அமிர்தசரஸ்

 அமிர்தசரஸ்  (நாள்-8.7.2024)

அமர்நாத் யாத்திரை என்றாலும், பஞ்சாப்பில் சில முக்கியமான இடங்கள், குல்மார்க், டால் ஏரி படகுபயணம் என்ற பயண திட்டம் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் இந்த முறை யூடிபர், நாளிதழ் வெளியீட்டாளர், டிராவலர், என்ற பன்முக திறமை கொண்ட “தழிழ் அஞ்சல்”  இவர்களுடன் பயணிக்க நானும் என் கணவரும் முடிவு செய்தோம்.

பொற்கோவில்







பஞ்சாப் மாநிலத்தில், அமிர்தசரஸ் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த பொற்கோவில், சீக்கயர்களின் புனிததலமாகும். இந்த புனிதத்லம் சதுரவடிவில் நான்கு நுழைவாயிலை கொண்டது. குளம் போன்ற நீர்நிலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. சீக்கியர்களின் புனிதநூல் “ஆதிகிரந்தம்” இதைவைத்து உருவாக்கப்பட்டதே இந்த பொற்கோவில். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாக பரிந்துரைக்கப்பட்டு, விண்ணப்பம் நிலுவையில் உள்ளது. வரலாற்றின்படி இந்த இடம் ராம்தாசபூர் என்று அழைக்கப்படுகிறது. சீக்கியர்களின் நான்காவது குரு வான குருராம்தாஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் கட்டுமானம் 1574 ற்கும், 1604 ற்கும் இடைப்பட்ட காலம் என்று அறியப்படுகிறது. இந்த சீக்கியர்களின் புனித இடம், பல இன்னல்களையும், இடிபாடுகளையும் சந்தித்து தற்பொழுது தங்கமயமாக ஜொலிக்கிறது.

ஜாலியன்வாலாபாக்.


1919 ஏப்ரல் 13 ஆம் தேதி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் என்ற இடத்தில் உள்ள ஜாலியான்; என்ற மைதானத்தில், பாஷாகி திருவிழாவின் சமயம் மக்கள் கூடினர். ரவுலட் சட்டத்திறக்கு எதிரப்பு தெரிவிக்கும் வகையில், ஜெனரல் டயர் என்பவன், எந்த வித முன் அறிவிப்பின்றி, ஒரு சிறிய நுழைவாயிலையும், ஏனைய பக்கங்களில் கட்டிடங்களாலும் சூழபட்ட ஜாலியான் மைதானத்தில் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினான். இதுவே ஜாலியன்வாலாபாக் படுகொலை என நமது சுதந்திர வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியாகும். சுமார்1500 மக்கள் வரை கொலைசெய்யப்பட்டு, சுமார் 1200மக்கள் வரை படுகாயம் அடைந்தனர். இந்த துயரசம்பவம் நடந்த இடத்தில் தியாகிகளுக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. தற்சமயம் வரை இந்த மைதானம் சிறிய நுழைவாயிலுடனும், சுற்றி கட்டடிங்களும்மாகவே தோற்றம் அளிக்கிறது. துப்பாக்கி சுட்ட சுவடுகள் இன்றும் நம்மை எழுச்சியுற வைக்கிறது. 






அட்டாரிஎல்லை

(வாகா எல்லை)

இந்த பகுதி லாகூர் மற்றும் அமிர்தசரஸ் பன்னாட்டு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த பகுதி நம்நாட்டிற்கும் பாகிஸ்தானுக்கும் எல்லை பகுதியாகும். இந்த எல்லை பகுதியில் தினமும் இந்திய எல்லை  பாதுகாப்புபடையும், பாகிஸ்தான் ரேஞ்சரும் இனைந்து, “மாலைநேர கொடியிறக்க சடங்கு” நிகழ்த்துகின்றனர். இந்த சடங்கு 1959 முதல் தினமும் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்ககனகான இந்தியர்களும், பாகிஸ்தான் பகுதியில் அந்நாட்டு மக்களும் தினமும் பங்கு பெறுகின்றனர். இதை காணும் நேரம் நமக்கு சுதந்திர எழுச்சியும், தேசபற்றும் நம்மை பற்றுகிறது.





வாகா எல்லை என்பது பாகிஸ்தானிய எல்லையின் பெயராகும். நம் நாட்டு எல்லை பக்கத்தின் பெயர், “அட்டாரி பார்டர்”; என்பதாகும்.
சர்தார் சியாம் சிங் அட்டாரி. 
முகலாயர்களை பல முறை புறமுதிகிட்டு ஒட செய்த இவர், மகாராஜா ரஞ்சித் சிங்கின், ராணுவத்தலைவர், சர்தார் சியாம் சிங். இதன் காரணமாக இந்தியர்களாகிய நாம் இந்த இடத்தை அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் "அட்டாரி பார்டர்" என்றே அழைப்போம்.














Pl. Click this link tosee our Amarnath Yathra in full. Curtesy - Tamil Anjal.

3 comments:

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...