ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர். (நவகைலாயம்)

 ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர். (நவகைலாயம்) தரிசனநாள்13.7.2023


நவகைலாயாத்தில் ஆறாவது கோவிலாகும்;. நவகிரகங்களில் சனிஸ்தலமாக விளங்குகிறது. அருள்மிகு சிவகாமி சமேத கைலாசநாதர் கோவில் மூன்று நிலை பிராகாரம் கொண்ட மிகப் பெரிய கோவிலாகும்.


நவகைலாயம் அறிவோம்.

திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ. தொலைவிற்குள் அமைந்திருக்கும் கீழ்கண்ட ஒன்பது சிவாலயங்கள் நவகைலாயம் என்று அழைக்கப்படுகின்றன. 1. பாபநாசம். 2. சேரன்மகாதேவி. 3. முறப்பநாடு. 4. கோடக நல்லூர். 5.குன்னத்தூர். 6. ஸ்ரீவைகுண்டம். 7. தென்திருப்பேரை. 8. ராஜபதி. 9. சேர்ந்தபூமங்கலம். நவதிருப்பதி போன்றே இந்த ஒன்பது கோவில்களும் ஒன்பது கிரகங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. 


நவகைலாயவரலாறு.

அகத்தய முனிவருக்கு சீடராகிய உரோசமுனிவர் சிவமுகத்தி வேண்டி சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் அருளால் அகத்திய முனிவர் உரோசமுனிவரை அழைத்து, ஒன்பது தாமரை மலர்களை கொடுத்து, தாமிரபரணி தொடங்குமிடத்தில் விட அந்த மலர்கள் கரை ஒதுங்கும் இடத்தில் சிவ பூஜை செய்தால் உனக்கு முக்தி  கிடைக்கும் என்று கூறினார். மலர்கள் ஒதுங்கிய அந்த கரை பகுதிகளே நவகைலாயம் என்று போற்றப்படுகிறது.


கோவில் சிறப்பு.

பூலோக கைலாசம் என்ற பெயர்பெற்றது. பூதநாதருக்கு தனி சன்னதி உள்ளது. மற்ற சிவாலயங்களிவ் வாகனமாக இருப்பர் இந்த பூதநாதர். வடக்கே காசிவிஸ்வநாதர், விசாலாட்ச்சிக்கு சன்னதிகள் உள்ளது. மிக பிரும்மாண்டமாக கலைநயத்துடன் கோவில் உள்ளது. அனைத்து சன்னதிகளையும் தரிசனம் செய்து, கற்றளி வேலைபாடுகளை கண்டு களிக்க குறைந்தது ஒருமணிநேரம் ஒதுக்க வேண்டும். 


குமரகுருபரர்.

“குமரகுருபரர்”  “கையிலை கலம்பகம்” என்ற நூலில் இந்த ஸ்ரீவைகுண்டத்தை பூலோககைலாயம் என்று குறிப்பிட்டுள்ளார். இவர் வாழ்ந்த வீடு இங்குள்ளது. கோவிலுக்கு அருகில் உள்ள அரசு பள்ளி குமரகுருபரர் என்ற பெயரில் இயங்குகிறது. 


1 comment:

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...