காலாராமர், பஞ்சவடி, சீதாகூபா (நாசிக் ஒரு நாள் சுற்று)

 காலாராமர், பஞ்சவடி, சீதாகூபா நாசிக் ஒரு நாள் சுற்று. (தரிசனம் 29.12.2024)

நாசிக் 


மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் என்ற நகரம். இந்த நகரம் ராமாயணத்துடன்  தொடர்புடைய நகரம். ராமாயணகாலத்தில் ராமர், சீதை, இலக்குவன் இவர்கள் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்த இடமான பஞ்சவடி, இங்கேதான் உள்ளது. இந்த பஞ்சவடியில் வாழும் காலத்தில் தான் மாதா சீதை ராவணனால் கவர்ந்து செல்லப்படுகிறார். 

நாசிக் பெயர் காரணம்.

ராமாயணத்தில் சூர்பநகையின் மூக்கு இந்த இடத்தில் தான் இலக்குவனால் அறுக்கப்பட்டதால், இந்த ஊரின் பெயர் நாசிக் என்றானது.(நாசி-பொருள் மூக்கு).

பஞ்சவடி








பஞ்சவடி என்றால் ஐந்து மரங்கள் சூழ்ந்த இடம் என்று பெயர். ராமாயண காலத்து மரத்தை இன்றளவும் பார்கமுடிகிறது.  பஞ்ச- என்றால், ஐந்து. வடி-என்றால் மரம். 

குறிப்பு – "Epic Ramayana  Incidental Place" என்று மத்தியபிரதேசம், உத்ரபிரதேசம், மகாராஷ்ரா மாநிலத்திலும், நேபாளத்திலும், இலங்கையில் "இலங்கை ராமாயண தலங்கள்" என்றும் ராமாயணகாவிய தலங்களை   Blog வெளியிட்டுள்ளேன்.

சீதாகூபா





சீதா பிராட்டி தங்கி இருந்த குகை ஒன்று உள்ளது. இந்த குகையில் அவர் இருந்த இடம், மற்றும் ராம, லெஷ்மணர், சீதை, அனுமான் உருவங்கள் நாம் வணங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறிய குகை மரத்தால் சற்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

காலாராமர்









இந்த ராமருக்கான ஆலயம் 1782 ஆம் ஆண்டு ரங்கராவ் ஓடிக்கர் என்பவரால் கட்டப்பட்டது.  மரத்தால்லான இந்த பழமையான கோவில் இவரால், 12 ஆண்டுகாலம், 2000 ஊழியர்கள் கொண்டு கட்டப்பட்டது. கட்டிய காலத்தில் மிக அற்புதமாக கட்டப்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்றாக விளங்கியது. ராமர், லெஷ்மணர் சீதை இவர்களே பிரதான கருவறைக்குள் வீற்றிருக்கின்றனர். இந்த சிலைகள் கருப்பு நிற கல்லினால் வடிவமைக்கப்பட்டதால் காலாராமர் என்ற பெயர் பெற்றார் ராமர்.( காலா-பொருள் கருப்பு)ராமநவமி மிக சிறப்பாக இந்த கோவிலில் கொண்டாடப்படுகிறது.

ராம்குண்ட்





ராமரால் கோதாவரி என்ற புனித ஆற்றின் நீரில் நீராடுவதற்காக உருவாக்கப்பட்ட இடம். ஆனால் தற்சமயம் கோதாவரி இங்கு சாக்கடையாக ஓடுகிறது. இவ்வாறு தெரிவிப்பதற்கு மனவருத்தம் ஏற்பட்டாலும் உண்மையை கூறத்தான் வேண்டும். கோதாவரி பிறப்பிடமும் திரியம்பகேஷ்வர் ஆலயம் அருகில் தான் உள்ளது.

கபாலேஷ்வர் மகாதேவ்.






ராமகுண்ட் எதிரில் அமைந்துள்ள கோவில்.  இவ்வாறு பல இடங்கள் நாசிக்கில் உள்ளன.

பயணஅனுபவம்.

நானும் என் கணவரும், இந்த பயணத்தை சொந்தமாக திட்டமிட்டு பயணித்தோம்.  இது மகிழ்சியையும், நிறைவையும், பெருமை, மற்றும் புதிய அனுபத்தையும் கொடுத்தது. மற்ற பயண ஏற்பாட்டாளர்கள், கோவில்களை மட்டுமே திட்டமிட்டதாலும், முன்பே நாங்கள் தரிசனசெய்த புனித்தலங்கள் அட்டவணையில் இருந்ததாலும், நாங்கள் சுயமாக பயணம் செய்ய முடிவெடுத்தோம். 

சீரடி, சனிசிங்கனாப்பூர், கோலாப்பூர் மகாலெஷ்மி, பூனா கணபதி கோவில்கள், பண்டரிபுரம் என்ற ஆன்மீக தலங்களும், எல்லோராகுகை, லோனாவாலா, என்று பல இடங்களை பல்வேறு தருணங்களில் நாங்கள் சுற்றுலாவாக சென்ற காரணத்தால், எங்களுக்கு கிடைத்த ஒருவாரகால அவகாசத்தை பயன்படுத்தி இந்த பயணதிட்டத்தை திட்டமிட்டோம். 

பயணதிட்டம்.

23.12. 24 – சென்னை – பூனா (புகைவண்டி)

24.12.24 – பூனா – பரலிவைத்யநாத். (புகைவண்டி- இரவு பயணம்)

25.12.24 -  பரலிவைத்யநாதம் மற்றும் நாகநாத் தரிசனம்.

26.12.24 – பரலிவைத்யநாம் - ஒளரங்காபாத் பயணம் (புகைவண்டி) மற்றும் கிரினேஷ்வர் தரிசனம். 

27.12.24 அஜந்தா குகை சுற்றுலா

28.12 24- ஒளரங்காபாத் - நாசிக் புகைவண்டி பயணம், திரியம்பகேஷ்வர் மற்றும் நாசிக் தரிசனம்

29.12.24. பீமாசங்கர் தரிசனம் செய்து பூனா பயணம் பேருந்தில்.

30.12.24 – மாலை பூனா – சென்னை புகைவண்டி பயணம்

இந்த பயணதிட்டத்தில் மறுபாடுகள் நிறைய ஏற்பட்டது. பீமாசங்கர் தரிசனம், பீமாசங்கருக்கும், நாசிக்குக்கும் போதிய பேருந்து வசதியின்மையால்;; எங்களால் ஒத்திவைக்கப்பட்டது.

நாசிக் பயண அனுபவம்.

நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து ராம்குண்ட் என்ற இடத்திற்கு Uber ஆட்டோ பிடித்து சென்றோம். மேலே குறிப்பிட்ட அனைத்து இடங்களும் 6 கி.மீ. தொலைவுக்குள் ஒன்றுக்கொன்று அருகில் அமைந்துள்ளது. நாங்கள் எங்களின் மதிய உணவை முடித்துக்கொண்டு மீண்டும் நாசிக் தக்கரே பஜார் பேருந்து நிலையத்தில் இருந்து பூனாவுக்கு பேருந்தில் பயணித்து, 30.12. அன்று மாலை 4 மணி புகைவண்டியில் சென்னை திரும்பினோம். ஹர ஹர மகாதேவா. சுபம்.


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...