திரியம்பகேஷ்வர் (தரிசனம் 28.12.2024)
12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான இந்த கோவில் மகாராஷ்ட்ரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில், நாசிக் நகரில் இருந்து 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
ஜோதிர்லிங்கம்.
மகாராஷட்ரா மாநிலத்தில், பரலிவைத்யநாதம், அனுப்நாகநாத், கிரினேஷ்வர், திரியம்பகேஷ்வர், பீமாசங்ககர் என்ற ஐந்து ஜோதிர்லிங்கங்கள் உள்ளன.
ஜோதிர்லிங்கம் என்றால் என்ன?
ஜோதி வடிவமாக இருந்த சிவபெருமான் பக்தர்கள் மனதில் எளிதில் அமர்வதற்காக லிங்கவடிவமாக அமர்ந்த கோவில்களே ஜோதிர்லிங்கங்கள் என்று கூறுவர்.
கோவில் வரலாறு
பிரம்மகிரி, நீலகிரி, காலகிரி என்ற மூன்று மலைகளுக்கு மத்தியில் இந்த கோவில் அமைந்துள்ளது. சாதாரணமாக லிங்க வடிவமே பிரும்மா, விஷ்ணு, சிவனின் அங்கங்கள் என்று கூறுவர். ஆனால் இந்த தலத்தில் மும்மூர்திகளும் சேர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த தல தீர்த்தம் அமிர்தவர்ஷிணி என்று அழைக்கப்படுகிறது. இந்த தலத்தை பற்றிய குறிப்புகள் பிரும்ம புராணம், சிவபுராணம், விஷ்ணுபுராணம் உள்ளதை வைத்து இக்கோவிலின் பழமையும் காலமும் நம்மால் நன்கு உணரமுடிகிறது. இங்கு சிவபெருமான் ஜோதிவடிவமாகவே உள்ளார். ஒளரங்கசீப்பால் அழிக்கப்பட்ட இந்த கோவில், பேஷ்வா பாலாஜி பாஜி ராவ் என்பவரால் கட்டப்பட்டது. கலைநயம் மிக்க இந்த கோவில் பராமரிப்பு, மிகவும் கவலை அளிக்கிறது. ஹர ஹர மகாதேவா.
வந்தேபாரத் பயணம்.
![]() |
இந்த புகைவண்டியின் பயண அனுபவத்திற்காக, ஒளரங்காபாத்தில் இருந்து நாசிக் செல்ல இந்த வண்டியை தேர்தெடுத்தோம். சாதாரண Chaircar மாதரி தான் இருந்தது. (2005 ஆம் ஆண்டு, டெல்லி – சண்டிகர் பயணம் தான் என்னுடைய முதல் Chaircar பயணம்) Executive வகுப்புபற்றி எனக்கு தெரியவில்லை. நாங்கள் காலைவுணவுடன் பயணசீட்டு பதிவுசெய்திருந்தோம். புகைவண்டியில்; ஏறியவுடன் டீ மற்றும் இரண்டு பிஸ்கட் கொடுத்தனர், பின் காலை உணவாக இரண்டு பூரி, சிறிது அவல் உப்புமா, சிறய அளவில் கேக், மற்றும் தயிர் கொடுத்தனர். உணவு நல்ல தரமாக இருந்தது. எங்கள் பயணம் இரண்டரை (5.50 -8.20) மணி நேரம் மட்டுமே.
திரியம்பகேஷ்வர் பயண அனுபவம்.
; நாசிக்கில் இறங்கி 9 மணிக்கு நாங்கள் முன் பதிவு செய்திருந்த அறைக்கு சென்றோம். எங்களின் மூட்டை முடிச்சை இறக்கி வைத்தவுடனே, திரியம்பகேஷ்வருக்கு பயணித்தோம். நாசிக் தக்கரேபஜார்; பேருந்து நிலையத்தில் இருந்து பொது பேருந்து பிடித்து சென்றோம். (மகாராஷ்ட்ரா அரசு பேருந்து, “அரசு பேருந்தும் சலுகைகளும்”; என்ற தலைப்பில் கட்டுரை எழுத என்னை தூண்டியது) கோவில் உள்ள இந்த சிறிய ஊரின் பெயரே த்ரியம்பகேஷ்வர்தான். பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் கோவில் அமைந்துள்ளது. கோவில் அருகில் சென்றவுடன் பார்தால் 2 கி;.மீ. தொலைவுக்கு வளைந்து வளைந்து பெரிய வரிசையில் மக்கள் கூட்டத்தை பார்த்து நாங்கள் அதிர்ந்தோம். ஏன் என்றால் நாங்கள் அரைநாள் திரியம்பகேஷ்வர் தரிசனம், அரை நாள் நாசிக் சுற்றுலா என்று அட்டவணையிட்டிருந்தோம். உடனே தரிசனத்தில் எங்களை எங்களை ஈடுபடுத்திகொண்டோம். சிறிது நேரம் கழித்துதான் தெரிந்தது, இந்த வரிசைக்கு டொனேஷன் என்ற பெயரில் 200ரூ கட்டணம் செலுத்த வேண்டும் என்று. உடனே நான் தரிசன வரிசையில் நின்றேன். என் கணவர் பணம் செலுத்தி, அனுமதி டிக்கெட் வாங்க சென்றார். அங்கும் ஒரு பெரிய வரிசை நிற்பதாக என்னிடம் அலைபேசியில் தெரிவித்தார். நான் உடனே சக பக்தர்களிடம் செய்திகளை கேட்டு தெரிந்து கொண்டு அவர்களின் உதவியுடன் ஆன்லைனில் 400ரூ செலுத்தி தரிசன டிக்கெட் வாங்கினேன். பின் என்கணவரும் தரிசன வரிசையில் இணைந்து கொண்டார். இவ்வாறாக நாங்கள் 4 மணி நேரம் வரிசையில் நின்று திரியம்பகேஷ்வரை சில நொடிகள் மட்டுமே தரிசனம் செய்தோம். சனிக்கிழமை வார இறுதிவிடுமுறை நாள் மற்றும் அன்று பிரதோஷம் என்பதாலும் பக்தர்கள் நிறைந்து இருந்தனர் என்று நாங்கள் எண்ணிக்கொண்டோம். மீண்டும், அரசு பேருந்தில் பயணித்து மாலை 6 மணிக்கு நாங்கள் தங்கியிருந்த இடம் வந்து சேர்ந்தோம். மிகுந்த அசதி காரணமாக மறுநாள் நாசிக் சுற்று பயணம் என்று தீர்மானித்து, பீமாசங்கரையும் அடுத்த கட்டபயணத்திறக்கு ஒத்தி வைத்தோம்.
No comments:
Post a Comment