ரிஷிகேஷ்.
கங்கையாற்றங்கரையில் அமைந்துள்ள ரிஷிகேஷ் தேவபூமி, புண்னிய பூமி என்று அழைக்கப்படுகிறது. ரிஷிகேஷ் பல ஆசிரமங்களுக்கும், யோகவகுப்புகளுக்கும், மலையேற்றத்திறக்கும், படகுசவாரிமையங்களுக்கும், புகழ் பெற்று விளங்குகிறது.
லஷ்மண் ஜுலா.
ராமயணத்தில் ராமர் ராவணன் வதம் செய்தபிறகு இங்கு நீராடியதாக கூறப்படுகிறது. இலக்குவன், கயிற்றால் பாலம் அமைத்து இந்த கங்கை நதியை கடந்தார் என்று ராமாயணம் கூறுகிறது. 1889-ல் மரத்தினால்ஆன பாலம் கட்டினர். 1924 ஆம் ஆண்டு, இரும்பினால் 450 அடி உயரத்தில் தொங்குபாலம் அமைக்கப்பட்டது.
பயண அனுபவம்.
டிராவலர்களுடன் (Travels) சென்றதால் சுற்றிபார்க 6 மணிநேரம் தான் வழங்கினர். குறைந்தது மூன்று நாட்கள் தேவை. 1967-ல் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற ஓம்காரணந்தா ஆசிரமம் நாங்கள் உள்ளே செல்லவும் பார்வையாளர்கள் நேரம் முடிந்து விட்டது என்று கதவடைத்துவிட்டனர்.
நாங்கள பார்த்த இடங்களின் புகைபடம் மற்றும் காணொளி. (தரிசனநாள் 29.9.2022)
பார்க்கவேண்டிய இடங்கள்.
1.ராம் ஜுலா
2. லஷ்மண் ஜுலா.
3.திரிவேணிமலை.
4.ராஜாஜி தேசிய பூங்கா.
4.நீல்கந்த் மகாதேவ் கோவில்.
No comments:
Post a Comment