யமுனோத்ரி. 23.9,2022- visited Date.
அமைவிடம்.
ஊத்ரகாண்ட் மாநிலத்தில் உத்ரகாசி மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த இடம். கார்வால் என்ற இமயமலைத்தொடரில் அமைந்துள்ளது இந்த யமுனோத்ரி.
கடல் மட்டத்தில் இருந்து 3291 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
சார்தாம் யாத்திரையில் முதலில் பார்க்ககூடிய இடம் இந்த யமுனோத்ரியாகும்.
பயணஅனுபவம்.
நாங்கள் ஹரித்வாரில் இருந்து 12 மணி நேரத்திற்க்கு மேல் பேருந்தில் பயணித்து, சயான்சட்டி என்ற இடத்தை அடைந்தோம். இரவு இங்கு தங்கி அதிகாலை யமுனோத்ரி பயணித்தோம். யமுனோத்திரியில் அவரவர் விருப்பத்திற்க்கு ஏற்ப, குதிரை மற்றும் டோலி அல்லது நடை பயணத்தை தேர்ந்தெடுத்தோம். இந்த மூன்று வழி மட்டுமே உள்ளது, மேலே செல்ல. நான்கு அடி அகலம் கொண்ட மிக குறுகலான பாதை, இதில் நடப்பவர்கள் குதிரை மற்றும் டோலியில் பயணிப்பவர்கள் மட்டும் அல்லாது இரு வழி பாதையாகவும் இருந்தது.(போக,வர) மழை மற்றும் மலையில் இருந்து வழியும் நீர் ஒருபுறம் என்றால், செல்லும் பாதை முழுவதும் குதிரையின் சாணம் வேறிருக்கும். உறவினருடன் சென்றாலும், நண்பர்களுடன் சென்றாலும் ஒவ்வொருவரும் தனித்தனியாக கையில் பணம், தண்ணீர் குப்பி, குடை அல்லது மழையாடை அனைத்துதும் வைத்திருக்க வேண்டும். சேர்ந்து செல்ல முடியாது. குதிரை மற்றும் டோலி தூக்கி செல்பவர்களில் நேர வேறுபாடு வித்யதசப்படும். சில நேரங்களில் பல மணி நேர வித்யாசம் கூட வரலாம். நான் மேலே சென்ற போது அதிக மழை பொழிவு இருந்தது. மழை அங்கி பயன்படுத்தியும் முழுவதுமாக நனைந்துவிட்டேன். மூக்குகண்ணாடியை வேறு என்னால் அணிந்து கொள்ள முடியவில்லை. குளிரில் உடலில் நடுக்கம் வேறு வந்துவிட்டது. என்னை டோலியில் தூக்கி வந்தவர்கள் வயதான தாயை அழைத்து செல்வது போன்று கயை பிடித்து அழைத்து சென்றனர்.
நாங்கள் பார்த்த இடங்களின் புகைப்படம் மற்றும் காணொளிகள்..
போகும் வழி பாதை காணொளி.
;.
No comments:
Post a Comment