அகல்யாபாய் (கட்டுரை)
முன்னுரை
2024 ஆம் ஆண்டு நாங்கள் நர்மதாபரிக்ரமா என்ற ஆன்மீக யாத்திரைக்கு( மத்யபிரதேசமாநிலம்) சென்றோம். அந்த யாத்தியரையில் 15 நாட்களுக்கு தினம் ஒரு நர்மதாற்று படித்துறை என்று சென்று நர்மதையில் புனிதநீராடியபின் படித்துறையில் சிவபூஜை செய்து அங்குள்ள சிவாலயத்தில் வழிபாடு செய்த பின்பே எங்களின் காலை உணவை எடுத்துக்கொள்வோம். இவ்வாறு சென்ற நேரத்தில் மகேஷ்வர் என்ற இடத்திற்கு சென்றோம். இந்த மகேஷ்வரை தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்த காலத்தில் இந்தவூரில் சிவபெருமானுக்கு என்று ஒரு அரண்மனை அமைத்திருந்தார், ராணி அகல்யாபாய். இதை தொடர்ந்து மகாகாலேஷ்வர், இந்தோர் நகரசுற்றில் இவரின் சிறப்புகள் அதிகம் தெரிந்துகொள்ளமுடிந்தது. கடந்த டிசம்பர் மாதம் எங்களின் யாத்திரையில் பரலி வைத்யநாத் மற்றும் அனுப்நாகநாத் சிவன் கோவில் புனரமைப்பு ராணி அகல்யாபாய் அவர்களே செய்திருந்தார் என்ற செய்தியும், இவரின் சிலையும் என்னை, இவரைப்பற்றி அறியும் ஆர்வத்தை உண்டு செய்தது. இதுவே இந்த கட்டுரைக்கு காரணமாக அமைந்தது.
மாதரசி அகல்யாபாய்பற்றிய அடிப்படை செய்திகள்
1725 ஆம் ஆண்டு அகமதாபாத் அருகில் உள்ள இண்கோடி என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது கணவர் காண்டேரால் ஒல்கர். (Holkar) இவர் கும்பர் போரில் 1754 ஆம் ஆண்டு இறந்தார். இதன்பின் இவரின் மாமனார் மேற்பார்வையில் 12 ஆண்டுகாலம் நாட்டை காத்து, 1766 ஆம் ஆண்டு ராணியாக பட்டம் சூட்டிகொண்டாலும், இறுதிவரை ஒரு துறவி போல மக்கள் நன்மையை மட்டுமே மனதில் கொண்டு 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார். 1795 ஆம் ஆண்டு இவரின் 70 வது வயதில் இயற்கை எய்தினார். மாராட்டியத்தில் இந்தோரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த காலத்தில் தான், மகேஷ்வருக்கு தலைநகரை மாற்றி அங்கு சிவபெருமானுக்காக ஒரு அரண்மனையை கட்டினார். பல கோவில்கள் புனரமைப்பு செய்தாலும் இவர்கட்டிய கோவில்கள்,
1. விஷ்ணுபாதம், - கயா
2. மகாகாலேஷ்வர் - உஜ்ஜைன்
3. வைத்யநாதம் - பரலி
இந்திய அரசு அவருக்க கொடுத்த அங்கீகாரம்.
1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அஞ்சல் தலை வெளியிட்டது. இந்தோர் Indore ( மத்தியபிரதேசத்தில் உள்ள ஒரு நகரம்) நகர விமான நிலையத்திற்கு அகல்யாபாய் விமானநிலையம் என்ற பெயர் சூட்டி அவரின் புகழை பரப்பியது. ஏழுக்கு மேற்பட்ட மராத்தி மொழி நூல்கள் இவரை பற்றி வெளியிட்டுள்ளது.
ராஷ்டிரிய சுயம் சேவக் என்ற RSS அமைப்பு இவருக்கு ஆண்டு தோறும் குரு பூஜை நடத்துகிறது.
ரஜ்வாடா அரண்மனை.
இந்த அரண்மனை இந்தோர் நகரத்தில் அமைந்துள்ளது. இதில் பெரும்பாலும் அகல்யாபாய் பற்றிய செய்திகளே. நாங்கள் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கு சென்றபோது, இவரை பற்றி படித்ததில் என்னை கவர்ந்தவை. கணவன் இறந்த பிறகு அவரது வாழ்கையை முடித்துகொள்ள எண்ணிய நேரத்தில்அவரின் மாமனார் அறிவுரையின் படி ஒரு அரசியின் கடமையை உணர்ந்து பெயரளவிற்க்;;கு ராணியாகவும், செயலில் மக்களின் தொண்டணாகவே வாழ்திருக்கிறார். வாழும் காலத்திலும், இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்திருக்கிறது. அவர் ஒரு சமய துறவியாகவே மக்கள் மனதில் இன்றும் நிலைத்துள்ளார். இந்தோர் நகரத்தில் அகல்யாபாய் அவர்களுக்கு ஆதிஷ்டானம் ஒன்று உள்ளது. இந்த இடத்தையும் நாங்கள் பார்வையிட்டோம்.
மகேஷ்வர்
எங்களது நமர்மதா பரிக்கிரமா யாத்திரை காலத்தில் இங்குள்ள நர்மதை படித்துறையில் வழிபாடு நடத்தினோம். இந்த படித்துறை அகல்யாபாய் காட் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இந்த இடத்திலேயே மாபெரும் ஒரு அரண்மனை முகப்பு உள்ளது. இந்த இடம் தற்காலத்தில் போட்ஷ_ட் எடுத்து கொள்ளும் இளைஞர்கள் மத்தியிலும், திரைப்பட துறையினர் மத்தியிலும் மிகவும் பிரபலம். அரண்மனை உள்ளே இறை சன்னதிகளே உள்ளன.
மகேஷ்வர் அரண்மனை முகப்பில் எடுத்த புகைப்படம்.
OUr Narmatha Parikrama |
![]() |
Our Narmatha Parikkrama |
No comments:
Post a Comment