அஜந்தாகுகை (27.12.2024) எல்லோராகுகை (00.2.2013)
அமைவிடம்
மகாராஷ்ட்ரா மாநிலம் ஒளரங்கபாத் மாவட்டத்தில் அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் அமைந்துள்ளன. இந்த இரண்டு குகைகளும் வெவ்வேறு திசைகளில், 100 கி.மீ இடைவெளியில் அமைந்துள்ளன.
அஜந்தா
• 30 குகைகளை கொண்டுள்ளது. இதில் 27 குகைகளில்; சிற்பங்கள் குடையப்பட்டும், 3 குகைகளில், வேளைபாடுகள் பாதியில் தடைபட்டும் உள்ளது. இதன் காரணமாக, 27 குகைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இரண்டாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் இருவேறு காலகட்டத்தில் செதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சிற்பங்கள் புத்தபிரானுடைதே. புத்தர் பலவிதமான முத்திரையில் அமர்ந்த உருவங்களும், மற்றும் நின்ற கோலமும், நம் பெருமானின் கிடந்த கோலம் போன்று பள்ளிகொண்ட கோலங்களும் உள்ளது. இரண்டு குகைகளில் ஸ்தூபி கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. அழிந்த நிலைகளில் பல சுவர் ஓவியங்களும் உள்ளன. யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக உள்ளது.
எல்லோரா
33 குகைகளை மட்டுமே மக்கள் பார்வைக்கு அனுமதிக்கின்றனர். கைலாசநாதர் கோவில், புத்தமதம் மற்றும் ஜெயினமதம், ஹிந்து மத கடவுள் உருவங்களும் இந்த எல்லோரா குகையில் உள்ளது. நாங்கள் 2013 ஆண்டு எல்லோரா சென்றோம். அந்த சமயம் அஜந்தா போக முடியாததால். தற்சமயம் இந்த பயணம் மூலம் அஜந்தா சுற்றிபார்தோம்.
பயணஅனுபவம்.
நானும் என் கணவரும், இந்த பயணத்தை சொந்தமாக திட்டமிட்டு பயணித்தோம். இது மகிழ்சியையும், நிறைவையும், பெருமை, மற்றும் புதிய அனுபத்தையும் கொடுத்தது. மற்ற பயண ஏற்பாட்டாளர்கள், கோவில்களை மட்டுமே திட்டமிட்டதாலும், முன்பே நாங்கள் தரிசனசெய்த புனிததலங்கள் அட்டவணையில் இருந்ததாலும், நாங்கள் சுயமாக பயணம் செய்ய முடிவெடுத்தோம்.
![]() |
சீரடி, சனிசிங்கனாப்பூர், கோலாப்பூர் மகாலெஷ்மி, பூனா கணபதி கோவில்கள், பண்டரிபுரம் என்ற ஆன்மீக தலங்களும், எல்லோராகுகை, லோனாவாலா, என்று பல இடங்களை பல்வேறு தருணங்களில் நாங்கள் சுற்றுலாவாக சென்ற காரணத்தால், எங்களுக்கு கிடைத்த ஒருவாரகால அவகாசத்தை பயன்படுத்தி இந்த பயணதிட்டத்தை திட்டமிட்டோம்.
பயணதிட்டம்.
23.12. 24 – சென்னை – பூனா (புகைவண்டி)
24.12.24 – பூனா – பரலிவைத்யநாத். (புகைவண்டி- இரவு பயணம்)
25.12.24 - பரலிவைத்யநாதம் மற்றும் நாகநாத் தரிசனம்.
26.12.24 – பரலிவைத்யநாம் - ஒளரங்காபாத் பயணம் (புகைவண்டி) மற்றும் கிரினேஷ்வர் தரிசனம்.
27.12.24 அஜந்தா குகை
28.12 24- ஒளரங்காபாத் - நாசிக் புகைவண்டி பயணம், திரியம்பகேஷ்வர் மற்றும் நாசிக் தரிசனம்
29.12.24. பீமாசங்கர் தரிசனம் செய்து பூனா பயணம் பேருந்தில்.
30.12.24 – மாலை பூனா – சென்னை புகைவண்டி பயணம்
இந்த பயணதிட்டத்தில் மறுபாடுகள் நிறைய ஏற்பட்டது. பீமாசங்கர் தரிசனம்,, பீமாசங்கருக்கும், நாசிக்குக்கும் போதிய பேருந்து வசதியின்மையால்;; எங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
அஜந்தா பயண அனுபவம்
கிரினேஷ்வர் ஆலய தரிசனம் முடிந்து அதே வாடகை கார் மூலம் ஒளரங்காபாத் மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தோம். மத்திய பேருந்து நிலையத்தில் எங்களுக்கு சரியா பேருந்து கிடைக்கவில்லை. தனியார் பகிர்வு வேன் மூலம் அஜந்தா சென்றோம். அஜந்தா சுற்றிபாரக்க 4 முதல் 5 மணிநேரம் தேவை. அஜந்தா மற்றும் எல்லோரா ஒரே நாளில் பார்க்க முடியாது. அஜந்தா ஒவ்வொரு குகையும் நடந்தே செல்ல முடியும் ஆனால் எல்லோராவில் ஒவ்வொரு குகைக்கும் இடைவெளி அதிகமாக இருக்கும்.
No comments:
Post a Comment