ஐராவதீஸ்வரர் தாராசுரம். (தரிசனநாள்- 28.7.2024)
இக்கோவிலுக்கு பல முறை சென்றுதரிசனம் செய்திருந்தாலும், என் மகளின் விருப்பதிற்கிணங்க மீண்டும் கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை பெரிய கோவில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில் என்று சென்று வழிபட்டதையே, வலைப்பதிவாக வெளியிடுகிறேன்.
இந்த மூன்ற கோவில்களும் சோழசாம்ராஜ்யத்தின் அழியா சின்னமாக இருந்தாலும், இக்கோவிருக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை, ஏனைய இரண்டுகோவில்களையும் ஒப்பிடுகையில் குறைவுதான்.
இக்கோவிலில் ஐராவதேஸ்வரருக்கும், தெய்வநாயகி அம்மனுக்கும் தனித் தனியாக கோவில் கட்டப்பட்டுள்ளது. அம்மன் தனிசன்னதியாக இருப்பதால் இக்கோவிலுக்கு வரும் பலரும் அம்மன் கோவிலுக்கு செல்வதில்லை.
இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டபட்டது இந்த கோவில். ஒரு தேர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஆலயம். ( கடம்பூர் ஆலயமும் தேர் போன்றே வடிவமைக்கப்பட்ட கோவிலாகும்). அர்த்தமண்டபம், மகாமண்டபம், அகாரமண்டபம் என்ற ராஜகம்பீர திருமணமண்டபம் என்று பல மண்டபங்கள் கொண்டு, உயரமாண ஆதிட்டானத்தின் மீது ஐராவதேஸ்வரர் நமக்கு அருள்பாலிக்கிறார். விடுமுறை நாட்களில் மட்டுமே அதிகமக்கள் வருகை புரிகின்றனர்.
No comments:
Post a Comment