தென்திருப்பேரை (நவகைலாயம்)

 தென்திருப்பேரை (நவகைலாயம்). தரிசனநாள்-13.7.2023.


நவகைலாயத்தில் ஏழாவது திருத்தலமாகவும், நவகிரகங்களில் புதன் தலமாகவும் உள்ளது. அழகியபொன்னம்மை சமேத கைலாசநாதர் என்ற பெயரில் சிவபெருமான் நமக்கு அருள்பாலிக்கிறார்.


கோவில சிறப்பு.

கைலாசநாதர் தாமரை வடிவ பீடத்தின் மீது லிங்க திருமேனியடன் காட்சி தருகிறார். நவகிரகங்களில் சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் குதிரைவாகனத்;தில் காட்சி தருகின்றனர். சிவன், அம்பாள், விநாயகர், முருகன் என்று அனைத்து சன்னதிகளும் தனித்தனியா, இயற்கை எழிலுடன் காணப்படுகிறது. 


நவகைலாயம் அறிவோம்.

திருநெல்Nலியில் இருந்து 30 கி.மீ. தொலைவிற்குள் அமைந்திருக்கும் கீழ்கண்ட ஒன்பது சிவாலயங்கள் நவகைலாயம் என்று அழைக்கப்படுகின்றன. 1. பாபநாசம். 2. சேரன்மகாதேவி. 3. முறப்பநாடு. 4. கோடக நல்லூர். 5.குன்னத்தூர். 6. ஸ்ரீவைகுண்டம். 7. தென்திருப்பேரை. 8. ராஜபதி. 9. சேர்ந்தபூமங்கலம். நவதிருப்பதி போன்றே இந்த ஒன்பது கோவில்களும் ஒன்பது கிரகங்களை அடிப்படையாக கொண்டுள்ளது. 


நவகைலாயவரலாறு.

அகத்தய முனிவருக்கு சீடராகிய உரோசமுனிவர் சிவமுகத்தி வேண்டி சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் அருளால் அகத்திய முனிவர் உரோசமுனிவரை அழைத்து, ஒன்பது தாமரை மலர்களை கொடுத்து, தாமிரபரணி தொடங்குமிடத்தில் விட அந்த மலர்கள் கரை ஒதுங்கும் இடத்தில் சிவ பூஜை செய்தால் உனக்கு முக்தி  கிடைக்கும் என்று கூறினார். மலர்கள் ஒதுங்கிய அந்த கரை பகுதிகளே நவகைலாயம் என்று போற்றப்படுகிறது.


முக்கொம்பு தேங்காய்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு துரை இந்த இடம் வந்தபோது இங்குள்ள தென்னந்தோட்டத்தில் உள்ள மரத்தில் இருந்து இளநீர் கேட்டதாகவும், அதற்க்கு தோட்டகாரன் இது கைலாசநாதருடையது அவரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று கூறினாராம். அதற்;கு அந்த துரை கைலாசநாதர் தோட்டத்து இளநீர் என்றால் “கொம்பாமுளைத்துள்ளது” என்றாராம்.  துரையின் பேச்சை மீறமுடியாமல் பரித்த தேங்காயில் உடனே இரண்டு கொம்பு முளைத்தாம். இந்த முக்கொம்பு தேங்காய் இன்றளவும் இந்த கோவிலில் உள்ளது.



No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...