பூத்துறை 1008லிங்காலயம்

 பூத்துறை 1008லிங்காலயம். (தரிசனம் 7.2.2026)  

அமைவிடம் 

புதுச்சேரியில், ஜிப்மருக்கு எதிரில் வி.சி.ஆர்.சி என்ற யானைக்கால் தடுப்புநோய் மற்றும் ஆராய்சிமையம் உள்ளது. அதை தொடந்துசென்றால், பூத்துறைபிரதானசாலை என்று  ஒரு சாலையிருக்கும் அந்த சாலையின் முடிவில்  சாலை இரண்டாகபிரியும், ஒன்று கனவூர்திமையம் சாலை,  மற்றொன்று பூத்துறை என்ற கிராமத்திற்கு செல்லும் சிறிய சாலை. கனகஊர்திமையம் சாலை அடைந்தவுடன,; இடதுபக்கம் ஒரு சாலை பிரிந்து செல்லும். 200 மீட்டருக்குபிறகு, சாலைகுறுகலாகும். இந்த 200 மீட்டருக்கு பிறகு, அந்தயிடம் தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டமாகும். இந்த பூத்துறைசாலையில், 700 மீட்டர் கடந்தவுடன் இந்த 1008 லிங்க சிவாலயம் என்று பெயர்பலகைவலதுபுறமிருக்கும். இந்த குறுகிய பாதையில் மீண்டும் ஒரு கி.மீ. க்குமேல் சென்று ஒற்றையடிபாதைவழியாக சென்று இpந்தயிடத்தை அடைய வேண்டும். பெயர்பலகை எதுவும்மிருக்காது. மக்கள்யாராவது வந்தால் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம். 

நான் ஒருமுறை இந்த ஆலயத்தின் காணொளியை யு. டியுபில் பார்தேன். எங்கள் உறவினர் ஒருவர்வேறு இந்த காணொளியை பகிர்ந்தார் என் கணவருக்கு. நாங்கள் வீட்டில் ஒருநாள் மாலை எங்காவது செல்லலாமா? என்று யோசித்த நேரத்தில் இந்த சிவன் எங்கள் நினைவிற்கு வந்தார்.

நாங்கள் எடுத்த காணொளி மற்றும் புகைப்படங்களை மட்டும்; பதிவிடுகிறேன்.

 இங்கிருந்த ஒரு கற்சிலையை சித்தர் என்றும், அந்த சித்தர் இவரின் தாத்தா என்றும் எங்ளிடம் கூறினார்.  பிற செய்திகளை இந்த நபரிடன் கேட்கலாம் என்ற நினைபற்குள் அந்தயிடத்தைவிட்டு அவர் வெளியேறிவிட்டார். 

குறிப்பு

நாங்கள் பாண்டிச்சேரியில் 33 சித்தர் பீடங்கள் உள்ள என்பதை அறிந்து, கடந்த ஆண்டு (மார்ச் 2025) 21 பீடங்கள் தரிசனம் செய்தோம். சித்தர்பீட தரிசனம் என்று 3 பகுதிகளாக வலைபதிவிட்டுள்ளேன். 12 சித்தர் பீடங்கள் வழிபட காத்துகொண்டிருக்கிறோம். ஆனால் இந்தயிடம் அந்த 33 சித்தர்பீடங்களில் ஒன்றாக இல்லை. 









 








 





No comments:

Post a Comment

யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை

  யாகந்தி குகை (Yaganthi Caves),(ம) அருந்ததி அரண்மனை (நாள் - 25.3.2026) அமைவிடம் ஆந்திரபிரதேச மாநிலம், நந்தியால் மாவட்டத்தில் அமைந்துள்ள கு...