கிளியனூர் அகஸ்தீஸ்வரர்

 கிளியனூர் அகஸ்தீஸ்வரர் (தரிசனம் -15.2.2026)

அமைவிடம்

விழுப்புரம் மாவட்டமாக இருந்தாலும்இ புதுச்சேரி – திண்டிவனம் தேசியநெடுஞ்சாலையிலிருந்து 20கி.மீ தொலைவில்இ இடதுபுரம் கிளியனூருக்கு  சாலைபிரியும்.

தலசிறப்புகள் 

1.திருஞானசம்மந்தரால் பாடப்பெற்ற தலம். 276வது தலமாக கூறப்படுகிறது. தொண்டைநாட்டு தலங்களில் ஒன்று.

2. அகத்தியர் பிரதிஷ்டை செய்த லிங்கம்மாதலால் அகஸ்தீஸ்வரர் என்றும், அம்பிகை அகிலாண்டேஸ்வரி என்ற பெயரில் நமக்கு அருள்பாலிக்கிறனர்.

3. சோழர்களின் பல காலகட்ட கல்வெட்டுகளை கொண்டது இந்ததலம்.

4. காளவ மகரிஷி அவரது இரண்டு பெண் குழந்தைகளின் தீராத நோய்தீர இத்தலஇறைவனே அருள்புரிந்தார்.

5. கல்வெட்டுகள் மூலம் இக்கோவில் தொன்மையை நாம் அறிய முடிகிறது.

6. 6ஆம் மற்றும் 7ஆம் நூற்றாண்டில் இந்த ஊர் மிகவும் புகழும் சிறப்பும் பெற்று விளங்கியதாக கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.

7. இரண்டு வாயில்களை கொண்டது. ஒருவாயில் முன்பு பெரிய குளம் உள்ளது.

எங்கள் தரிசனம்.

நாங்கள் இந்த ஆண்டு சிவராத்திரி அன்று புதுச்சேரியிலியிருந்ததால்,   கிளியனூர்- அகஸ்தீர்வரர்,  ஒழுந்தியாம்பட்டு -அரசலீஸ்வரர், இரும்பை – மகாகாளேஸ்வரரை எங்களது சிவராத்திரி சிறப்புவழிபாடக வழிபட்டோம். நாங்கள் 2003 ஆம் ஆண்டுமுதல் புதுச்சேரியில் வசிப்பதால், இந்த தலங்களை பலமுறை தரிசனம் செய்துள்ளோம். 2005 முதல் 2015 வரை நாங்கள் கடலூர் திருவகீந்திரபுரம், பண்ருட்டி  சரநாராயணப்பெருமாள், திருவதிகை வீரட்டானேசுவரர், சிங்கிரிகுடி மற்றும் மயிலம், திருவக்கரை,  என்று பல கோவில்களை நானும் என்கணவரும் பைக்கில் பயணித்து தரிசனம் செய்திருக்கிறோம். 
















No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...