தஞ்ஜை பெரிய கோவில். (தரிசனநாள்-27.7.2024)
உலகப்புகழ்வாய்ந்த இந்த கோவில் அனைவரும் அறிந்ததே.
.jpeg)
இக்கோவிலுக்கு பல முறை சென்றுதரிசனம் செய்திருந்தாலும், என் மகளின் விருப்பதிற்கிணங்க மீண்டும் கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை பெரிய கோவில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் என்று, சென்று வழிபட்டதையே, வலைப்பதிவாக வெளியிடுகிறேன்
.
திருவிசைப்பா, திருபல்லாண்டு தலம்.
ஒன்பதாவது திருமுறையில் ஒன்றான திருவிசைப்பா என்பது, திருமாளிகைதேவர், கருவூர்தேவர், பூந்துருத்தி நம்பிகாடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டு அடிகள், திருவாலி அமுதனார், புருஷோத்தம நம்பி, சேதிராயர் இவர்களின் பாடல் தொகுப்பாகும். சேந்தனார் இயற்றியதே திருப்பல்லாண்டு.
இதன் காரணமாகவே கருவூரார் சன்னதி இங்கு புகழ்பெற்றுள்ளது.
கண்டராதித்தர் என்பவர் சோழவம்ச அரசர். திருவக்கரை கோவிலில் இவர்கட்டிய கோபுரம் ஒன்றுள்ளது. இந்த கோபுரம் கண்டராதித்தர் கோபுரம் என்றே அழைக்கின்றனர்.
photo year 2010
No comments:
Post a Comment