மலர்கண்காட்சி LALBAGH

 மலர்கண்காட்சி  லால்பாக். (22.1.2025)



ராமாயணத்தை கருவாக கொண்ட மலர்கண்காட்சி.

வரலாறு






18 ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆண்டு வந்த ஹைதர்அலி என்ற அரசரால் 240 ஏக்கர் நிலபரப்பில், 1800 வகையான தாவரங்கள் நடப்பட்டு தாவரவியல் பூங்காவானது. 1760ல் ஹைதர்அலியால் தொடங்கப்பட்ட இந்த தாவரவியல் பூங்கா இவரின் மகன் திப்புசுல்தானால், நிறைவு செய்யப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயர்களாலேயே பராமரிக்கப்பட்டு வந்தது. 

Lalbagh சிறப்பு 










ஏரி, திருவக்கரை கல்மரம், மீன்தொட்டி, கெம்பகௌடா கோபுரம். போன்றவைகளை உள்அடக்கிய தாவரவியல் பூங்கா,ஆண்டுதோறும், குடியரசு மற்றும் சுதந்திர தினத்தை அடிப்படையா கொண்டு 10 நாட்கள் மலர் கண்காட்சி நடத்துகின்றனர்.  

கருப்பொருள் மலர்கண்காட்சி













  ஒவ்வொரு ஆண்டும் ஒரு பொருளை கருவாக கொண்டு மலர்கள் காட்சி படுத்துகின்றனர். ராமாயணத்தை ஒரு கருவாக கொண்ட காட்சி சிறப்பித்தது இந்த ஜனவரி ( 2025)மாத கண்காட்சியாக.




நாகரத்தினம்மாள்

 நாகரத்தினம்மாள். (கட்டுரை).




இந்த ஆண்டு 18.1.2025 தியாகராஜ ஆராதனை சென்ற அன்றுதான் இவரை பற்றி நான் அறிந்தேன். பாடுவதற்கு இரண்டு மேடை அமைத்திருந்தனர். இடையில் ஒரு சிறய இடைவெளி இருந்தது, இங்கு ஒரு சன்னதி இந்தது போல் தோன்றியதால். அங்கு சென்று பார்தால் “பெங்களுர் நாகரத்தினம்மாள்” என்ற பெயர் பலகையுடன். வாடிய மாலையும், கலர்வேஷ்டியையே புடவையாகவும் சாற்றி,  எண்ணை தடவாத ஒரு சிலையை பார்த்தேன். பெருமைக்காக சொல்லவில்லை உண்மைக்காக சொல்கிறேன்.



அங்கு வந்த ஆயிரக்கணக்கான மக்களின் நான் ஒருத்திதான் இந்த சிலையை கண்ணுற்றிருப்பேன் என்று, நினைக்கிறேன்.

சிறப்பு செய்தி

தியாகராஜர் சமாதி மேல் கோவில் கட்டுவதற்கும், இந்த ஆராதனை விழாவின் தொடக்கத்திற்கு பங்கு வகித்தவரும், குறிப்பாக பெண்கள் இந்த மேடையில் பாடுவதறக்கு பெரும் பங்காற்றியவர் என்பதை அறிந்து  பெருமையுற்று, இவரை பற்றி இந்தனாள்வரை அறியமாமல் இருந்ததற்காக மிக வருத்தமுற்றேன்.

வாழ்கை வரலாறு

1878 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி மைசூரில் உள்ள நஞ்சன்கூடு என்ற இடத்தில் புட்டு லெட்சுமி மற்றும் வக்கீல் சுப்பாராவ் என்பவர்களுக்கு மகளாக பிறந்தார். புட்டு லெட்சுமியின் முன்னோர்கள் மைசூர் அரசவையில் இசைகலைஞர்களாக பணியாற்றிவந்தனர். மனைவியையும், குழந்தையையும் காக்க திறன் இல்லாத சுப்புராவால்  இவர்கள் கைவிப்பட்டனர். அவையில் இருந்த ஒரு சமஸ்கருத அறிஞர் நாகரத்தினத்திற்கு, சமஸ்கிருதம் மற்றும் இசையை கற்றுவித்தார். இவரின் ஆதரவும் தொடந்து கிடைக்காத நிலையில், மைசூரைவிட்டே வந்து அவரின் தாய்மாமாவின் ஆதரவில் வளர்ந்தார். சங்கீதம் மற்றுமல்லாமல் ஆங்கிலம் மற்றும் கன்னடம், தெலுங்கு மொழிகளில் நன்கு தேர்சியுற்றார். 

முனுஸ்வாமப்பா என்பவரிடம் குருகுல முறைப்படி கற்றார்.15 வது வயதில் இசை, நடனம், வயலின் கலையில் கைதேர்ந்து மேடையில் அறங்கேறினார். 

பெங்களுர் நாகரத்தினம்மாள்.

சென்னையில் தனக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்றும், மற்றும் அவரின் நலவிரும்பிகளின் கருத்துபடியும் சென்னைக்கு வந்து, தன்னை தானே “பெங்களுர் நாகரத்தினம்மாள்”; என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.

தியாகராஜர் நினைவிடம் மற்றும் ஆராதனையில் அவர் பணி.




                               குரு ஸ்ரீபிடாரம் கிருஷ்ணப்பா 

நகரத்தினம்மான் குரு ஸ்ரீபிடாரம் கிருஷ்ணப்பா மூலம், தியாகஜார் சமாதி பாழடைந்து இருக்கும் செய்தியை கேட்டறிந்தார். பிடாரம் கிருஷ்ணன் அவர்களின் சீடர்களில் இருவர்,  சுந்தர பாகவதர் மற்றும் கிருஷ்ண பாகவதர் இவர்களால், தியாகேசருக்கு நினைவு மண்டபம் கட்டபட்டு, பின் இவர்களின் போட்டி காரணமாக பிரிவினை ஏற்பட்டு பின் கவனிப்பு இல்லாமல் இந்த நினைவிடம் சிதிலம் அடைந்தது. 




நாகரத்தினம்மாள் இந்த இடத்தை மீட்டெடுத்து, தியாகராஜரின் நினைவாக அதை நிலைநிறுத்தி, அந்த நிலத்தை சொந்தமாக கையப்படுத்தி, அவரின் சொந்த செலவில், சிலை நிறுவி தியாகராஜரின் சிலைக்கு தினம் பூஜை செய்ய பிராமணர்களை பணிக்கு அமர்தினார்.  இந்த தியாகராஜர் கோவில் 1921 ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தை கண்டது. பெண்களும் இந்த சன்னதியில் பாடவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியவர் இவரே. 1941 ஆம் ஆண்டு முதல் இங்கு பெண்களும் கச்சேரி செய்ய ஆரம்பித்தனர்.1952 ஆம் ஆண்டு மே மாதம் இவர் அவரது 73 வது வயதில் இவ்வுலகைவிட்டு நீங்கினார்.

முடிவுரை

இணையதிலேயே அவரை பற்றிய செய்திகள் நிறைய உள்ளன. அதை தொகுத்து, சிறியதாக எழுதியுள்ளேன்.  இவரை பற்றிய தகவல்கள் அறிவதில் என் சொந்த முயற்சி; தொடரும். சுவையான மற்றும் இவரின் ஆளுமை செய்திகள் இந்த பக்கத்தில், தொடந்து மேம்படுத்துவேன். 

இவர் திருவையாற்றிலேயே காலமானர். நான் கண்டது அவரின் நினைவிடம்.  என் வாழ்கைக்கு உற்சாகத்தையும். மனித பிறப்பின் சிறப்பையும் இது போன்று கட்டுரைகள் எழுதும் நேரம் உணர்கிறேன். நன்றி.


தஞ்சாவூர் மேல வீதி கோவில்கள்.

  தஞ்சாவூர் மேல வீதி கோவில்கள். (தரிசனம்-19.1.2025, நாள்  இரண்டு)

தஞ்சாவூர் கோவில்கள்

தஞ்ஜை பெரியகோவில் உலகபுகழ் பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கோவில்கள் என்று 88 மிக அற்புதமான கோவில்கள் தஞ்சாவூரில் உள்ளன. (பெரியகோவில் உள்பட)

மேல வீதியில் மட்டும் ஒன்பது கோவில்கள் உள்ளன. இக்கோவில் பற்றிய சிறப்புகளை நாம் இந்த பிளாகில் பார்ப்போம்.

எங்களுக்கு கிடைத்த வாய்ப்பு. 

நாங்கள் ஒவ்வொரு முறையும் தஞ்சாவூர் சென்றால் “பங்காருகாமாட்சிஅம்மன்” ஆலயம் செல்ல வேண்டும் என்று  எங்களுக்குள் சொல்லிக்கொள்வோம். ஏதோ ஒரு காரணத்தால் தரிசனம் செய்ய முடியாமல் போகும். நான் இந்த முறை தைமாதம் என்பதால் கட்டாயமாக காமாட்சியை தரிசிக்க வேண்டும் என்று என் கணவரிடம் கூறினேன். சனிக்கிழமை திருவையாறு மற்றும் எங்கள் குலதெய்வம் வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்து விட்டு தஞ்சாவூர் திரும்ப இரவு ஏழு மணியாகிவிட்டது. நல்ல மழை வேறு பெய்ய ஆரம்பித்ததால் எங்களின் காமாட்சி தரிசனத்தை மீண்டும் ஒத்திவைத்தோம். ஞாயிறு காலை எங்கள் கிராமத்துக்கு (நல்லிச்சேரி) செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனாலும் காலை முதலில் காமாட்சியை தரிசனம் செய்து விட்டுதான் எங்கள் கிராமத்துக்கு செல்வது என்று முடிவெடுத்து, ஒரு ஆட்டோ அமர்திக்கொண்டு காமாட்சிஅம்மன் ஆலயம் சென்றோம். கோவில் வாசலில் நிறுத்தியவுடன் உள்ளே சென்றால் “ராம் ராம்”  என்று எழுதியுள்ளதைபார்த்தவுடன் தான் “ஸ்ரீ விஜயராமசாமி கோவில்” என்ற ராமர் கோவில் என்பதை அறிந்தோம். பிறகு தான் இக்கோவில் மிக அருகிலேயே இருந்தது பங்காரு காட்சியம்மன் கோவில். இதை தொடந்து இந்த மேலவீதியில்லுள்ள ஒன்பது கோவில்களை தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றோம். விநாயகர் கோவிலில் ஆரம்பித்து ஆஞ்சநேயர் கோவில் என்று வரிசை முறைப்படி இருந்தாலும். நாங்கள் தரிசனம் செய்த முறைப்படி எழுதுகிறேன். 

1. ஸ்ரீ விஜயராமசாமி கோவில்.








வரலாறு

டபீர் விஜயராமசாமி கோவில் என்று மக்களால் அழைக்கப்படுகிறது. மராட்டிய மன்னர் பிரதாப சிம்மர் காலத்தில் அமைச்சராக இருந்த டபீர் என்பவரால் கட்டப்பட்ட கோவில். அவர் பெயர் கொண்டே இக்கோவில் அழைக்கப்படுகிறது என்பர். 




கோவில் அமைப்பு

விஜயராமர், லெஷ்மணர், சீதை ஹனுமானுடன் இக்கோவிலில் நமக்கு அருள்பாலிக்கிறார். ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம், முன்மண்டபம், விமானம் வெளிசுற்றுப்பிரகாரம் என்று அமைந்துள்ளது இந்த கோவில். ஹனுமார் மற்றும் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன்.

2. பங்காருகாமாட்சிஅம்மன் கோவில்







கோவில் முகப்பில் “வரத மகாகணபதி” என்று பெயர் கொண்ட விநாயகர் பெயர் போன்றே பெரிய விநாயகராக தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.

 காஞ்சி காமட்சி அம்மன் கோவில் உற்சவ மூர்தியே இந்த பங்காரு காமாட்சி. முகலாயர்கள் படையெடுப்பில் அழிக்கப்பட்ட மற்றும் சூறையாடப்பட்ட கோவில்களில் நம் காஞ்சிபுரத்து காமாட்சியம்மன் கோவிலும் ஒன்றாகும். நின்ற நிலையில் உள்ள இந்த அம்மன் சிலையானது முகலாயர்களிடமிருந்து காக்கவேண்டி, 50 ஆண்டுகளுக்கு இந்த அம்மன் திருவாரூர், திருவண்ணாமலை, உடையார்பாளையம், கும்பகோணம், தஞ்சாவூர் என்று பல இடங்களில் பாதுகாக்கப்பட்டு வந்தார். கும்பகோணத்தில் இருந்த ஒரு தனவந்தர் மற்றும் அம்பிகை பக்தர் பல ஆண்டுகலாம் இந்த அம்மனை வைத்து வழிபட்டுவந்தார். இவர்காலத்திற்குப்பின், சங்கீத மும்மூர்திகளில் ஒருவரான சாமாசாஸ்திரியின் தந்தையார் இந்த காமாட்சியை பூஜித்து வழிபட்டு வந்த நேரம், தஞ்ஜாவூர் மராட்டிய அரசர்களின் செல்லாக்கையும், பக்தியையும் கேள்விபட்டு இந்த காமாட்சியை தஞ்சாவூருக்கு கொண்டுவந்தார். அன்று முதல் தஞ்சாவூரிலேயே தங்கி நமக்கு அருள்பாலிக்கிறார் பங்காரு காமாட்சியாக.




   

 மராட்டிய அரசர் தஞ்சையை ஆண்ட சரபோஜி மகாராஜா மகன் பிரதாப் சிங் போன்சிலே என்பவரால் சுமார் 1760 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. (புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலும் இவராலேயே கட்டப்பட்டது) சாமாசாஸ்திரி அவர்களின் வம்சாவளியினர் இக்கோவிலில் பூஜை செய்து வருகின்றனர்.







சாமாசாஸ்திரி

இவரின் தந்தை தஞ்சைக்கு வரும் காலத்தில் இவருக்கு ஐந்து வயது. காமாட்சி மீது மிகுந்த பக்திகொண்ட இவர், இக்கோவிலின் பின்புறத்திலேயே தங்கி பல க்ருதிகளை (பாடல்களை) இயற்றியுள்ளார். பங்காருகாமாட்சியம்மன் இவருக்கு காட்சி கொடுத்ததாக வரலாறும் உண்டு. இவர் இயற்றிய கீர்தனைகளில் மிகவும் புகழ்பெற்றது “கமலாம்பாள்நவாவரணம்” என்று திருவாரூர் அம்மன் கமலாம்பாளை பற்றி பாடிய பாடலாகும்.




3. நவநீத கிருஷ்ணன் கோவில்



 மூலவராக நவநீத கிருஷ்ணன், ருக்மிணி சத்யபாமாவுடன் அருள்பாலிக்கிறார். காமாட்சியம்மன் கோவில் வழியாகவே இந்த கோவிலுக்கு வரலாம். 

நவநீத சேவை





 தஞ்சாவூரில் உள்ள நீலகேபெருமாள்,(திவ்யதேசம்) நரசிம்மபெருமாள், (திவ்யதேசம்)மணிக்குன்னபெருமாள், (திவ்யதேசம்) கல்யாணவெங்கடேசபெருமாள், மேலராஜவீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் ஜனார்தனபெருமாள், கரந்தை யாதவ கண்ணன் கோவில், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்குவீதி கலியுகவெங்கடேச பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமபெருமாள்,  மானம்புசாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேசபெருமாள், மேல்அரங்க ரெங்கநாதபெருமாள், படித்துறை வெங்கடேசபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள், என்ற 15 கோவில் பெருமாள்களும் ஒன்றாக சேவை சாதிப்பதே நவநீத சேவை என்படுகிறது. இந்த 15 ஆலயங்களில் மூன்று திவ்யதேசங்களாகும்.                            

1805 –ல் இரண்டாம் சரபோஜி மன்னர் திருப்பணிசெய்ததாக கல்வெட்டு கூறுகிறது. 

4.பிரதாப வீர ஆஞ்சநேயர்.



வரலாறு




மராட்டிய மன்னர் பிரதாப சிம்மனால் இந்த கோவில் இந்த தெரு மூலையில் கட்டப்பட்டது என்ற குறிப்பு அரண்மணை நூலகத்தில் உள்ள நூலில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த ஆஞ்சநேயரை, பிரதாப சிம்மன் இஷ்ட தெய்வமாக வணங்கினார். இக்கோவிலை கட்ட ஒரு ஸ்தபதி நியமிக்கப்படுகிறார். அந்த ஸ்தபதிக்கு ஆஞ்சநேயர் பல வடிவத்தில் இருக்கும் போது எந்த வடிவில் இறைவன் சிலையை உருவாக்குவது என்று ஒரு குழப்பம் ஏற்படுகிறது. உடனே ஸ்ரீராமரை மனமுருக வேண்டுகிறார்.






 ஸ்ரீராமர் கனவில் வந்து சஞ்சீவி மலையை தூக்கிவரும் வடிவமே தனக்கு பிடித்ததாக கூறுகிறார். வலது காலை முன்பக்கம் எடுத்து வைப்பது போல் காலை தூூக்கிவைத்து கையில் சஞ்சீவி மலையை தூக்கி வருவது போன்று மூலவர் ஆஞ்சநேயர் உள்ளார்.  எங்கள் தரிசனமன்று வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருந்ததால் மூலவர் தரிசனம் நன்கு கிடைத்தது எங்களுக்கு.

5. காசிவிஸ்வநாதர்.











மேலவீதியில இரண்டு காசிவிஸ்வநாதர் கோவில்கள் உள்ளன. ஒரு கோவில் கிழக்கு முகமாகவும், மற்றொரு கோவில் மேற்;கு முகமாக அமைந்துள்ளன. மேற்;குமுக  கோவில் ஐய்யங்குளம் கோவில் என்றும் அழைக்கின்றனர். கோபுரம், கொடிமரம், பலிபீடம், முன் மண்டபம், விமானம், ஒருபிரகாரம் என்று அமைந்துள்ளது. பிரகாரத்தில் விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, கஜலெஷ்மி, துர்கை, சண்டிகேஷ்வரர் என்று சன்னதிகள் அமைந்துள்ளன.

6. காசி விஸ்வநாதர் (மேற்கு முக கோவில்)

 அய்யன்குளம் அருகில் உள்ள மிக சிறிய கோவில். சிவன் மற்றும் அம்மன் சன்னதி பிரதானமாக உள்ள மிக சிறிய கோவில்.

7. கொங்கணேஸ்வரர் கோவில்




கொங்கணர் என்ற சித்தர் அருளியது இந்த ஆலயம். இதனால் இத்தல அய்யன் கொங்கணேஸ்வரர் என்ற பெயர் பெற்றார். இறைவி ஞானாம்பிகை, உலக மக்கள் அனைவரும் ஞானம் பெற வேண்டி  ஞானாம்பிகை என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

வரலாறு

 


கொங்கணர் என்ற சித்தர்  ஈசனிடம் அவர் வேண்டியதை பெற்று அவரின் ஜடாமுடியில் மறைத்து வைத்துக்கொள்ளும் வல்லமை பெற்றிருந்தார். இந்த திறன் காரணமாக அந்த சிவனையே தன் ஜடாமுடியில் வைத்துக்கொண்டார். இதனால் பூமியில் மக்களின் இயக்கம் நின்றது. உலகத்தை இயக்க தேவர்கள் புலியை கொண்டு கொங்கணரின் தவம் கலைக்க முயற்சித்தனர். சித்தர் இந்த புலியையும் அவரது ஜடையில் மறைத்து கொண்டார். பின் தேவர்கள் ஜோதியை ஏற்படுத்தி சிவனை பூஜித்தனர். அந்த அக்னியில் இருந்து சிவபெருமான் தோன்றி பூவுலகை காக்கலானார். இவ்வாறு ஜோதிரூபமாக தோன்றிய சிவபெருமான் இத்தலத்திலேயே இருந்து பூவுலக மக்களுக்கு அருள் பாலிக்கிறார். மக்கள் ஞானம் பெற வேண்டி அம்மனும் இத்தலத்திற்க்கு வந்து ஈசனை பூஜித்தார். சிவனும் அம்பிகையும் அருவமாக வீற்றிருக்கும் தலம். தஞ்சாவூசெல்பவர்கள் தவறாமல் வந்து இத்தல ஈசனையும் உமையையும் வணங்கி இறைஅருள் பெறுங்கள். 




சிறப்பு 1.

சிவபெருமான்மீது மிகுந்த பக்திகொண்ட தம்பதியர் ஒருவருக்கு, குழந்தை இல்லாமல் இருந்தனர். இவர்கள் அய்யன் குளத்தில் (கொங்கணர் தீரத்;தம் என்பதே பின்னாளில் அய்யன்குளமானது)  நீராட சென்ற நேரம், அங்கு ஒரு பெண்குழந்தையை கண்டெடுத்து வளர்த்து வந்தனர். பருவவயதை எட்டியவுடன் இந்த பெண்குழந்தை சிவபெருமானையே மணப்பேன் என்று கூறி சிவனை அடைந்ததாக ஒருசம்பவம் இந்த கோவில் நடந்ததாக தல வரலாறில் குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தனின் வேண்டுதலுக்காக அம்பிகையே மகளாக அவர்களிடம் வளர்ந்துள்ளாள். இக்கோவிலில் கல்யாணவுற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.  




சிறப்பு-2

கோவில் பார்பதற்கு சிறயதாக இருந்தாலும் உள்ளே மிக பெரியதாக உள்ளது. கொங்கணருக்கு சிலைவடித்து பூஜிக்கப்படுகிறது. மண்டபத்தில் திரியம்பகேஷ்வர் திரிபுரசுந்தரி, நால்வர், மணிக்கவாசகர், பைரவர், சனீஸ்வரர் சிலைகள் உள்ளன. பிரகாரத்தில், யோக விநாயகர், வள்ளிதெய்வானை சமேத சுப்ரமணியர், விஸ்வநாதர், விசாலாட்சி, பஞ்சலிங்கம், ஏகலிங்கம், சதாசிவலிங்கம் சுந்தரேஸ்வர் மீனாட்சி சன்னதிகள் தொடர்ந்தார் போல் உள்ளன. கொங்கணேஸ்வர் நேர்பின்புறம் ஜுரகஸே;வர் சன்னிதியும் எதிர்ல் நந்தி தேவரும் உள்ளனர். 

சுவற்றில் எழுதப்பட்டிருந்த தேவாரம் எனக்கு தெரிந்ததாக இருந்ததால் நான் ஏகாந்தமாக பாடிக்கொண்டிருந்தேன். யாரும் இல்லாத அமைதி சுழ்நிலையில் பக்தியின் பரவசத்தை உணரமுடிந்தது. விரைவில் கும்பாபிஷேகத்தை எதிர்கொள்ளும் நிலையில் கோவில் இருந்தது. 

8. ஸ்ரீ ஓமளி விநாயகர். 





கோவில் மிக புதியதாக தோற்றமளிக்கிறது. நாங்கள் இந்த விநாயகரை வணங்கி விட்டு, இந்த கோவில் புதிதாக கட்டப்பட்டதா என்று கேட்டு அறிந்து கொண்டோம்.  இதுவும் மற்ற கோவில்கள் போன்று பிரதாப சிம்மர் மன்னர் காலத்தில் கட்டப்பட்டதே என்பதையறிந்தோம். பின்பு நான் கவனித்தபிறகுதான் தெரிந்தது. முதலாவதாக இந்த விநாயகர் கோவில் இருந்தது. இந்த வீதியின் முடிவில் ஆஞ்சநேயர் கோவில் இருந்தது. இதை வைத்தே நான் விநாயகரில் ஆரம்பித்து ஆஞ்சநேயரில் முடிவு பெறுகிறது என்று முதலில் எழுதினேன். கச்சேரிகளில் ஆஞ்சநேயர் துதி பாடியும் நிறைவு செய்வர். ஓம் அழகிய விநாயகர் என்று தழிழிலும் பலகையில் பெயர் எழுதியுள்ளனர்.

9. சங்கரநாராயணன் கோவில்




அமைவிடம்.

தஞ்ஜாவூர் பெரிய கோவில் மதிலில் இருந்து (பூங்காவிற்க்கு) எதிரில்  மேலவீதியில் இடதுபுறத்தில் முதலில் அமைந்துள்ளது இந்த கோவில். இந்த கோவில் அமையவேண்டிய இடத்தைகூட சிவபெருமானே நிர்ணயம் செய்ததாக இந்த கோவில் வரலாறு கூறுகிறது.

சோழர்கால கோவில் 

தஞ்ஜையை ஆட்சி செய்த சோழர்களில் பீமசோழன் என்ற அரசர் கட்டியதே இந்த கோவில்.  இந்த கோவில் கட்டிய காலம் சோழர்கள் கட்டியதன் மூலம் அறியமுடிகிறது.


கோவில் புராணம்.

பீமசோழனின் மனைவி குழந்தை பாக்கியம் இல்லாத தனக்கு அருள்புரிய ஈசனிடம் வேண்டுகிறார். சிவபெருமான் அவள் கனவில் தோன்றி கொங்கணேஸ்வரருக்கும், பிரகதீஸ்வரருக்கும் இடையில் தான் லிங்க ருபமாக வீற்றிருப்பதாக தெரிவித்து, சிவன், விஷ்ணு இருவருக்குமான கோவில் அமைக்க உத்தரவிடுகிறார். அரசி இந்த கனவை அரசனிடம் தெரிவிக்கிறார். இதை கேட்டு வீரர்களுடன் அந்த இடத்திற்;கு சென்று அங்கு லிங்கம் கிடைத்ததை கண்டு அதிசயிக்கிறார். பின் அசரீரியாக குரல் கொடுத்த இறைவன் அங்குள்ள கிணற்றில் குப்த கங்கை உள்ளதாக குறிப்பிட்டு, விசாகநட்சத்திரம் மற்றும் சோமவாரத்தில் நீராடினால் குழந்தை பேறு கிடைக்கும் என்கிறார். பிரதான மூலவராக  கிடைத்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சங்கரன் என்றும் பின் பிரகாரத்தில் சங்கரநாராயணனை பிரதிஷ்டை செய்து உடன் ஸ்ரீமகாலெஷ்மிமையும், பாரர்வதியையும் வடித்து ஆலயம் எழுப்புகிறார் பீமசோழ அரசர். இந்த கோவில் பார்பதற்க்கு சிறியதாக இருந்தாலும் கோவில் உள்ளே நல்ல பெரிய கோவிலாக உள்ளது.






எங்கள் பயணம்

இரண்டரை மணி நேரம் நன்கு 9பது கோவில்களையும் தரிசனம் (காலை நேரம் அற்புதம்) செய்து, பின் எங்கள் கிராமத்திற்கு சென்று நல்லிச்சேரி பாதையில் இறங்கி இயற்கையை நன்கு ரசித்தப்படி சென்றோம். மாலை எங்கள் கிராமத்து கோவில்களான வேணுகோபாலசுவாமி மற்றும் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புனாதரையும் தரிசனம் செய்து , மீண்டும்  பிரதான சாலைக்கு நடந்துவந்து, அங்கிருந்து தஞ்ஜாவூர், தஞ்ஜாவூரில் இருந்து திருச்சி, திருச்சியில்லிருந்து ஐராவத் பேருந்தில் சுபமாக பெங்களுரை அடைந்தோம்.    

குறிப்பு – “விஜயராகவ நாயக்கர்” என்ற தலைபில் "வேணுகோபலசுவாமி" பற்றிய  Blog எழுதியுள்ளேன்.  








WAY TO NALLICHERRY

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...