திருப்புளியங்குடி. (பூமிபாலகர்)

திருப்புளியங்குடி. (பூமிபாலகர்) 12.7.2023


திவ்யதேசங்களில் ஒன்றாகவும், நவதிருப்பதிகளில் ஒன்றாகவும், நவகிரகங்களில் புதன் தலமாகவும் விளங்குகிறது.

 பெருமான் காய்சினிவேந்தன் என்றும், தாயார் புலியங்குடிவல்லி என்றும், கிழக்குமுகமாக கிடந்த கோலத்தில் மரக்காலை தலைக்கு வைத்து கொண்டு சயனித்திருக்கிறார் பெருமான்.

12 அடி நீளம் கொண்ட இறைவனை பிரகாரத்தின் சாளரம் வழியாக சேவித்தால் பாததரிசனம் கிடைக்கும்.

பூமிபாலகர்.


பெருமானிடம் கோபித்து கொண்டு பூமாதேவி பூலோகம் சென்று விடுகிறார். கோபத்தை தணித்து அழைத்துவந்ததால், பூமிபாலகர் என்ற பெயர் பெற்றார்.

இந்திரன் சாபவிமோசனம் அடைந்த இடம்.


மான் வடிவில் இருந்த முனிவரை அடையாளமறியாமல் அம்பெய்தி அடைந்த பாவத்தை இந்த தலப்பெருமானை வணங்கி சாபவிமோசனம் அடைகிறார்.  

“பண்டைநாளே நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின் கோயில் சீய்த்துப்பல்படிகால் குடி குடி வழிவந்து ஆட் செய்யும் தொண்டரோர்கருளிச் சோதிவாய் திறந்து உன் தாமரைக்கண்களால் நோக்காய் தெண்திரைப் பொருநல் தண்பணை சூழ்ந்த திருப்புளியங்குடி கிடந்தானே.” 


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...