வானமாமலை. (திவ்யதேசம்)

 வானமாமலை. (திவ்யதேசம்) தரிசனநாள்-12.7.2023.


அமைவிடம்.

பல பெயர்களை கொண்டது இந்த புனிதஸ்தலம், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து 31கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 

திருவரமங்கை.


இவ்விடத்தில் பிறந்து வளர்ந்து திருமாலை தாயார் அடைந்தார். இதன் காரணமாக திருவரமங்கை என்ற பெயர் பெற்றது இந்த ஊர்.

நாகணைசேரி.

ஆதிசேஷன் தவம் செய்து திருமாலுக்கு அணையாக இருந்ததால் இந்த பெயர்.

நான்குநேரி.

மிக பெரிய நீர்நிலையை நான்கு ஏரியாக பிரித்தனர். நடு பகுதி கூர்மையாக அமைந்தது. நான்கு+ கூர்+ ஏரி = நாங்குநேரியானது.

உரோசமஷேத்ரம்.

உரோசம முனிவர் தவம் இருந்து, திருமாலை தரிசித்த தலம்.

வைஷ்ணவத்தில் ஒன்பது திருதலங்களில் பெருமாள் சிலாரூபமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவையாவன “1. ஸ்ரீரங்கம், 2.ஸ்ரீமுஷ்னம், 3. முக்திநாத் (நேபாளம்), 4, நைமிசாரண்யம், 5.பத்ரிநாத், 6.திருப்பதி, 7. புஷ்கரம். 8. வானமாமலை.

தலவரலாறு


ஆழ்வார் திருநகரி மன்னன் காரி, குழந்தை வரம் வேண்டி, திருக்குறுங்குடி என்ற திவ்ய தேசத்திற்கு சென்றான். நம்பிராயர் (திருக்குறுங்குடி பெருமாள் பெயர் நம்பிராயர்) எப்படி பட்ட குழந்தை வேண்டும் என்று கேட்கிறார். உங்களை போன்று என்கிறான் அரசன். இங்கிருந்து கிழக்கே நான்கு ஏரிகள் சூழும் இடத்தின் நடுவில் கூர்மையாக உள்ள பகுதியை அகழ்ந்தால் வானமாலை (நாங்குநேரி பெருமாள், பெயர் வானமாமலை(எ)தோத்ரிநாதன்) தென்படுவார். அவரிடம் உன் வேண்டுதலை கூறு என்றார். இவரே வானமாமலை பெருமாள். 

கருவறை சிறப்பு.


ஆதிஷேன் குடைபிடிக்க வைகுண்டபதியான வானமாமலை பெருமான் அமர்ந்த கோலத்தில, ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவியுடனும் வீற்றிருக்கிறார். ஊர்வசியும், திலோத்தமையும் சாமரம் வீசுகின்றனர். பிருகு, மார்கண்டேய, முனிவர்கள் மற்றும் சூரியன் போன்றோர் திருமாலை சேவித்தப்படி கருவறையில் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் கருடாழ்வார், விஷ்வக்சேனர் உள்ளனர். இந்த 13 பேரும் சிலாருபமாக உள்ளனர். (சுயம்புமூர்திகள்.)

பிற சன்னதிகள்.

ஞானபிரான், லட்சுமி, நாராயணர், வேணுகோபாலன், தசாவதார மூர்திகள், ராமர், கிருஷ்ணர், சக்கரத்தாழ்வார், ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

குலசேகரமண்டபம்.

நம்மாழ்வாரை தவிர 11 ஆழ்வார்கள் வீற்றிருக்கின்றனர். கருவறை பிரகாரத்தில் 32 ரிஷிகள் உள்ளனர். சேற்றுதாமரை தீர்த்தம், திருப்பார்கடலுக்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. சாபம் மற்றும் நம்முடைய பாபம் தீர்ககூடியதாகவும்  நம்பப்படுகிறது. 

தைலகாப்பு.

7நிலை ராஜகோபுரத்துடன் கூடிய இந்த கோவில் வானமாமலை பெருமாளுக்கு, தைலாபிஷேகம்(எண்ணெய்) செய்யப்பகிறது. இந்த எண்ணெய் ஒரு கிணற்றில் சேகரிகப்படுகிறது. உடல் உபாதை தீர்க்கும் மருந்தாக எண்ணி பக்தர்கள் வாங்கி செல்கின்றனர். 

நம்மாழ்வார்.

தலமைபீடமாக உள்ள இந்த ஆலயத்தில், 11 பாடல்களை பாடியுள்ளார் (மங்களாசாசனம்) நம்மாழ்வார். சடாரியில் நம்மாழ்வார் உருவம் உள்ளது. மாலை 5 மணியளவில் கூட்டமே இல்லாத நேரத்தில் இவ்வூரில் வசிக்கும் ஒரு வைணவர் எங்கள் கூடவே வந்து கோவிலின் சிறப்பை எடுத்துரைத்தார். ஒருமணிநேரம் வழிபட்டு, மனநிறைவுடன் திரும்பினோம்.  


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...