சேர்ந்தபூமங்கலம் (நவகைலாயம்) தரிசனநாள்-13.7.2023.
சௌந்தரநாயகி(எ) அழகியபொன்னமை சமேத கைலாசநாதர் திருக்கோவில். நவகைலாயத்தில் ஒன்பதாவது தலம். நவகிரகங்களில் சுக்கிரன் தலம். 1000 வருடங்களுக்கு மேல் பழமைவாய்ந்த இந்த கோவில் இடிபாடுடன் கூடிய நிலையில் இருந்தாலும், கர்பகிரகத்தில் உள்ள லிங்கதிருமேனியை தொட இங்கு இருக்கும் அன்பர்கள் விரும்பவில்லையாம்.
நவகைலாயம் அறிவோம்.
திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ. தொலைவிற்;குள் அமைந்திருக்கும் கீழ்கண்ட ஒன்பது சிவாலயங்கள் நவகைலாயம் என்று அழைக்கப்படுகின்றன. 1. பாபநாசம். 2. சேரன்மகாதேவி. 3. முறப்பநாடு. 4. கோடக நல்லூர். 5.குன்னத்தூர். 6. ஸ்ரீவைகுண்டம். 7. தென்திருப்பேரை. 8. ராஜபதி. 9. சேர்ந்தபூமங்கலம். நவதிருப்பதி போன்றே இந்த ஒன்பது கோவில்களும் ஒன்பது கிரகங்களை அடிப்படையாக கொண்டுள்ளது.
நவகைலாயவரலாறு.
அகத்தய முனிவருக்கு சீடராகிய உரோசமுனிவர் சிவமுகத்தி வேண்டி சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் அருளால் அகத்திய முனிவர் உரோசமுனிவரை அழைத்து, ஒன்பது தாமரை மலர்களை கொடுத்து, தாமிரபரணி தொடங்குமிடத்தில் விட அந்த மலர்கள் கரை ஒதுங்கும் இடத்தில் சிவ பூஜை செய்தால் உனக்கு முக்தி கிடைக்கும் என்று கூறினார். மலர்கள் ஒதுங்கிய அந்த கரை பகுதிகளே நவகைலாயம் என்று போற்றப்படுகிறது.
இக்கோவிலில் எங்கள் நிலை.
அர்சகர் (குருக்கள்) இருப்பது போன்று தெரியவில்லை. ஒரு காவலாளி உள்ளார் அவர் எப்பொழுதுமே கோவிலில் தான் இருப்பாராம். நாங்கள் மதியம் 12.30மணிக்கு சென்றோம். சூடத்தட்டை குடுத்து என்னை தீபாராதனை செய்ய சொன்னவுடன் நான் அதிர்சிசியில் உறைந்து போனேன். பின் சுதாரித்துக்கொண்டு, கர்பக்கிரகத்திற்க்கு சற்று தள்ளி நின்று தீபாராதனை செய்துவிட்டு, எனக்கு தெரிந்த ஒரு திருவருட்பா பாடினேன்.
இக்கோவில் அதிசயம்.
21.12.2020 ஆம் தேதி அன்று இரவு 6.40 மணிமுதல்-8.15 மணிவரை, இக்கோவில் லிங்கத்;தின் மீது ஒளிச்சுடர் ஏற்பட்டது. இதை இக்கோவில் அருகில் உள்ள பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வின் போது பக்தர்களின் எண்ணிக்கை சனி பிரதோஷவழி பாடு அன்று வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு இணையாக இருந்தது என்று இக்கோவில் பாதுகாவலர் தெரிவித்தார்.
பெயர்காரணம்.
ஒன்பது தாமரைகளில் இறுதியாக கரை சேர்ந்த இடம் என்பதால் சேர்ந்த பூமங்கலம் என்று பெயர் பெற்றது. சேர்ந்த +பூ+ மங்கலம். மங்கலம் என்றால் இறுதி, முடிவு என்று பொருள்.
No comments:
Post a Comment