சிவ்கோரி (தரிசனநாள் 16.7.2024)
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ரியாசி மாவட்டம், ரியாசி நகருக்கு அருகில் சிவபெருமானுக்காக உள்ள ஒரு குகை கோவிலாகும். கட்ரா நகரில் இருந்து 80 கி.மீ. தொலைவில் ஒரு மலை பகுதியில் அமைந்துள்ளது.
இந்த குகை 200 மீட்டர் நீளம் 11மீட்டர் அகலம் இரண்டில் இருந்து 3மீட்டர் உயரம் கொண்ட குகை. இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்தியாக லிங்கவடிவில் பக்கதர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
My Hubby Playing Drum.80 கி.மீ மலைஏறிய பிறகு ஒரு 3 கி;மீ; நடந்து, குதிரை, டோலி, என்று ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து செல்லலாம்.
இந்த குகையில் இருந்து அமர்நாத் குகைக்கு செல்ல வழி இருப்பதாக ஒரு தகவலும் கூறுகின்றனர்.
50 ஆண்டுகளுக்கு முன்பு ஒருசிலருக்கே தெரிந்த இந்த குகைக்கோவில் 2003 பிறகு பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளதாம். குறிப்பாக 30 சதவிகித மக்கள் காஷ்மீர் மக்களும் 70 சதவித மக்கள் பிற மாநிலத்திலிருந்தும் வருகிறார்களாம்.
சாகச தரிசனம்.
குகையில் இரண்டாவதாக உள்ள நுழைவாயில் 3அடி உயரமே உள்ளது. நாம் குழந்தை போல் தவழ்ந்துதான் செல்லவேண்டும். 5 மீட்டர் இவ்வாறு சென்ற உடன் குகை பாறை இரண்டாக பிரிகிறது. இதன் அகலம் அரை அடிதான் இருக்கும் இதனுள் பக்கவாட்டில் தான் கடந்து செல்ல வேண்டும். குகையாக இருப்பதால் வெளிச்சததிற்காக செயற்கையான பல்புகள் பொருத்தப்பட்டிருக்கும். பல்பு மிக அருகில் உள்ளதால் இதன்வெப்பம் சற்று நமக்கு இடையுறாக உள்ளது. பாறையில் இருந்து கசியும் தண்ணீர் வழுக்குகிறது. இவற்றை கடந்து சென்றபின்தான் சிவ தரிசனம் கிடைக்கிறது. இதன் காரணமாகவே இதை சாகச தரிசனம் என்று குறிப்பிட்டுள்ளேன்.
No comments:
Post a Comment