மைலம் (முருகன்). தரிசனநாள்-4.8.23.
தலபுராணம்.
ஒரு அரசன் வேட்டையாடும் நேரத்தில் மான் மீது எய்திய அம்பானது, தவறுதலாக அருகில் அமர்ந்திருந்த முனிவர் மீது பட்டு அவர் உயிர்துறக்கிறார். அறியாமல் செய்த இந்தபாவத்தை எப்படி போக்கி கொள்வது என்று அந்த மன்னன் வருந்தி, ஒரு முனிவரை தஞ்சம் அடைகிறார்.
இந்த முனிவர் ஒரு முருக பக்தர். சஷ்டி, கிருத்திகை, விசாகம், போன்ற முருகனுக்கு உகந்த நாட்களில், சிறப்பு தியானம் செய்து, புகழ்பெற்ற முருக பக்தராக விளங்கியவர். இவர் வீட்டில்லில்லாத நேரத்தில் சென்று விடுகிறான் மன்னன். முனிவரின் மகன் காரணம் கேட்க மன்னன் தான் செய்த தவறை எடுத்துறைக்கிறார். உடனே இந்த இளைஞன், மனமுருக மூன்று முறை, முருகா என்று சொன்னாலே பாவம் நீங்கபெருவாய் என்று கூறுகிறார் முனிவரின் மகன்.
இதை தன் தந்தையிடம் கூற, முனிவரோ ஒருமுறை முருகா என்றே சொன்னாலே நம் அனைவரின் பாபத்தையும் போக்குமே. நீ ஏன் மூன்று முறை என்று சொன்னாய், இது இறைவனின் கருணை தன்மையை குறைக்கிறது. இறைவனின் கருணையை மக்களிடையே கொண்டு செல்வது நம் கடமை. அதை நீ சரிவரசெய்யாத காரணத்தால், கங்கை கரையில் பிறந்து குகன் என்ற பெயரில் வளர்ந்து பின் இறைவனடி சேருவாய் என்று கூறுகிறார். முனிவர் தவம் செய்த இந்த இடமே மயிலம். மற்றும் இறைவன் “முருகன்” என்ற பெயரிலேயே அருள் பாலிக்கறார்.
மயில் பூஜித்த தலம்.
1. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கற்பகாம்பாள் மயிலுருவில் ஈசனை பூஜித்த இடம்.
2. சூரபத்மன் மயில் போன்று குன்றாக மாறி முருகனை துதித்த தலம் மயிலம்.
மயில்வாகனம்.
சூரபத்மனை போரில் உயிரை மாய்க்காமல், கருணை காட்டியதால், மயில் வாகனமாக வரம் கேட்டான். மயூராசலமாக தவம் இருந்து, மயில்வாகனமாக அருள்பெற்றான் சூரபத்மன்.
பாலசித்தர்.
சிவகணத்தில் ஒருவர் “சங்குன்னர்” இவர் நாரதர் வழிகாட்டலின்படி “பாலசித்தராக” மயிலம் வந்து கடும் தவம் செய்தார். அவர் தவத்திற்க்கு மனமிறங்கி “சித்த கன்னியர்”; வடிவில வந்தனர் வள்ளியும், தெய்வானையும். இவர்களிடத்தில் விளையாட நினைத்த முருகன் வேடன் வடிவில் வந்து போரிடுகிறார். வேடன்வடிவில் வந்திருப்பது முருகன் என்று தெரிந்து பால சித்தர் வணங்குகிறார். சித்தரின் விருப்பப்படி வள்ளி தேவசேனா சமேத முருகராக திருமணகோலத்துடனும், மயில் வாகனத்துடன் (சூரபத்மன்) காட்சி தருகிறார் முருகன் இந்த மயிலம் தலத்தில்.
பாலசித்தர் சன்னதி.
இந்த சித்தருக்கு தனி சன்னதியுள்ளது. இவரின் வழி தோன்றலே, “சிவஞான பாலதேசிகன்” என்று இறை பணி செய்துவருகின்றனர். இந்த கோவிலில்.
கிழக்குவாசல் சிறப்பு.
மார்கழி மாதம் திருவாதிரைநட்சச்திரம் (ஆருத்ரா தரிசனம்) அன்றும், ஆனி திருமஞ்சனம் அன்று கிழக்குவாயிலில் பஞ்சமூர்த்தி ஆரத்தியும் சிறப்பாக நடைபெறுகிறது. கைலாய காட்சிக்கு சமமானது என்று மக்கள் நினைத்து சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
ஆன்மீகத்தில் மூன்று மயில் அறிவோம்.
அ. அசுர மயில். சூரபத்மன் மயிலாக உள்ளதால்.
ஆ. தேவமயில். திருப்பரங்குன்றம் தெய்வானை திருமணத்தில் பிறந்த வீட்டு சீதனமாக கொண்டுவந்தது.
இ. தேவேந்திர மயில். சூரசம்காரம் முடிந்தஉடன், தேவேந்திரன் முருகனுக்கு அளித்தது.
இந்த மயூராசலத்தில், எட்டரை அடி உயரத்தில் தங்கத்தில் மயில் வாகனம் உள்ளது.
"நாளென் செய்யும் வினை தானென் செய்யும் எனை நாடி வந்த கோளென் செய்யும் கொடுங்கூற்றென் செய்யும் குமரேசரிருதாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமுன் தோளும் கடம்பும் எனக்கு முன்னேவந்து தோன்றிடினே."
என்ற அருணகிரிநாதரின், கந்தரலங்கார பாடல் நினைவுடன் வீடு திரும்பினோம்.
No comments:
Post a Comment