வாரணாசி(எ)காசி.
காசியின் பல சிறப்புகளில் சில.
1.இந்து மதத்தின் ஆன்மீக தலைநகரம்.
2. கி.மு.1800 முதலே உள்ள பழமையான நகரம். (பல நூற்றாண்டுகளுக்கு மேல் நகரமாகவே உள்ளது.) தொல்லியல் ஆய்வறிக்கைளும் கூறுகிறது.
3. 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று.
4. கல்விக்கு ஏற்ற இடமாக உள்ளது. (பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்).
5 மூன்று உலகத்திற்க்கும் நிகரான நகரம். (ஸ்கந்தபுராண கூற்று).
6. 23வது தீர்தங்கர் பாசுவநாதர் பிறந்த ஊர். (சமணமதம்)
7. இந்தூர் நகர ராணி 1785-ல் அண்ணபூரணி கோவிலை புனரமைப்பு செய்தார்.
8. 1835-ல் சீக்கிய மன்னர், 1000 கிலோ தங்கம் கோவிலுக்கு வழங்கினார்.
9. 4கால பூஜை நடைபெறுகிறது.
10. மோட்சம் தரும் இடங்களில் ஒன்று. (கருடபுராணம் கூற்று).
11. 80- மேற்பட்ட படித்துறைகள் உள்ளன.
பாவம் தீரும் என்ற எண்ணம் உருவான கதை.
சகரன் என்ற அரசன். அஸ்வமேத யாகம் செய்து. குதிரையை அனுப்பினான். தேவர்கள், அரசனின் யாகம் முடிந்து தேவலோக பதவியை அடைந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்து, அந்த குதிரையை கபிலர் என்ற முனிவரின் ஆசிரமதில் கொண்டுபோய் கட்டினர். அரசனின் மகன்கள் இருவரும். முனிவரின் ஆசிரமத்தில் இவர்களின் குதிரை இருப்பதை கண்டு , முனிவரை துன்புறுத்தினர். முனிவர், இவர்களின் இடையூருகளை கண்டு, இவர்களை பார்வையால் எரித்தார். அரசன், மகன்கள் வராததை கண்டு, பேரனுக்கு பட்டம் சூட்டிவிட்டு இறைவனடி சேர்ந்தார். சகரன் மன்னனின் பேரன்கள் அம்சுமான் அசமஞ்சன் இருவரும், அவர்களின் தந்தையின் அஸ்தியை, கங்கையில் கரைத்து, அவர்களுக்கு முக்தி அளிக்கமுடியாமல் இருந்த நேரத்தில், அவர்களின் மகன் பகீரதன், தவத்தின் விடாமுயற்சியாலும், சிவபெருமானின் அருளாலும், கங்கையை பூமிக்கு கொண்டுவந்தார். மூதாதையர்களின் முக்திக்கு வழியிட்டார். பகீரதனின் அருளால் நாமும் நமது பாவங்களில் இருந்து விடுபட்டும், இறையருளும் பெற்று வருகிறோம்.
விஸ்வநாதர் கோவில் தற்சமயம் சிறப்பாக இருந்தாலும் புகைபடம் எடுப்பதற்க்கு அனுமதி கிடையாது. தரிசனநாள்-11 மற்றும்17.9.2022.
நாங்கள் பார்த இடங்களின் புகைபடம் மற்றும் காணொளி.
காசிராஜன் அரன்மணை. (photos source from wikepedia)
காலபைரவர் கோவில்
குமரகுருபரர் மடம்.
காசிநகரின் கடைவீதி.
இந்து பனாரஸ் பல்கலைகழக வளாக விஸ்வநாதர் ஆலையம்.
கேதார்காட்.
No comments:
Post a Comment