ஸ்ரீநகர் சுற்றுலா (நாள்-14.7.2024)
சங்கராச்சார்யார் கோவில்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜபர்வான் மலைத்தொடர் உச்சியில் இந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. பள்ளத்தாக்கில் இருந்து 1000 அடி உயரத்தில் இந்த கோவில் உள்ளது. கோவிலின் கட்டுமான காலம் அறியப்படவில்லை. காஷ்மீர் இந்துக்கள் இந்த கோவிலை ஆதிசங்கரர் வழிபட்டதாக நம்புகின்றனர். இதன் காரணமாகவே இந்த கோவில் “சங்கராச்சார்யார் கோவில்” என்று அழைக்கப்படுகிறது. 1925 ஆம் ஆண்டு மைசூர் மகாராஜா மின்விளக்கு வசதியை ஏற்படுத்தினார். 1961-ல் துவாரகா பீடத்தை சேர்ந்த சங்கராச்சாரியார், ஆதிசங்கரரின் சிலையை பிரதிஷ்டை செய்தார். தற்சமயம் அமர்நாத் யாத்ரிகர்களின் பிரதான வழிபாட்டு ஆலயமாக இக்கோவில் விளங்குகிறது.
ஜேஷ்டாதேவி;.
ஸ்ரீநகரில் அமைந்துள்ள ஒரு பிரதான அம்மன் கோவில்.
டால் ஏரி
.
ஸ்ரீநகரில் உள்ள ஒரு சிறந்த சுற்றுலாதலம். ஜம்மு காஷ்மீரின் இரண்டாவது மிக பெரிய ஏரியாகும். இந்த ஏரி படகு சவாரி மிகவும் புகழ்பெற்றது. கடுமையான குளிர்காலத்தில் உறையும் தன்மையுள்ளது.
No comments:
Post a Comment