அரசு பேருந்தும் மகளிர் பயணசீட்டு சலுகைகளும். (கட்டுரை)

  அரசு பேருந்தும் மகளிர் பயணசீட்டு சலுகைகளும். (கட்டுரை) 

28 மாநிலங்களையும், 8 யூனியன் பிரதேசங்களையும் கொண்ட நமது நாட்டில், 21 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களுக்கும், சுற்றலா பயணியாக சென்றிருக்கிறேன். ஆனால் பொது பேருந்து (Private Public Transport) மற்றும் அரசு பேருந்தை மிக சில மாநிலங்களில் மட்டுமே பயன்படுத்தியுள்ளேன். கேரளா மற்றும் சிக்கிம் மாநிலத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பும், கடந்த மூன்று ஆண்டுகளுக்குள், தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்ரா மாநிலத்தில் பயணம் செய்யும் போது, மகளிர் பயணசீட்டில் உள்ள சலுகையும், ஜனவரி 8 ஆம் தேதி நான் படித்த செய்தியும் என்னை இந்த Blog எழுத தூண்டியது.

 click the above words PADITHA SAIATHIKAL then you read the DECCANHERALD  NEWS

பயனாளிகள் தகுதி அட்டை

இவ்வாறு ஒன்றை அரசு உண்மையாகவே  தேவை உள்ள மகளிரை அடையாளம் கண்டு அவர்களுக்கு, ஒரு தகுதிஅட்டையை வழங்கி, அவர்களுக்கு மட்டும் இந்த சலுகை கொடுத்திருந்தால்  மிகசிறப்பானதாக இருந்திருக்கும். 

ராஜஸ்தான்

மகிளா சிறப்பு சலுகை என்று 30 சதவிகிதம் கொடுக்கின்றனர். 

கர்நாடகா



இந்த மாநிலதில் அந்த மாநில பெண்களுக்கு மட்டுமே சலுகை கொடுக்கின்றனர். பயணிக்கும் ஒவ்வொரு பெண் பயணியரும் கட்டாயமாக ஆதார் அட்டையை நடத்துனரிடம், ஆதாரமாக காட்ட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

மகாராஷ்ரா

https://www.thehindu.com/news/cities/mumbai/women-to-get-50-concession-on-state-run-msrtc-buses-in-maharashtra/article66630066.ece

தமிழ்நாடு போன்று பெண்பயணியை பார்த்தவுடன், 50%  concession பயணசீட்டை உடனே வழங்கி விடுகின்றனர். ஆனால் ஆண்முதியவர்களுக்கு 50 சதவிதம் சலுகை இருந்தாலும் இவர்கள் அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்தான் என்பதற்கு  அடையாளமாக ஆதார்அட்டையை பயன்படுத்துகின்றனர்.


தமிழ்நாடு

பெண்பயணியர்களை பார்தவுடனே  விலையில்லா பயணசீட்டை வழங்கி விடுகின்றனர்.


பாண்டிச்சேரி யுனியன்பிரதேசம்

இங்கு நான் 20 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். எனக்கு தெரிந்து இங்கு அரசு நகர பொது பேருந்து (Government Town Bus) என்பது பெயரளவில் மட்டுமே இருந்தது.

நான் சொல்லவந்த செய்தி

ஒருசில வாகனங்களை மட்டுமே வைத்துள்ள தனியார் வாகன உரிமையாளர்கள், வாகனதரத்தையும், சுத்தத்தையும் காக்கும் செயலில், மிக சிறப்பாக செயல்படும் நேரத்தில், அதிக வருமானம் ஈட்டும் துறையாக உள்ள அரசு போக்குவரத்தில்  மட்டும் வாகனங்களை தரமானதாகவும், சுகாதாரத்துடனும்  இயக்கமுடியவில்லையா? இந்த சலுகைகளை யாரும் எதிர்பார்பது போல் தெரியவில்லை. தனிமனித செலவு என்று பார்தால் பயணசீட்டின் மதிப்பு மிகவும் குறைவு. ஆனால் மக்களுக்கு குறிப்பாக எவ்வளவோ நலதிட்ட உதவிகளை பலவகையிலும் செய்ய வாய்பும், துறையும் இருக்கும் பொழுது ஏன் தேவையில்லாத சலுகைகளை தருகின்றனர் என்றே புரியவில்லை. நான் பயணித்த இந்த இந்த நான்கு மாநிலத்தில் கர்நாடகா பேருந்து சற்று தரமாகவே உள்ளது. 

ஓட்டுனரின் நிலை

நம் நாட்டின் மக்கள்தொகை அதன் காரணமாகவுள்ள மக்கள் நெரிசல், மற்றும்  தரமில்லாத பேருந்தை இயக்குவதில் உள்ள கடினத்தை யோசித்தால், மிக பரிதாபத்திற்கு உரியவர்களாகின்னர் ஓட்டுனர்கள்.  

நடத்துனர்கள்.

அவர்கள் எங்கு பிடித்தாலும் எங்கு சாய்ந்தாலும் எப்பொழுது நீட்டும் கம்பிகளும், துருபிடித்த கம்பிகளும் குத்துமோ என்ற அச்சத்துடனே செயல் பட வேண்டியுள்ளது. 

நடத்துனர் இல்லா ஓட்டுநரின் நிலை. (ஒரு உதாரண செய்தி)  

இரண்டு நாட்களுக்கு முன்பு 19.1.25 அன்று நாங்கள் திருச்சியில்லிருந்து பெங்களுர் பயணித்தோம். இந்த பேருந்து கர்நாடக மாநில "ஐராவத்" என்ற பேருந்து. இதில் நடத்துனர் இல்லை. ஓட்டுனரே அனைத்து பயணிகளின் பயனசீட்டை பரிசோதித்து, அவர்களின் உடமைகளை பேருந்து கீழ்பாகதில் உள்ள உடமை சேகரிப்பு பகுதியில் வைத்து பின்னர் வண்டியை ஓட்டதுவங்கினார். இதுகூட கடினமில்லை என்று சொல்லலாம். அதிகாலை எலக்ட்ரானிக் சிட்டி, சிலக்போடு போன்ற இடங்களில் பேருந்து நெரிசலுக்கு இடையில் இந்த 6 சக்கரம் கொண்ட பேருந்தை ஓரமாக நிறுத்தி, இறங்கும் இடங்களின் பெயர்களை பெரிய குரலில் கூறி பயணியர்களின் உடமைகளை எடுத்து கொடுத்து பின் ஓட்ட துவங்குகிறார்.


இவர்களுக்கு முறையான மற்றும் ஒழுங்கான நேரத்தில் சம்பளம் வழங்குவதில்லை மற்றும் ஓய்பெற்றவர்களின் பெரும் தொகை முழுமையாக வழங்குவதில்லை என்ற குற்றசாட்டுகளையும் நாம் அவ்வப்பொழுது செய்திகள் மூலம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். இவ்வளவு பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த விலையில்லா பயண சலுகை பெண்களுக்கு தேவையா? என்பது ஒரு பக்கம். ஒரு நகர பேருந்தில் மிக சொற்ப கட்டணம் கூட கொடுக்கமுடியாத இடத்திலா பெண்களின் நிலை உள்ளது. பெண்களின் கல்வி, வருமானம், சுயதொழில்வளர்ச்சி இவற்றில் “பெண்களின் முன்னேற்றம்” என்பது அனைத்தும் பெயரளவிவில்தான் உள்ளதா? யோசிக்க  தோன்றுகிறது.

 

No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...