சோன்மார்க் (நாள்- 11 7. 2024)
குல்மார்க் போன்ற ஒரு சிறந்த சுற்றுலா பகுதி. இதன் அருகில்தான் அமர்நாத் செல்வதற்கான நீல்ஹர்த் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த கேம்பில் தங்கியே பஞ்சதர்னி என்ற இடம் செல்ல ஹெலிபேட் உள்ளது.
ஜோஜிலாபாஸ் (Zojila Pass)
லடாக் பகுதியில் அமைந்துள்ள ஒருகணவாய். 17,500 அடி உயரமான சாலை. (கணவாய்- மலைதொடர்வழியாக செல்லும் பாதை) காஷ்மீர் ஸ்ரீநகர் மற்றும் லேலடாக் நகரங்களை இணைக்கும் பாதை. பனிபொழிவு காலங்களில் அதிகமாக மூடப்படும் சாலை. 1947 பாகிஸ்தான் போரின் சமயம் பாகிஸ்தானால் கைபற்றப்பட்டு, பின் நவம்பர் 1 ஆம் தேதி நம் வசம் வந்த பகுதி என்ற வரலாறு கொண்டது இந்த ஜோஜிலாபாஸ்.
சிரோ பாயின்ட். (Zero Point)
சிரோ பாயினட் என்றால் தட்பவெட்ப நிலை பூஜியத்திற்கு மேல் அல்லது கீழ் இருந்தாலும் தட்பவெட்ப நிலையை சரியாக கணக்கிட முடிந்த இடம். சிக்கிம் மாநிலத்திலும் இந்த சிரோபாயின்ட் என்ற இடம் உள்ளது. (நாங்கள் பிப்ரவரி மாதம் மற்றும் ஜுலை மாதம் என்று இரண்டுமுறை இந்த சிரோ பாயின்டை ரசித்துள்ளோம்.) இந்த இடங்களையும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் சென்று ரசிக்க வேண்டும். சிலபேருக்கு முச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புண்டு.
War Memorial
1947-48- ல் நல்ல சாலை அமைத்து பாகிஸ்தானியர்களை விரட்டியதன் நினைவாக கட்டப்பட்ட இடம் தான் போர் நியாபக இடம்.
https://youtu.be/0ItGkx20_Z4?feature=sharedclick the link
Pl. Click this link to see our Amarnath Yathra in full. Courtesy-Tamil Anjal
No comments:
Post a Comment