புளியறை (தட்சிணாமூர்த்தி). தரிசனநாள்-14.7.2023.
அமைவிடம்.
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து 8கி.மீ. தொலைவிலும், குற்றாலத்தில்; இருந்து 15கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மிகவும் ரம்யமான மலைதொடர் அருகில் அமைந்துள்ளது.
தென்காசி தரிசனத்தின் போது ஒருவர், இவ்வளவு தூரம் வந்து விட்டீர்கள் புளியறையை தரிசித்து விட்டு செல்லுங்கள் என்றார். இப்படி நாங்கள் அறிந்து கொண்டதே இந்த தலம்.
கோவில் புராணம் - 1.
தில்லை நடராஜருக்கு சைவசமயம் நலிவுற்றால் தொல்லை ஏற்பட்டது. தில்லைவாழ் அந்தணர்கள் மூலவர் நடராஜரை தூக்கிக்கொண்டு தென்திசை நோக்கி சென்றனர். பொதிகைமலையையும் தாண்டி சேரநாட்டை அடைந்தனர். புளியமரகாட்டில் ஒரு மரப்பொந்தில் நடராஜரை மறைத்து வைத்தனர். பகலிலும் இருள் சூழ்ந்த காடு அது. பின் அவர்கள் தில்லை திரும்பி விட்டனர். இதற்கிடையில் இந்த புளியமர காடு ஒருவனுக்கு செந்தமானது. அந்த மனிதன் ஒரு மர பொந்தில் நடராஜரை கண்டு மகிழ்ச்சியுற்றார். ஆனால் ஒருவரிடமும் இதை சொல்லவில்லை.
சிறிது காலம் கழித்து தில்லை வாழ் அந்தனர்கள் பெருமான் வைத்தஇடத்தை கண்டு பிடித்து சிலையை சிதம்பரத்திறக்கு கொண்டு சென்றனர்.
புளியமர உடமையாளர் நடராஜர் அங்கில்லாததை கண்டு மிகவும் வருந்தினார். தாம் யாருக்கும் தெரிவிக்காத காரணத்தால் இறைவன் மறைந்து விட்டாரோ என்று வருந்தி இறைவனை வேண்டினார். சிறிது நேரத்தில் ஒரு சப்தத்துடன் ஒரு லிங்கம் (சுயம்புமூர்தியாக) தோன்றியது.
கோவில் புராணம் -2.
குழந்தையில்லாத அச்சன் கோவில் அரசன் சிவபெருமானை வேண்டியதாகவும். தான் சுயம்புவாக இருக்கும் இடத்தை தெரிவித்து, கோவில் கட்ட பணித்து குழந்தை வரம் தந்ததாகவும் ஒரு கதை உள்ளது.
கோவில் சிறப்பு.
சிவாலயங்களில் பிராகாரத்தில், தெற்கு நோக்கி, தட்சிணாமூர்ததி சன்னதி இருக்கும். ஆனால் இக்கோவிலி;ல் சிவனுக்கும் நத்திக்கும் இடையில் தட்சிணாமூர்த்தி உள்ளார். அதாவது, சிவன், தட்சிணாமூர்த்தி, நந்தி மூவரும் ஒரே நேர் கோட்டில் காட்சி தருகின்றனர்.
27 படிகட்டுகள் ஏறி நாம் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு படிகட்டும் ஒவ்வொரு நட்சத்திரத்தை குறிக்கிறது.
ஏழில் நிறைந்த கானொளி, மற்றும் புகைப்படங்கள்.
No comments:
Post a Comment