கோவர்தன்

 கோவர்தன் (வழிபட்டநாள் 5.8.2024)

வாய்ப்பு

ஆராய்ச்சி படிப்பிற்காக அமெரிக்கா சென்ற எங்களின் மகளை டெல்லியில் வழியனுப்பிவிட்டு, சென்னை புகைவண்டிக்காக (ஒரு பகல்)காத்திருந்த நேரத்தை பயன்படுத்தி, பிருந்தாவன், மற்றும் கோவர்தன் சென்று வழிபட்டு வந்தோம்.

கோகுலமும், மதுராவும் 2022-ல் தரிசனம் செய்துவிட்டதால், கோவர்தன், பிருந்தாவன் இந்த இரண்டு இடத்தையும் தேர்வு செய்தோம்.  மதுராவும், கோகுலமும், 108 திவ்யதேசங்களில் ஒன்றாக உள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.








கோவரர்தன கிரிதாரன்.

கிருஷ்ணரின் லீலைகளில் இந்த கோவர்தனகிரியும் ஒன்று. இந்திரன் கோகுலத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் இடி, மின்னலுடன் மழை பொழிய செய்தார். கோகுலத்து ஆயர்களையும், ஆவினங்களையும் காக்க, அருகில் இருந்த மலையை ஒரு விரலால், குடை போல் தூக்கி, மழையில் இருந்து காத்து ரட்சித்தார் பகவான் கிருஷ்ணர். அன்று முதல், இந்த மலை கோவர்தன கிரி என்றானது. 

மலையை பரிக்ரமா செய்கின்றனர். நாங்கள் இந்த மலையை இ. ரிக்க்ஷாவில் வலம் வந்தோம். இங்கும் பல கோவில்கள் உள்ளன. இதற்கு, இரண்டுமணிநேரம் ஆனது. நடந்து சென்றால் குறைந்தது 5 மணிநேரமாகும்.

தரிசனம் செய்த இடங்கள்.

1.ராதா குன்ட்









2. கோவர்தன் கோவில்.





3.பூன்சாரிகா லாயுதா பாபா மந்திர்




4.ஸ்ரீ கிரிராஜ் ஜீ மந்திர்.







5;. பிராசின் மந்திர்.







பிருந்தாவன்

 பிருந்தாவன் (வழிபட்ட நாள் 5.8.2024)

வாய்ப்பு


ஆராய்ச்சி படிப்பிற்காக அமெரிக்கா சென்ற எங்களின் மகளை டெல்லியில் வழியனுப்பிவிட்டு, சென்னை புகைவணடிக்காக (ஒருபகல்) காத்திருந்த நேரத்தை பயன்படுத்தி, பிருந்தாவன், மற்றும் கோவர்தன் சென்று வழிபட்டு வந்தோம்.

கோகுலமும், மதுராவும் 2022-ல் தரிசனம் செய்துவிட்டதால், கோவர்தன், பிருந்தாவன் இந்த இரண்டு இடத்தையும் தேர்வு செய்தோம்.  மதுராவும், கோகுலமும், 108 திவ்யதேசங்களில் ஒன்றாக உள்ளது.

உத்திரபிரதேசமாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த பிருந்தாவன். இந்த இடத்தை விருந்தாவன் என்றும் அழைக்கின்றனர். கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணர் இங்கு வசித்தார் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. மிகவும் புனித மாக கருதப்பட்ட இந்த இடம் காலத்தின் இடர்பாடுகளில் சற்று மறைந்திருந்தது. 16 ஆம் நூற்றாண்டில் சைத்தன்ய மஹாபிரபுவால் மீண்டும், மீட்டெடுக்கப்பட்டது. ராதாகிருஷ்ணருக்கு இங்கு பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

நாங்கள் தரிசனம் செய்த கோவில்கள்.

1. சினேக விகாரி மந்திர்.







2. ஹரிதாஸ் ஜி மகராஜ்






3.இஸ்கான் மந்திர்










4.பிரேம் மந்திர்
























சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...