திருக்குளந்தை (எ) பெருங்குளம்.

 திருக்குளந்தை (எ) பெருங்குளம். (12.7.23).

திவ்யதேசங்களில் ஒன்றாகவும், நவதிருப்பதியில் ஏழாவது திருப்பதியாகவும், நவகிரகங்களில் சனிஸ்தலமாக இந்த இடம் விளங்குகிறது.


“கூடச்சென்றேன் இனியென் கொடுக்கேன் கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம் பாடற்றொழிய இழிந்து வைகல் பல்வளையார் முன் பரிசழிந்தேன் மாடக்கொடி மதிற் தென் குளந்தை வண்குடபால் நின்ற  மாயக்கூத்தன் ஆடற்பறயையுர்த்த வல்போர் ஆழி வளவனையாதரித்தே”

கிழக்குமுகமாக நின்ற கோலத்தில் இரண்டு தாயாருடன் இருக்கும் பெருமான் வேங்கடவாணன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். உற்சவர் மாயக்கூத்தன் என்று அழைக்கப்படுகிறார்.

வரலாறு.

வேதாசரன், குமுதவல்லி என்ற தம்பதியினர் குழந்தைவரம் வேண்டி வேங்கடவாணனை வேண்டுகின்றனர். தாய் லெஷ்மியே இவர்களுக்கு மகளாக பிறக்கிறார். திருமணவயதில் பெருமானை அடைகிறார். ஆண்டாள் போன்றே இவரது வரலாறு உள்ளது.

பிரகஸ்பதி.

பெண்ஆசையால் ஏற்பட்ட சாபத்திறக்கு இத்தல பெருமானை வணங்கி சாபவிமோசனம் பெருகிறான் பிரகஸ்பதி.


மாயக்கூத்தன்.

நூற்றுக்கு மேற்பட்ட பெண்களை மணம் முடிக்க ஒரு அசுரன் நினைத்து பல பெண்களை சிறைபிடிக்கிறான். இதன் காரணமாக அசுரனை வென்று அவன் தலையை கொய்து அதன் மேல் கூத்தடியதால் மாயக்கூத்தன் என்ற பெயர் பெற்றார்.

கருடன்.

பெருமானை நான் தான் சுமக்கிறேன் என்ற ஆணவம் ஏற்பட்டது, இதை அறிந்த பெருமான் கருடனை சுமந்து செல்கிறார். ஆணவம் அழித்ததலம்.

    


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...