- அனுத்நாகநாத் (தரிசனநாள்- 25.12.2024)
- ஜோதிர்லிங்கம்.
- மகாராஷ்ரா மாநிலத்தில், பரலிவைத்யநாதம், அனுத்நாகநாத், கிரினேஷ்வர், திரியம்பகேஷ்வர், பீமாசங்ககர் என்ற ஐந்து ஜோதிர்லிங்கங்கள் உள்ளன.
- பரலிவைத்யநாதம் என்ற பெயரில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு கோவில் உள்ளதால், ஜார்கண்ட் மாநில கோவில் தான் ஜோதிர்லிங்கம் என்றும் கூறுவர். இதே போன்று நாகநாத் என்ற கோவிலும் தாருகாவனே நாகநாத் என்று குஜராத் மாநிலத்தில் உள்ள கோவிலே ஜோர்திர்லிங்க ஆலயம் என்ற கருத்தும் பக்தர்களுக்கிடையே உள்ளது.
- ஜோதிர்லிங்கம் என்றால் என்ன?
- ஜோதி வடிவமாக இருந்த சிவபெருமான் பக்தர்கள் மனதில் எளிதில் அமர்வதற்காக லிங்கவடிவமாக அமர்ந்த கோவில்களே ஜோதிர்லிங்கங்கள் என்று கூறுவர்.
- வரலாறு
- மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் பாண்டவர்களின் முன்னோர்களான யுதிஷ்டர்களால் கட்டப்பதாகும். மஹாபாரத காலத்திற்கும் பழமையானது என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. ஹஸ்தினாபுரத்தில் இருந்து பாண்டவர்கள் வெளியேறுவதற்குமுன், 14 ஆண்டுகள் முன்பே கட்டப்பட்ட கோவிலாகும். தற்பொழுது உள்ள கோவில் சியூனா யாதவ வம்சத்தினற்களால் 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்து.
- இந்த கோவில் 7200 சதுரஅடி அகலமும், 60அடி உயரம் கொண்ட மிக அற்புதாபன கலைநயத்துடன் அமைந்த கோவிலாகும்.
- பயணஅனுபவம்.
- நானும் என் கணவரும், இந்த பயணத்தை சொந்தமாக திட்டமிட்டு பயணித்தோம். இது மகிழ்சியையும், நிறைவையும், பெருமை, மற்றும் புதிய அனுபத்தையும் கொடுத்தது. மற்ற பயண ஏற்பாட்டாளர்கள், கோவில்களை மட்டுமே திட்டமிட்டதாலும், முன்பே நாங்கள் தரிசனசெய்த புனிததலங்கள் அட்டவணையில் இருந்ததாலும், நாங்கள் சுயமாக பயணம் செய்ய முடிவெடுத்தோம்.
- சீரடி, சனிசிங்கனாப்பூர், கோலாப்பூர் மகாலெஷ்மி, பூனா கணபதி கோவில்கள், பண்டரிபுரம் என்ற ஆன்மீக தலங்களும், எல்லோராகுகை, லோனாவாலா, என்று பல இடங்களை பல்வேறு தருணங்களில் நாங்கள் சுற்றுலாவாக சென்ற காரணத்தால், எங்களுக்கு கிடைத்த ஒருவாரகால அவகாசத்தை பயன்படுத்தி இந்த பயணதிட்டத்தை திட்டமிட்டோம்.
- பயணதிட்டம்.
- 23.12. 24 – சென்னை – பூனா (புகைவண்டி)
- 24.12.24 – பூனா – பரலிவைத்யநாத். (புகைவண்டி- இரவு பயணம்)
- 25.12.24 - பரலிவைத்யநாதம் மற்றும் நாகநாத் தரிசனம்.
- 26.12.24 – பரலிவைத்யநாம் - ஒளரங்காபாத் பயணம் (புகைவண்டி) மற்றும் கிரினேஷ்வர் தரிசனம்.
- 27.12.24 அஜந்தா குகை சுற்றுலா
- 28.12 24- ஒளரங்காபாத் - நாசிக் புகைவண்டி பயணம், திரியம்பகேஷ்வர் மற்றும் நாசிக் தரிசனம்
- 29.12.24. பீமாசங்கர் தரிசனம் செய்து பூனா பயணம் பேருந்தில்.
- 30.12.24 – மாலை பூனா – சென்னை புகைவண்டி பயணம்
- இந்த பயணதிட்டத்தில் மறுபாடுகள் நிறைய ஏற்பட்டது. பீமாசங்கர் தரிசனம், பீமாசங்கருக்கும், நாசிக்குக்கும் போதிய பேருந்து வசதியின்மையால் எங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
- அனுத்நாகநாத் அனுபவம்
- பரலி தரிசனத்தை முடித்துக்கொண்டு, நாங்கள் பேருந்து நிலையத்தை அடைந்தோம். அங்கிருந்து, அரசு பேருந்தில் 3.30 மணிநேரம் பயணித்து, நாகநாத்தை அடைந்தோம். நாகநாத் தலம் அனுத்நாகநாத் என்று இறைவன் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. கோவில், பேருந்து நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. நாங்கள் 4 மணிநேரம் தர்மதரிசன வரிகையில் நின்று இறைவனை தரிசனம் செய்தோம். இறைவன் சன்னதிக்கு அருகில் சென்றவுடன். ஆரத்தி நேரம் என்று அரைமணி நேரம் நடைஅடைத்துவிட்டனர். கதவு திறந்த உடன் சென்றால் இறைவன் நான்கடி ஆழத்தில் லிங்கமாக வீற்றிருக்கிறார். இரண்டடிக்கு ஒரு சிறிய படி இருந்தது. ஏறுவதும் இறங்குவதும் சற்று கடினமாகவே இருந்தது. மதிய உணவை மாலை ஐந்து மணிக்கு கோவில் அன்னதான கூடத்தில் 20ரூபாய் செலுத்தி உணவருந்தினோம். மீண்டும் பயணித்து பரலி வந்தடைந்தோம். பரலியில் இரவு தங்கி 26 காலை 6மணிக்கு ஒளரங்காபாத் செல்ல புகைவண்டியில் முன்பதிவு செய்திருந்தோம்.
அனுத்நாகநாத்
Subscribe to:
Post Comments (Atom)
Labels
Andhra Pradesh
(5)
Bihar
(3)
Chardham
(4)
Divyadesam
(37)
Foreign Trip.
(14)
Gujarat
(4)
Jammu&Kashmir
(8)
Jyotirlinga
(2)
Karnataka
(27)
Kerala
(25)
Madhya Pradesh
(9)
Maharashtra
(6)
Odisha
(5)
Punjab
(1)
Rajasthan
(15)
Siddher Peedam
(3)
Sikkim
(1)
Thevara Thiruthalam
(37)
Uttar Pradesh
(8)
Uttarakhand
(31)
ஆலய தரிசனம்
(174)
என் நினைவலைகள்
(28)
கட்டுரை
(6)
சமூகம்-ஒரு பார்வை
(5)
பொது வலைப்பதிவு
(42)
சப்தமங்கைதலங்கள்.
சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025) அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...
-
சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025) அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...
-
புனர்ருத்ராண் வித்யாபீடம் (பயிற்சி வகுப்பு -6.7. முதல் 10.7.25 வரை) ஆச்சார்ய அத்யயன் யோசனா (நல்லாசிரியர் பயிற்சி திட்டத்தின் என்னுடைய கல...
-
மானாகிராமம். (பயணித்தநாள்- 10.10.2024) அமைவிடம் . உத்ரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற பத்ரிநாத் கோவிலில் இருந்த...
-
கோபேஷ்வர் (எ) கோபிநாத் கோவில். (தரிசனநாள்- 9.10.2024) அமைவிடம் உத்ரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. வரலாறு . மகாபாரதகாலத...
-
ஆச்சார்யா அத்யயன் யோசனா (நல்லாசிரியர் பயிற்சி திட்டம்) திட்டம் பற்றிய சிறிய விளக்கம். ( Date 10,11,12.5.2025) “புனருத்தான் வித்யாபீடம்” எ...
-
திருவெள்ளரை செந்தாமரைக்கண்ணன். (தரிசனம்-11.3.2025) அமைவிடம் . திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருச்சி – துறையூ...
-
அரசர் கோவில். (தரிசனநாள்-29.9.2023) அமைவிடம். சென்னை –திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், படாளம் கூட்டுரோடில் இருந்து இடதுபக்கம் சுமார் 5கி.ம...
-
சிலிகா ஏரி. (பார்வையுற்றநாள்-9,10.4.2023). ஓடிசா மாநிலத்தில், 64.3கி.மீ. நீளம் கொண்ட உப்பு நீர் ஏரி. வங்காளவிரிகுடாவை ஒட்டி உள்ளது இந்த ஏ...
No comments:
Post a Comment