கேதார்நாத்

 கேதார்நாத். (September -2022)

அமைவிடம்.

உத்ரகாண்ட் மாநிலத்தில், ருத்ரபிரயாக் மாவட்டத்தில், மந்தாகினி ஆற்றங்கரையில், கார்வால் மலை தொடரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவில். 

சிறப்புசெய்திகள்

மிகப்பழமையானது. (ஆயிரமாண்டுகளுக்கு மேல்). 

வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே தரிசனம் செய்யமுடியும். 6மாதங்கள் பனியால் மூடியிருக்கும்.

தேவாரபாடல்பெற்ற தலம்.

பாண்டவர்கள் கட்டிய கோவில்.

ஆதிசங்கரரால் புணரமைப்பு செய்யப்பட்டது.

உத்ரகாண்ட் மாநிலத்தின் சார்தாம் யாத்திரையில் ஒன்று.

2013-ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கோவில் வளாகம் பெரும் பாதிப்புக்குள்ளாகாதது ஒரு அதிசயமே.  

பயண அனுபவம்.


ராம்பூர் என்ற இடத்தில் இரவு தங்கி மறுநாள் அதிகாலை கேதார்நாத் கிளம்பினோம். (ஹெலிகாப்டரில் பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்தோம்;).  கோவிலுக்கு செல்ல நான்கு வகையில் பிரயாணிக்கலாம், குதிரை, டோலி, ஹெலிகாப்டர் மற்றும் நடைப்பயணம். நடைப்பயணம் மிக கடினமாக இருந்தாலும். பலர் நடந்தே செல்கின்றனர். குதிரை மற்றும் டோலியில் செல்ல முதல்நாளே முன்பதிவு செய்ய வேண்டும். ஐந்திற்க்கு மேற்பட்ட ஹெலிபேடுகள் (Helipad) உள்ளன. குப்த காசியில் தங்குவதற்;கு சற்று வசதியுள்ள தங்கும்விடுதிகள் கிடைக்கின்றன. பிற இடங்களில் விடுதியில் வசதிக்குறைவு சற்று அதிகமாகவே உள்ளது. வானிலை மட்டுமே நமது தரிசனத்தை முடிவு செய்யமுடியும். எங்களுக்கு காலை 9மணிக்கு, பிரயாண நேரம்ஒதுக்கப்பட்டிருந்தது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர்சேவை 4 மணிநேரத்திற்குமேல்நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அன்றைய வானிலையில் மாற்றம் ஏற்படுவது கடினம் என்று நாங்கள் மீண்டும் தங்கும்விடுதிக்கு திரும்பிவிட்டோம். நாங்கள் அறைகதவை திறந்து உள்ளே வரவும், ஹெலிகாப்டர் சேவை துவங்கிவிட்டது. எங்களுடன் வந்தவர்கள் மீண்டும் ஹெலிபேட் திரும்பினர். 14 கி.மீ. மலை மேல் சென்று தரிசனம் செய்து உடன் திரும்புவதுதான் நன்று. இரவு தங்குவது என்பது மிகவும் கடினமானது. குளிர் மிக மிக அதிகமாக இருக்கும். (டென்டில் (tent) தான் தங்க வேண்டும்) பொதுகழிவறை மட்டுமே இருக்கும். இதை மனதில் கருதி, நாங்கள் மீண்டும் செல்வதை தவிர்த்தோம். ஹெலிகாப்டர் சேவை நிறுவனத்தினர், பயணத்தை மறுபதிவு செய்ய ஒருநாள் காலஅவகாசம் கொடுகின்றனர். நாங்கள் டிராவலர்களுடன் (Travels) சென்றதால் கூடுதலாக நாட்கள் ஒதுக்க முடியவில்லை. எங்களை போன்று அந்த நாளை தவிர்த்தவர்கள் மறுநாள் குதிரை அல்லது டோலியை பயன்படுத்தி சென்றனர். நாங்கள் இந்த கடின பயணத்தை தவிர்தோம். கேதார்நாத் செல்பவர்கள் குறைந்தது மூன்று நாட்கள் ஒதுக்க வேண்டும். அப்பொழுதே நமது தரிசனத்தை உறுதிசெய்யமுடியும்.

வரலாறு.

பாண்டவர்கள் சிவபெருமான் நோக்கி இமயமலை தொடரில், தவம் இருக்கின்றனர். ஒருநாள் ஒரு பெரிய எருமை வருகிறது. அதற்கு வழிவிடுகின்றனர். பீமனுக்கு இதுதான் சிவனோ என்ற சந்தேகம்வர, அவர் மாட்டை பிடிக்க முயலும் நேரத்தில், எருமை மிகவேகமாக ஓடுகிறது. பீமன் மாட்டின் வாலை பிடித்து விடுகிறார். எருமை மலையினுள் புகுந்து கல்லாக மாறுகிறது. அந்த எருமையின் வால், முதுகு, அதன் பின்பகுதியே கேதார்நாத் சிவன். மாட்டின் முன்பகுதிதான் நேபாளநாட்டு பசுபதீஸ்வரர், என்றும் சொல்பவர்கள் உண்டு. (தொண்டரஞ்சு களிறு மடக்கிச் சுரும்பார்மலர் - தேவாரம் - ஞானசம்மந்தர்)


No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...