நாகரத்தினம்மாள். (கட்டுரை).
இந்த ஆண்டு 18.1.2025 தியாகராஜ ஆராதனை சென்ற அன்றுதான் இவரை பற்றி நான் அறிந்தேன். பாடுவதற்கு இரண்டு மேடை அமைத்திருந்தனர். இடையில் ஒரு சிறய இடைவெளி இருந்தது, இங்கு ஒரு சன்னதி இந்தது போல் தோன்றியதால். அங்கு சென்று பார்தால் “பெங்களுர் நாகரத்தினம்மாள்” என்ற பெயர் பலகையுடன். வாடிய மாலையும், கலர்வேஷ்டியையே புடவையாகவும் சாற்றி, எண்ணை தடவாத ஒரு சிலையை பார்த்தேன். பெருமைக்காக சொல்லவில்லை உண்மைக்காக சொல்கிறேன்.
அங்கு வந்த ஆயிரக்கணக்கான மக்களின் நான் ஒருத்திதான் இந்த சிலையை கண்ணுற்றிருப்பேன் என்று, நினைக்கிறேன்.
சிறப்பு செய்தி
தியாகராஜர் சமாதி மேல் கோவில் கட்டுவதற்கும், இந்த ஆராதனை விழாவின் தொடக்கத்திற்கு பங்கு வகித்தவரும், குறிப்பாக பெண்கள் இந்த மேடையில் பாடுவதறக்கு பெரும் பங்காற்றியவர் என்பதை அறிந்து பெருமையுற்று, இவரை பற்றி இந்தனாள்வரை அறியமாமல் இருந்ததற்காக மிக வருத்தமுற்றேன்.
வாழ்கை வரலாறு
1878 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி மைசூரில் உள்ள நஞ்சன்கூடு என்ற இடத்தில் புட்டு லெட்சுமி மற்றும் வக்கீல் சுப்பாராவ் என்பவர்களுக்கு மகளாக பிறந்தார். புட்டு லெட்சுமியின் முன்னோர்கள் மைசூர் அரசவையில் இசைகலைஞர்களாக பணியாற்றிவந்தனர். மனைவியையும், குழந்தையையும் காக்க திறன் இல்லாத சுப்புராவால் இவர்கள் கைவிப்பட்டனர். அவையில் இருந்த ஒரு சமஸ்கருத அறிஞர் நாகரத்தினத்திற்கு, சமஸ்கிருதம் மற்றும் இசையை கற்றுவித்தார். இவரின் ஆதரவும் தொடந்து கிடைக்காத நிலையில், மைசூரைவிட்டே வந்து அவரின் தாய்மாமாவின் ஆதரவில் வளர்ந்தார். சங்கீதம் மற்றுமல்லாமல் ஆங்கிலம் மற்றும் கன்னடம், தெலுங்கு மொழிகளில் நன்கு தேர்சியுற்றார்.
முனுஸ்வாமப்பா என்பவரிடம் குருகுல முறைப்படி கற்றார்.15 வது வயதில் இசை, நடனம், வயலின் கலையில் கைதேர்ந்து மேடையில் அறங்கேறினார்.
பெங்களுர் நாகரத்தினம்மாள்.
சென்னையில் தனக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்றும், மற்றும் அவரின் நலவிரும்பிகளின் கருத்துபடியும் சென்னைக்கு வந்து, தன்னை தானே “பெங்களுர் நாகரத்தினம்மாள்”; என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.
தியாகராஜர் நினைவிடம் மற்றும் ஆராதனையில் அவர் பணி.
குரு ஸ்ரீபிடாரம் கிருஷ்ணப்பா
நகரத்தினம்மான் குரு ஸ்ரீபிடாரம் கிருஷ்ணப்பா மூலம், தியாகஜார் சமாதி பாழடைந்து இருக்கும் செய்தியை கேட்டறிந்தார். பிடாரம் கிருஷ்ணன் அவர்களின் சீடர்களில் இருவர், சுந்தர பாகவதர் மற்றும் கிருஷ்ண பாகவதர் இவர்களால், தியாகேசருக்கு நினைவு மண்டபம் கட்டபட்டு, பின் இவர்களின் போட்டி காரணமாக பிரிவினை ஏற்பட்டு பின் கவனிப்பு இல்லாமல் இந்த நினைவிடம் சிதிலம் அடைந்தது.
நாகரத்தினம்மாள் இந்த இடத்தை மீட்டெடுத்து, தியாகராஜரின் நினைவாக அதை நிலைநிறுத்தி, அந்த நிலத்தை சொந்தமாக கையப்படுத்தி, அவரின் சொந்த செலவில், சிலை நிறுவி தியாகராஜரின் சிலைக்கு தினம் பூஜை செய்ய பிராமணர்களை பணிக்கு அமர்தினார். இந்த தியாகராஜர் கோவில் 1921 ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தை கண்டது. பெண்களும் இந்த சன்னதியில் பாடவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியவர் இவரே. 1941 ஆம் ஆண்டு முதல் இங்கு பெண்களும் கச்சேரி செய்ய ஆரம்பித்தனர்.1952 ஆம் ஆண்டு மே மாதம் இவர் அவரது 73 வது வயதில் இவ்வுலகைவிட்டு நீங்கினார்.
முடிவுரை
இணையதிலேயே அவரை பற்றிய செய்திகள் நிறைய உள்ளன. அதை தொகுத்து, சிறியதாக எழுதியுள்ளேன். இவரை பற்றிய தகவல்கள் அறிவதில் என் சொந்த முயற்சி; தொடரும். சுவையான மற்றும் இவரின் ஆளுமை செய்திகள் இந்த பக்கத்தில், தொடந்து மேம்படுத்துவேன்.
.
இவர் திருவையாற்றிலேயே காலமானர். நான் கண்டது அவரின் நினைவிடம். என் வாழ்கைக்கு உற்சாகத்தையும். மனித பிறப்பின் சிறப்பையும் இது போன்று கட்டுரைகள் எழுதும் நேரம் உணர்கிறேன். நன்றி.
Excellent content...👍🏻 Very interesting
ReplyDeleteThank you 🙏
ReplyDelete