தென்காசி விஸ்வநாதர். (தரிசனநாள்-14.7.2023).
வாரணாசி என்ற உத்ரபிரதேச மாநில காசிக்கிணையான காசிகள்.
உத்ரகாசி- உத்ரகாண்ட் மாநிலம்
குப்தகாசி- உத்ரகாண்ட் மாநிலம்.
தென்காசி- தமிழ்நாடு.
சிவகாசி- தமிழ்நாடு.
இந்த ஐந்து காசிகளுமே சிறப்புடையது. ஒன்றுக்கு ஒன்று இணையான தலங்கள்.
அமைவிடம்.
தமிழ்நாடு மாநிலத்தில் தென்காசி மாவட்டத்தின்தலைநகராக உள்ளது இந்த நகரம். இந்த தென்காசியில், அருள்மிகு உலகம்மை சமேத காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது.
கோவில் வரலாறு.
பராக்ரம பாண்டியனால் கட்டப்பட்ட இந்த கோவிலில், உள்ள லிங்கம், மன்னனின் முன்னோர்கள் வழிபட்டதாகும். வடதிசையில் உள்ள வாரணாசி என்ற காசிக்கு பக்கதர்கள் நடந்தே சென்றனர்;. இதன்காரணமாக உடல்நலிவுற்று பலர் இறந்தனர். இதனால் இறைவன் மன்னனின் கனவில் வந்து எறும்பு ஊர்ந்து செல்லும் பாதையை அடையாளமாக கொண்டு அதன்பின் செல், கோவில் அமைக்கும் இடம் உனக்கு புலப்படும் என்று கனவில் தெரிவித்தார். மறுநாள் அவ்வாறே மன்னன் சென்றான். சிவலிங்கத்தை கண்டவுடன் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தான். உடனே பிரம்மான்டமான கோவிலை மகேசனுக்கு அர்பணித்தாதன் பாண்டியன்.
கோவில் பற்றிய செய்தி.
கி;.பி; 1445 ஆம் ஆண்டு கோவில் கட்ட துவங்கினான் அரசன். கிழக்கில் இருந்து மேற்கே நீளம் -554 அடி. தெற்கில் இருந்து வடக்கே அகலம் -318 அடி. கோவில் கோபுரம் இடிதாக்கி, சிதலம் அடைந்தது. இதன்காரணமாக 1990- ஆம் ஆண்டு 180 அடி உயர, 7-நிலை ராஜகோபுரம் மிகபிரம்மாண்டமாக கட்டப்பட்டது.
விஸ்வநாதர்.
சுயம்புலிங்கம், கிழக்குமுகமாக , சற்றே பிரம்மாண்டமாக, நாகாபரணம் அணிந்து சிறப்பு அலங்காரத்துடன் காட்சி தருகிறார்.
உலகம்மை.
கிழக்கு நோக்கி இரண்டுகரங்களுடன், ஒரு கையில் தாமரை மலருடன் காட்சி தருகிறார். கையில் இருக்கும் தாமரை முகத்திலும் மலர்ந்துஇருந்தது. சன்னதி சுவற்றில் அபிராமி அந்தாதி சில பாடல்கள் எழுதப்பட்டிருந்தது. அதைபார்த்து பாடி நான் மகிழ்ந்தேன்.
பராசக்தி பீடம்.
அகத்தியரால் நிர்மாணிக்;கப்பட்ட பீடமே சக்தி பீடம். பீடம் எதிரே சிவலிங்கம் அமைந்துள்ளது.
விழாக்கள்.
பலவிழாக்கள் சிறப்பாக கொண்டாடினாலும், மாசி மகம், தேர், தீர்த்தவாரி மற்றும் ஐப்பசி உத்திரம் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கோவில் வாயில் சிறப்பு.
இதை நாங்களும் உணர்ந்தோம்.
;
No comments:
Post a Comment