கோடிலிங்கேஸ்வரா

 கோடிலிங்கேஸ்வரா (தரிசனநாள்-5.1.2025)


2025 ஆம் ஆண்டின் முதல் தரிசனம்.

அமைவிடம்

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம், கோலார் தங்கவயல் அருகாமையில் கம்மசந்ரா என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.

கோவில் சிறப்பு 









108 அடி உயர லிங்கமும், 35 அடி உயர நத்தியுமே இந்த கோவிலில் முதன்மையாக உள்ளது. 15 ஏக்கரில், இந்த நந்தியையும், சிவலிங்கத்தையும் சுற்றி கோடிலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 60 அடி உயர பீடத்தில் நந்திகேஷ்வரர் அமர்ந்துள்ளார். பல வகையான  அளவுகளில்  லிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சகஸ்ரலிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கோடி லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால், “கோடிலிங்கேஸ்வரா”  என்று இந்த கோவில் அழைக்கப்படுகிறது. மஞ்சுநார் என்ற சிவபெருமானே பிரதான தெய்வமாக உள்ளார். இதைத்தவிற முருகன், பிள்ளையார், அன்னபூரனி, மகாவிஷ்ணு, ஐயப்பன் என்று அனைத்து பிராதன கடவுள்களுக்கும் தனி தனி சன்னதிகள் உள்ளன.

வரலாறு

1980 ஆம் ஆண்டு சுவாமி சாம்பசிவ மூர்த்தி என்பவரால் உருவாக்கப்பட்டது.






 ஆன்மீக சுற்றுலா தலமாக பெரியஅளவில் உள்ளது.

பிற தகவல்கள் 


காலை 6மணி முதல் மாலை 9 மணிவரை தரிசனநேரம். 20ரூ நுழைவுக்கட்டணம். கார் வாகன நிறுத்தகட்டணம் 50ரூ. கழிவறை வசதியுள்ளது. 

Manjunather Sannithi


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...