ஜம்மு ஒருநாள் சுற்றுலா (நாள் - 19.7.2024)
திருப்பதி பாலாஜி கோவில்
திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் போன்றே இங்கோர் கோவில் எழுப்பியுள்ளனர். அமர்நாத் மற்றும் வைஷ்ணவோதேவி யாத்திரிகர்கள் பெரும்பாலும், கட்ரா என்ற இடத்திற்கு சென்று அங்கிருந்தே இந்த புகழ் பெற்ற இடங்களை மட்டும்; தரிசனம் செய்து விட்டு சென்றுவிடுவதால், ஜம்மு நகரத்தின் மக்கள் வருகை அதிகரிக்க வேண்டி இக்கோவில் கட்டப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
பாவேவாலி மாதாஜி
“Bahu“ கோட்டைக்குள் இந்த அம்மன் கோவில் அமைந்துள்ளது ஜம்மு காஷ்மீர் பகுதியில், வைஷ்ணவோதேவிக்கு பிறகு ஜம்மு மக்களால் அதிகமாக வணங்கப்படும் தெய்வமாகும் 1822ஆம் ஆண்டு மகாராஜா குலாப்சிங்கின் முடிசூட்டுவிழாவிறக்கு பிறகு மீண்டும் புனரமைக்கப்பட்டது. மாதாகாளியின் சிலை கருப்பு வண்ணத்தில் உள்ளது.
ரகுநாத் மந்திர்;.
ஜம்முவில் உள்ள தாவி ஆற்றங்கரையின் வடக்கு பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது. 1835 ஆம் ஆண்டு மகாராஜா குலாப் சிங் என்பவரால் கட்டப்பட்டது. இவரது மகன் ரன் வீர் சிங் டோக்ரா இவர் ஆட்சியின் சமயம் 1860-ல் கட்டிமுடிக்கப்பட்டது. இறை சன்னதிகள் அதிகம் இருந்தாலும், ரகுநாத் என்ற ராமரின் சன்னதியே பிரதானமாக உள்ளது. சுழல் வடிவ கோபுரத்துடன் 300 கடவுள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளனர். பிராதன சன்னதிகளின் சுவர்களில் ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதை இவற்றின் கருட்பொருட்கள் கொண்ட ஒவியங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கோவில் நூலகத்தில் 6000 மொழி நூல்களின் கையெழுத்து பிரதிகள் பாதுகாக்கப்படுகின்றன. 2002 ஆம் ஆண்டு பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு இக்கோவில் உட்பட்டது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாததில் நடந்த துப்பாக்கி சூட்டில் 20 பக்தர்கள் கொல்லப்பட்டனர். 40பேர் காயம்அடைந்தனர்.
No comments:
Post a Comment