கங்கைகொண்ட சோழீஸ்வரர் (தரிசனநாள் -27.7.2024)
இக்கோவிலுக்கு பல முறை சென்றுதரிசனம் செய்திருந்தாலும், என் மகளின் விருப்பதிற்கிணங்க மீண்டும் கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை பெரிய கோவில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் என்று சென்று வழிபட்டதையே, வலைபதிவாக எழுதுகிறேன்.
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சிவன் கோவில், புகழ்வாய்ந்த சோழ அரசர் ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால்; கட்டப்பட்டது, இந்த கங்கை கொண்ட சோழபுரம் ( கங்கை ஆறுவரை சென்று வெற்றிபெற்றதன் நினைவாக இந்த பெயரில் நிறுவப்பட்ட நகரம்) சோழ பேரரசின் தலை நகரமாக ராஜேந்திர சோழநால், நிற்வகிக்கப்பட்டது. உலக பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது இந்த கோவில்.
கட்டிடக்கலை சிறப்பின் காரணமாக அனைத்து மக்களாலும் கவரப்பட்ட இடங்களுள் ஒன்றாக இருந்தாலும், ஆன்மீக சிறப்புகொண்டதும், இந்த தலம்.
திருவிசைப்பா, திருப்பல்லாண்டு தலம்.
ஒன்பதாவது திருமுறையில் ஒன்றான திருவிசைப்பா என்பது, திருமாளிகைதேவர், கருவூர்தேவர், பூந்துருத்தி நம்பிகாடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டு அடிகள், திருவாலி அமுதனார், புருஷோத்தம நம்பி, சேதிராயர் இவர்களின் பாடல் தொகுப்பாகும். சேந்தனார் இயற்றியதே திருப்பல்லாண்டு.
அன்னாபிஷேகம்.
13.5 அடி உயரம், 62 அடி சுற்று கொண்ட இந்த பிரகதீஸ்வரருக்கு, 100 முட்டை அரிசி சாதமாக, சமைத்து அபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும். அன்னம் பாலிக்கும் ஈசனுக்கு நன்றி செலுத்துவதே அன்னாபிஷேகம். நாங்கள் (நானும் என்கணவரும்) அன்னாபிஷேகசிறப்பு தரிசனம் செய்துள்ளோம். திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment