கிரினேஷ்வர் (தரிசனம் 27.12.2024)
ஜோதிர்லிங்கம்.
மகாராஷ்ரா மாநிலத்தில், பரலிவைத்யநாதம், அனுப்நாகநாத், கிரினேஷ்வர், திரியம்பகேஷ்வர், பீமாசங்ககர் என்ற ஐந்து ஜோதிர்லிங்கங்கள் உள்ளன.
ஜோதிர்லிங்கம் என்றால் என்ன?
ஜோதி வடிவமாக இருந்த சிவபெருமான் பக்தர்கள் மனதில் எளிதில் அமர்வதற்காக லிங்கவடிவமாக அமர்ந்த கோவில்களே ஜோதிர்லிங்கங்கள் என்று கூறுவர்.
வரலாறு
இந்த கோவில் மகராஷ்ராமாநிலம், ஒளரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக திகழ்கிறது. எல்லோரா குகையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சிவபுராணம், கந்தபுராணம், மகாபாரதம், மற்றும் ராமாயணத்தில் இக்கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளன. 13 மற்றும் 14ஆம் நூற்றாண்டுகளில் டெல்லி சுல்தான்களால் பெரிய அழிவை சந்தித்தது. பல முறை முகமதியர்களால் அழிக்கப்பட்டு, மராத்தியர்களால் காக்கப்பட்டு வந்தது. 16ஆம் நூற்றாண்டில் மராட்டியமன்னர் சிவாஜியின் பாட்டனாரால் கோவில் மீண்டும்; எழுப்பப்பட்டது. தற்காலத்தில் மிகவும் புகழ்வாய்ந்த ஆன்மீக சுற்றுதலமாக விளங்குகிறது. கற்பகிரகத்தில் சென்ற வழிபட அனைவருக்கும் அனுமதியளிக்கப்படுகிறது. ஆண்கள் மேலாடையுடன் செல்ல இந்த கோவிலில் கட்டுப்பாடு விதிக்கிறது.
பயணஅனுபவம்.
நானும் என் கணவரும், இந்த பயணத்தை சொந்தமாக திட்டமிட்டு பயணித்தோம். இது மகிழ்சியையும், நிறைவையும், பெருமை, மற்றும் புதிய அனுபத்தையும் கொடுத்தது. மற்ற பயண ஏற்பாட்டாளர்கள், கோவில்களை மட்டுமே திட்டமிட்டதாலும், முன்பே நாங்கள் தரிசனசெய்த புனிததலங்கள் அட்டவணையில் இருந்ததாலும், நாங்கள் சுயமாக பயணம் செய்ய முடிவெடுத்தோம்.
சீரடி, சனிசிங்கனாப்பூர், கோலாப்பூர் மகாலெஷ்மி, பூனா கணபதி கோவில்கள், பண்டரிபுரம் என்ற ஆன்மீக தலங்களும், எல்லோராகுகை, லோனாவாலா, என்று பல இடங்களை பல்வேறு தருணங்களில் நாங்கள் சுற்றுலாவாக சென்ற காரணத்தால், எங்களுக்கு கிடைத்த ஒருவாரகால அவகாசத்தை பயன்படுத்தி இந்த பயணதிட்டத்தை திட்டமிட்டோம்.
பயணதிட்டம்.
23.12. 24 – சென்னை – பூனா (புகைவண்டி)
24.12.24 – பூனா – பரலிவைத்யநாத். (புகைவண்டி- இரவு பயணம்)
25.12.24 - பரலிவைத்யநாதம் மற்றும் நாகநாத் தரிசனம்.
26.12.24 – பரலிவைத்யநாம் - ஒளரங்காபாத் பயணம் (புகைவண்டி) மற்றும் கிரினேஷ்வர் தரிசனம்.
27.12.24 அஜந்தா குகை
28.12 24- ஒளரங்காபாத் - நாசிக் புகைவண்டி பயணம், திரியம்பகேஷ்வர் மற்றும் நாசிக் தரிசனம்
29.12.24. பீமாசங்கர் தரிசனம் செய்து பூனா பயணம் பேருந்தில்.
30.12.24 – மாலை பூனா – சென்னை புகைவண்டி பயணம்
இந்த பயணதிட்டத்தில் மறுபாடுகள் நிறைய ஏற்பட்டது. பீமாசங்கர் தரிசனம்,, பீமாசங்கருக்கும், நாசிக்குக்கும் போதிய பேருந்து வசதியின்மையால்;; எங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
கிரினேஷ்வர் பயணஅனுபவம்.
26 ஆம் தேதி காலை பரலிவைத்யநாதம் என்ற ரயில் நிலையத்தில் இருந்து ஒளரங்காபாத் செல்ல முன்பதிவு செய்திருந்தோம். புகைவண்டி 6மணி நேரதாமதம் காரணமாக மதியம் 12 மணிக்கு வந்தது. பயணநேரமும் இரட்டிப்பாகி இரவு 9 மணிக்கு நாங்கள் ஒளரங்காபாத் சென்றடைந்தோம். கலால்வரி துறை விருந்தினர் மாளிகையில் முன் பதிவு செய்த இடத்தை அடைந்தோம். அன்று எங்களின் திட்டப்படி பயணிக்க முடியவில்லை. 27 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு கிரினேஷ்வர் கிளம்பினோம். வாடகை கார் அமர்திகொண்டு சென்று, அதிகாலை 6.30. மணிக்கு ஆனந்தமாக தரிசனம் செய்தோம். மீண்டும் ஒளரங்கபாத் பேருந்து நிலையத்தை அடைந்து, அஜந்தா செல்ல முற்பட்டோம்.
No comments:
Post a Comment