வைஷ்ணவோதேவி (தரிசனநாள் 16.7.2024)
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் கட்ரா என்ற ஊரில் அமைந்துள்ள முப்பெரும் தேவியருக்கான கோவில். திருப்பதி பாலாஜி தரிசனத்திற்கு பிறகு அதிக பக்தர்கள் வரக்கூடியது, என்ற செய்தியே இந்த கோவிலின் பெருமை மற்றும் சிறப்பை நமக்கு உணர்த்துகிறது.
இக்கோவிலிலும் ஹெலிக்காப்டர் , டோலி, குதிரை போன்று அனைத்து வசதிகளும் பக்தர்களுக்காக உள்ளன. போகவர 28 கி.மீட்டர் தொலைவு கொண்டது இந்த மலைபகுதி.
நாங்கள் அமர்நாத் மற்றும், சிவ்கோரி நடந்து சென்று வந்ததால் குதிரைபயணத்தை முடிவு செய்து கிளம்பினோம். காலை 9 மணிக்கு
கிளம்பி, இறைவனை வழிபட்டு மாலை 5 மணிக்கு திரும்பினோம். ஆடி மாதம் முதல் தேதி அம்மன்; தரிசனம் அமைந்தது எங்களக்கு மகிழ்சியையும், மனநிறைவையும் கொடுத்தது. எவ்வித இடையூரும் இன்றி மிக சிறப்பாக தரிசனம் முடிந்தது.
வரலாறு
திரேதாயுகத்தில் தீயசக்தி அதிகமாக பரவியதன் காரணமாக பூமியின் சுமை அதிகரிக்கிறது. ரேமா, உமா, வாணி என்ற முப்பெரும் தேவியரின் வடிவம் கொண்ட வைஷ்ணவோதேவியை இறைவன் உருவாக்கி, இந்த சக்தியை மனித நலனுக்காக, ரத்னாகர்சாகர், சம்ரிதி தேவி என்ற தம்பதியினருக்கு மகளாக பிறக்க செய்கிறார். 9வயது நிரம்பியவுடன் திரிகூட மலைதொடரில் உலக நம்மைக்காக தியானம் செய்ய துவங்குகிறார். பெருமாளின் அம்சமான ராமரை இந்த வைஷண்வி வணங்குகிறார். முப்பொரும் சகத்தியாகிய இந்த வைஷ்ணவோதேவி உலகமக்களுக்காக இங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கறார்.
No comments:
Post a Comment