குல்மார்க் (நாள்-10.7.2024)
அமிர்தசரஸில் இருந்து கட்ராவரை ரயில்பணம் செய்து, அங்கிருந்து பிரத்யேக வேனில், பயணித்து ஸ்ரீநகர் சென்றடைந்தோம். ஸ்ரீநகர் செல்லும் வழியில் பனிஹல் என்ற ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீநகர் வரை ஜம்மு காஷ்மீர் உள்ளுர் ரயிலில்பயணம் செய்தோம், ஒரு அனுபவத்திற்காக. குறிப்பாக மிக நீளமான தன்னல் பயணஅனுபவம் பெருவதற்காகவும்.
குல்மார்கில்; கொண்டோலா ரெய்டு என்பது மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா வாகும். கேபிள்கார் பயணத்தையே கொண்டோலா என்று சொல்கின்றனர். இதுஉலகிலேயே உயரமான கேபிள்கார் என்றும் (அ) ஆசியாவிலேயே உயரமானது என்றும் கூறுகின்றனர்.
இந்த பயணம் இரண்டு கட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. பனியை கண்டு இன்புற நினைப்பவர்கள் இந்த ரெய்டை ஏப்ரல் மாததிற்;குள் திட்ட மிட வேண்டும். நாங்கள் அமர்நாத்தை பிரதானமாககொண்டு பயணித்ததால் ஜுலை மாதம் சென்றோம். இரண்டாவது கட்டத்தில் பனி சறுக்கு செய்தோம். இரண்டு கட்டமோ அல்லது ஒரு கட்டம்மட்டும் செல்பவர்கள் ஆன்லைனில் முன்பே பதிசெய்ய வேண்டும்.
Pl. click this link to see our Amarnath Yathra in full. Courtesy Tamil Anjal.
No comments:
Post a Comment