ராஜபதி (நவகைலாயம்). தரிசனநாள்-13.7.2023.
நவகைலாயத்தில் எட்டாவது தலமாகவும், நவகிரகங்களில் கேது ஸ்தலமாகவும் உள்ளது இந்த கோவில். “தென்காளஹஸ்தி” என்று அழைக்கப்படுகிறது. “கண்ணப்பநாயனாருக்கு” தனி சன்னதியுள்ளது.
நவகைலாயம் அறிவோம்.
திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ. தொலைவிற்;குள் அமைந்திருக்கும் கீழ்கண்ட ஒன்பது சிவாலயங்கள் நவகைலாயம் என்று அழைக்கப்படுகின்றன. 1. பாபநாசம். 2. சேரன்மகாதேவி. 3. முறப்பநாடு. 4. கோடக நல்லூர். 5.குன்னத்தூர். 6. ஸ்ரீவைகுண்டம். 7. தென்திருப்பேரை. 8. ராஜபதி. 9. சேர்ந்தபூமங்கலம். நவதிருப்பதி போன்றே இந்த ஒன்பது கோவில்களும் ஒன்பது கிரகங்களை அடிப்படையாக கொண்டுள்ளது.
நவகைலாயவரலாறு.
அகத்தய முனிவருக்கு சீடராகிய உரோசமுனிவர் சிவமுகத்தி வேண்டி சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் அருளால் அகத்திய முனிவர் உரோசமுனிவரை அழைத்து, ஒன்பது தாமரை மலர்களை கொடுத்து, தாமிரபரணி தொடங்குமிடத்தில் விட அந்த மலர்கள் கரை ஒதுங்கும் இடத்தில் சிவ பூஜை செய்தால் உனக்கு முக்தி கிடைக்கும் என்று கூறினார். மலர்கள் ஒதுங்கிய அந்த கரை பகுதிகளே நவகைலாயம் என்று போற்றப்படுகிறது.
கோவில் பற்றிய செய்தி.
400 வருடங்களுக்கு முன் தாமிரபரணியாற்று வெள்ளத்தில் முற்றிலும் அழிந்து விட்ட நிலையில் “கோவில்பட்டி கைலாஷ் டிரஸ்ட”; மூலமாக ராஜபதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டு 2008 பூமி பூஜை செய்து 2010 ல் “ஏழு நிலை ராஜகோபுரத்துடன”; கோவில் அமைத்து மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment