தீவனூர். (பொய்யாமொழி விநாயகர்) தரிசனநாள் 4..8.2023.
அமைவிடம்.
திண்டிவனத்தில் இருந்து செஞ்சி செல்லும் வழியில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலை, நாங்கள் பாண்டியில் வசிக்கும் காலத்தில், மாசிமகம் தீர்த்தவாரிக்கு வரும், இறைவனில் ஒன்றாக இந்த விநாயகர் இருந்ததால், நாங்கள் இந்த விநாயகரை அறிந்து கொண்டோம்.
நெல்குத்தி சாமி.
மாடு மேய்க்கும் சிறுவர்கள் மரத்தடியில் அமர்ந்து இருக்கும் நேரத்தில் நெல்மணிகளை கல் வைத்து உடைத்து வந்தனர். ஒருநாள் கல்லொன்று கிடைக்கிறது. அந்த கல் நெல்குத்துவதற்க்கு மிகவும் வசதியாக இருந்தது. நெல்லை இந்த கல் அருகில் வைத்து விட்டு செல்லும் நேரத்தில் எல்லாம், மீண்டும் வந்து பார்க்கும் சமயத்தில், நெல்மணிகள் குத்தி அரிசியாக இருந்ததை பார்த்த இந்த சிறுவர்கள் இந்த கல்லிற்க்கு “நெல் குத்தி சாமி” என்று பெயரிட்டனர். இதை அறிந்தவகள் இந்த கல்லை தூக்கி அருகில் உள்ள குளத்தில் எரிந்தனர். அந்த கல் இருந்த இடம், நீர் குமிழியை உண்டு செய்து, தான் இருக்கும் இடத்தை மக்களுக்கு உணர்த்தியது. இதை அறிந்த இந்த கிராமத்தலைவர் இந்த கல்லை இறைவனாக பிரதிஷ்டை செய்து கோவிலாக உருவாக்க அனுமதித்தார்.
பொய்ய மொழி விநாயகர்.
ஒரு மிளகு வியாபாரி இந்த கோவிலில் தங்கிய சமயத்தில், இறைவனுக்கு செய்யும் நிவேதனத்திற்க்கு மிளகு தேவைப்படுகிறது. அவர்கள் இந்த மிளகு வியாபாரியை மிளகு கேட்க அந்த வியாபாரி, இந்த மூட்டையில் உளுந்துதான் உள்ளது என்கிறார். மறுநாள் வியாபாரி வியாபார நிமித்தமாக செல்ல வேண்டிய இடத்திற்;கு சென்று, விலை பேசி முடித்து பொருளை கொடுத்தவுடன், வாங்கியவர் சரிபார்க்கும் சமயத்தில் மூட்டையில் உள்ளது ஊளுந்து என்று தெரிந்து, வியாபாரியை கடிந்து கொள்கிறார். வியாபாரி தன் தவறை உணர்ந்து நெல் குத்தி சாமியை வேண்ட, உளுந்து அனைத்தும், மீண்டும் மிளகாக மாறியது. வியாபாரி சொன்ன பொய்யை உண்மையாக மாற்றியதால், “பொய்யாமொழி” என்ற பெயர் பெற்றார்.
ஆலைய சிறப்பு.
2019 ஆம் ஆண்டு தரிசனத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
1. சுயம்பு மூர்தியான இவர் லிங்கவடிவிலேயே உள்ளார். பாலபிஷேகம் செய்யும் நேரத்தில், லிங்கத்தில் உள்ள விநாயகரை தரிசிக்கலாம்.
2. மூன்று ஆலமரங்கள் உள்ளன. இவை விழுதில்லாமல் இருக்கிறது. இந்த மூன்று ஆலமரங்களும் மும்மூர்திகளாக மக்களால் வணங்கப்படுகிறது.
No comments:
Post a Comment