அமர்நாத். (தரிசனநாள்-12.7.2024).
முதல் நாள் மாலையே நாங்கள் பஹல்காமில் டென்டில் தங்கி விட்டோம். லங்கரில் (லங்கர் - அன்னதான கூடம்) அனைவருக்கும் டீ, காப்பி சாப்பாடு என்று மிக சிறப்பாக உபசரிப்பு நடந்தது. கூடாரம் 10 நபர்கள் தங்குபடி அமைத்திருந்தார்கள். எனக்கு கூடாரத்தில் தங்குவது பெரிய செயலாக தெரியவில்லை. ஆனால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பொது கழிவறை மற்றும் குளியலறை என்னை மிகவும் பயப்பட செய்தது. ஆனால் நான் எதிபார்த் அளவு மோசமாக இல்லை. 5நட்சத்திர ஹோட்டல் போன்று மிக சுத்தமாக இல்லாவிட்டாலும். நன்றாகவே பராமரித்து இருந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் கனமழை காரணமாக அமர்நாத்தில் தரிசனம் தடை பட்டு இருந்தது. 11ஆம் தேதி இரவு மழை பொழிய ஆரம்பித்தது. நல்ல இடி மற்றும் மின்னல் வேறு, கூடாரம் பயங்கரமாக அசைந்தாடியது. கூடாரம் மழையில் விழுவிந்து விட்டால்கூட, காயத்தின் தன்மைக்கு தகுந்தாற் போல் எப்படியும் ஒரு மாததிற்குள் சரியாகிவிடும். ஆனால் தரிசனம் கிடைக்காவிட்டால் என்ன செய்வதுஎன்ற பயம் தான் எனக்கு. 2022-ல் கேரார்நாத் தரிசனம் கிடைக்காமல் போனது வேறு என்நினைவிற்கு வந்து, மனதினில் “இடர்களைபதிகம்” என்னை முணுமுணுக்க வைத்தது.
அதிகாலை 4 மணிக்கு சன்று மழை மற்றும் குளிருடன் குளித்து கிளம்பி, 7 மணிக்கு ஹெலிபேட் சென்றடைந்தோம். இயற்கை அருளால் மதியம் பன்னிரண்டு மணிக்கு பஞ்சதர்னியை ஹெலிகாப்டர் மூலம் சென்றடைந்தோம்.
நாங்கள் ஏற்கனவே திட்ட மிட்ட படி நானும் என்கணவரும் பஞ்சதர்னியில் இருந்து நடந்தே அமரநாதரை தரிசித்தோம். மலை, மேடு, சரியான சாலையின்மை, குதிரை பயணிகள், டோலிபயணிகள் என்று பல இடையூறுகளுக்கு இடையிலும், இந்த குறுகலான பாதையில் நடந்து சென்று தரிசனம் செய்தது, எங்களின் உடல் திறனையும், மனஉறுதியையும் உணரசெய்தது.
வரலாறு
சிவபெருமான் அமரத்துவத்தை, பார்வதிதேவிக்கு போதித்த இடம். அமரத்துவத்தை போதிக்கும் சமயம், இரண்டு புறாக்கள் கேட்டுவிட்டதாம், இதன் காரணமாகவே பல ஆண்டுகளாக இந்த புறாக்கள் இங்க வசித்து கொண்டிருக்கிறது. பனிலிங்க தரிசனம் போன்றே புறாக்களின் தரிசனமும் இங்க சிறப்புருகிறது.
இந்த அமர்நாத் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக உள்ளது. அம்மனின் தொண்டை பகுதி விழுந்த இடமான இந்த அமர்நாத், மகாமாயா சக்தி பீடம் என்று அழைக்கப்படுகிறது.
கைபேசிக்கு தனி லாக்கர், செருப்புக்கு தனிலாக்கர் என்று பலவற்றையும் கடந்து, நம்மூர் கோவில்களில் கால்கள் சுடுவது போன்று, இங்கு கற்றலியில் சில்என்று கால் வைத்து ஏறியது வேறு ஒரு அனுபவம். உலகவெப்பமயமாதல் காரணமாக முதல் ஜந்து நாட்களுக்குதான் பனிலிங்கம் நன்றாக இருந்ததாம். நாங்கள் தரிசனம் செய்தஅன்று பனிலிங்கம் கரைய தொடங்கி விட்டது. மகாதேவர் தரிசனம் மனநிறைவளித்தது.
No comments:
Post a Comment