வரகுணமங்கை (எ) நத்தம். 12.7.2023.
திவ்யதேசங்களில் ஒன்றாகவும் நவதிருப்பதிகளில் நிறைவான தலமாகவும், நவகிரகங்களில் சந்திரன் ஸ்தலமாகவும் உள்ளது.
ஆதிசேஷன் குடைபிடிக்க வலப்புறம் வரகுணமங்கை இடப்புறம் வரகுணவல்லியுடன் இருந்த (அமர்ந்த) கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
தலபுராணம்.
வேதவித் என்ற அந்தணன் பரமபதம் அடைய திருமாலை வேண்டுகிறார். தவம் மேற்கொள்ள வரகுணமங்கை என்ற இடம் சிறந்தது என்று பெருமான் வழி காட்டினார். அங்கு தவம் செய்த வேதவித்திற்க்கு தரிசனம் கிடைத்து, வைகுண்டம் சென்றார்.
பிற சிறப்பு.
உரோசமுனிவர், சத்தியவானுக்கு காட்சி கொடுத்த தலம்.
“புளியங்குடிக் கிடந்து வரகுணமங்கை இருந்து, வைகுந்தத்துள் நின்று தெளிந்த என்சிந்தை அகம்கழியாதே உன்னை ஆள்வாய் எனக்கு அருளி நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்து ஆடி நின்று ஆர்ப்ப பலிங்கு நீர் முகிலன் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காணவாராயோ.”
No comments:
Post a Comment