ஜோசிமட்

 ஜோசிமட்.





உத்ரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள, ஒரு நரசிங்கர் கோவில். 108 திவ்யதேசங்களில் ஒன்று. கடல் மட்டத்தில் இருந்து 6150 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பத்ரிநாராணன் பனி படர்ந்த ஆறு மாதத்திற்க்கு இங்கு தங்கிதான் மக்களுக்கு அருள்புரிகிறார். பனிபடர்ந்த 6 மாதங்களுக்கு, பத்ரிநாராயணனை இங்குவைத்து, பின்பு பத்ரிநாத்துக்கு கொண்டு செல்வதை ஒரு திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.


ஆதிசங்கரர்  8 ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்த நான்கு மடங்களில் இதுவும் ஒன்றாகும். தௌலிகங்கா மற்றும் அலகநந்தா சங்கமத்தில்  இந்த ஜோசிமட் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையான கல்பவிருட்ச மரம் உள்ளது. இதன் கீழ் அமர்ந்தே ஆதிசங்கரர் தியானம் செய்ததாக கூறப்படுகிறது. 

பார்கவேண்டிய பிறஇடங்கள்.

நந்தாதேவி நேஷனல் பார்க். (இணையத்தில் சென்று பாருங்கள் அற்புதமான பூ பூங்கா).  கல்பவிருட்ஷா   ஆன்மீக சுற்றுலா என்பதால் நாங்கள் கோவிலுக்கு மட்டுமே சென்றோம். 

பயணஅனுபவம்.


அற்புதமான வானிலை காரணமாக எங்கள் தரிசனம் சிறப்புற்றது. எங்கள் தரிசனத்தின்போது 50க்கு மேற்பட்ட ரஷ்ய நாட்டு மக்கள் வந்திருந்தனர். அவர்கள் மிக அற்புதமாக சமஸ்கிருத ஸ்லோகங்களை ஓதினர்.

தரிசனநாள் - செப்டம்பர் 28- 2022.


Our Second time worship Photos   (9.10.2024)








Sankarachariyar Temple.



No comments:

Post a Comment

சப்தமங்கைதலங்கள்.

  சப்தமங்கைதலங்கள். (தரிசனம்-13.7.2025)  அமைவிடம் கும்பகோணம் - தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள ஐய்யம்பேட்டை என்ற ஊரை சுற்றி அமைந்துள்ளது. ச...