திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா - 2025

 திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா.( நாள் ஒன்று தரிசனம் 18.1.2025)





தியாகராஜர் ஆராதனை  - சிறுகுறிப்பு.

ஆண்டுதோறும் தை மாதம் பகுளபஞ்சமி திதியன்று சங்கீத மும்மூர்திகளில் ஒருவரான தியாகேசருக்கு ஜெயந்தி விழா, தஞ்ஜாவூர் மாவட்டம் திருவையாறில் இவரின் சமாதியில் கொண்டாடப்படுகிறது. முதலில் தியாகேசர் உற்சவ மூர்த்தி நன்குஅலங்கரிக்கப்பட்டு வீதிகளில் உலா வருகின்றார். பின்னர் அபிஷேக ஆராதனைகள் செய்கின்றனர். பெரிய பாடகர்கள் முதல் சாதாரண சமையல்அறை மற்றும் பூஜை அறை பாடகர்கள் வரை அனைவரும் சமமாக அமர்ந்து தியாகேசரின் “பஞ்சரத்ன கீர்தனைகள்” என்று சொல்லப்படும் ஐந்து கீர்தனைகளை ஒருமணிநேரம்பாடி, தியாகேசருக்கு ஆராதனை செய்கின்றனர். பின்னர்  பூஜை செய்து தீபஆராதனை செய்து இந்த நிகழ்சியை சுபமாக முடிப்பர்.




எனக்கு கிடைத்த வாய்ப்பு


சனிக்கிழமை வாரஇறுதிநாள். என் கணவர் பாண்டிச்சேரியை சேர்ந்த தேவஸ்ரீ மற்றும் கிருபாஸ்ரீ என்ற சகோதிரிகளுக்கு அவர் நட்பு வட்டம் மூலம் ஆராதணை விழாவில்பாட வாய்ப்பு வாங்கி கொடுத்தார். இதன்காரணமாக அவர்கள் பாடுவதை கேட்க செல்ல திட்டமிட்டோம். சனி மற்றும் ஞாயிறு இரண்டு விடுமுறை நாட்களை முழுமையாக பயன்படுத்த திட்டமிட்டு முதலாவதாக இங்கு சென்றோம்.






பயண நிகழ்வு

17 ஆம் தேதி இரவு பெங்களுரில் இருந்து பேருந்தில் தஞ்ஜாவூர் பயணித்தோம். 18 காலை தஞ்சை அடைந்து, உடன் 8 மணிக்கெல்லாம்  திருவையாறு சென்றடைந்தோம். தியாகராஜர் ஊர்வலத்தில் வலம்வந்து,  வழிபட்டு பஞ்சரதணகீர்தனையில் கலந்து கொண்டு, பின் பாண்டி சகோதரிகளின்பாட்டை கேட்டோம். 

தர்மசம்வர்தனி உடனுரை பஞ்சநதீஸ்வரர்





ஐந்து நதிகள் சேரும் இடம் என்பதால் சிவபெருமான் இத்தலத்தில் இப்பெயர் பெற்றார். தேவார பாடல்பெற்ற தலம், அப்பருக்கு கைலாய காட்சி கொடுத்த இடம், இறைவன் தன்னை தானே பூஜித்து கொண்ட இடம் என்று பல சிறப்புகள் கொண்ட இந்த தலத்தை வழிபட்டு திருவையாரை விட்டு கிளம்பினோம்.



அங்கிருந்து கண்டியூர் வழியாக எங்கள் குலதெய்வம் வரகூர் வெங்கடேச பெருமானை வணங்கி தஞ்சாவூரை அடைந்தோம். 

குறிப்பு – “வரகூர் வெங்கடேசபெருமாள்” என்ற பெயரில் கோவில் சிறப்புடன்  என்னுடைய  Blog  உள்ளது  






VARAGUR VILLAGE PHOTOS  CLOUDY  DAY



No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...