் வெங்கடே பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த பஞ்சமி (தித்திரை மாதம் பஞ்சமி திதி) அன்று நடை பெறும் தரங்கிணி உற்சவத்தில் இரண்டு நாட்களும் பங்கு கொண்டு, பின்னர் மாயவத்தில் மூன்று நாட்களுக்கு தங்கி சுற்றியுள்ள தெய்வ திருதலங்கள் மற்றும், திருவாரூர் என்று சென்று, மீண்டும் எங்கள் ஊர் நல்லிச்சேரிக்கு வந்து, தை வெள்ளிக்கிழமை (30.1.2026) அகிலாண்டேஸவரி அம்மனுக்கு நடை பெற்ற சந்தனகாப்பில் கலந்துகொண்டு, அன்று மாலை பிரதோஷத்தில் இறைவனை வழிபட்டு, (31.1. 2026) மீண்டும், அய்யம்பேட்டை கும்பகோண வழிதடத்திலுள்ள ஐந்து திரு கோவில்களை வழி பட்டு சுபமாக 31.1.மாலை புதுச்சேரி வந்தடைந்தோம். 51 திருகோவில்கள் தரிசனம் செய்தோம்.  தேவார திருத்தலம்36 , திவ்யதேசம்5, 10 பழம்பெரும் ஆலயங்கள. கோவில் சிறப்பு பற்றிய பிளாக் தனி தனியாக வெளியிடுவேன்.

எங்களின் இலக்கு (வைணவம்)

2026 ஆம் ஆண்டுக்குள் 276 தேவார திருத்தலங்களும், 106 (திருபாற்கடல் மற்றும் வைகுண்டம் இரண்டும் இப்பூவுலகில்யில்லை). திவ்ய தேசங்கள் தரிசனம் செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளோம்.  திவ்யதேசத்தில் தமிழ்நாட்டை தவிற பிறமாநிலங்களில்லுள்ள, அதாவது,  நேபாளம், முக்திநாத் உட்பட பிற திவ்ய தேசங்களை தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணா.

எங்களின் இலக்கு (சைவம்)

276 தேவாரதிருத்தலங்களில் கைலாய மானசரோவர் இந்த ஆண்டு  தரிசனம் செய்ய தீர்மானித்துள்ளோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தை தவிற பிற மாநில திருத்தலங்கள் தரிசனம் செய்விட்டோம். ஸ்ரீலங்கா கோணேஸ்வரம், கேதீஸ்வரம் உட்பட தரிசனம் செய்து விட்டோம். எஞ்சிய தமிழ்நாட்டு திருத்தலங்கள் உள்ளன. ஹர ஹர மகாதேவா.


No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...